قۇرئان كەرىم مەنىلىرىنىڭ تەرجىمىسى - قۇرئان كەرىمنىڭ تامىلىيچە تەرجىمىسىنى ئابدۇل ھەمىيد باقەۋىي قىلغان.

بەت نومۇرى:close

external-link copy
18 : 23

وَاَنْزَلْنَا مِنَ السَّمَآءِ مَآءً بِقَدَرٍ فَاَسْكَنّٰهُ فِی الْاَرْضِ ۖۗ— وَاِنَّا عَلٰی ذَهَابٍ بِهٖ لَقٰدِرُوْنَ ۟ۚ

18. மேகத்திலிருந்து (நம்) திட்டப்படியே மழையை பொழியச் செய்கிறோம். அதைப் பூமியில் தங்கும் படியும் செய்கிறோம். அதைப் (பூமியிலிருந்து) போக்கிவிடவும் நிச்சயமாக நாம் ஆற்றல் பெற்றுள்ளோம். info
التفاسير:

external-link copy
19 : 23

فَاَنْشَاْنَا لَكُمْ بِهٖ جَنّٰتٍ مِّنْ نَّخِیْلٍ وَّاَعْنَابٍ ۘ— لَكُمْ فِیْهَا فَوَاكِهُ كَثِیْرَةٌ وَّمِنْهَا تَاْكُلُوْنَ ۟ۙ

19. அதைக் கொண்டு பேரீச்சை, திராட்சை (ஆகிய) தோப்புகளையும் உங்களுக்காக நாம் உற்பத்தி செய்கிறோம். அவற்றில் உங்களுக்கு வேண்டிய பல கனிவர்க்கங்கள் இருக்கின்றன. அவற்றில் (பலவற்றை) நீங்கள் புசிக்கிறீர்கள். info
التفاسير:

external-link copy
20 : 23

وَشَجَرَةً تَخْرُجُ مِنْ طُوْرِ سَیْنَآءَ تَنْۢبُتُ بِالدُّهْنِ وَصِبْغٍ لِّلْاٰكِلِیْنَ ۟

20. ‘தூர்ஸீனாய்' மலையில் முளைக்கின்ற (ஜைத்தூன் என்னும் ஒலிவ) மரத்தையும் (நாம் உற்பத்தி செய்கிறோம்). அது எண்ணையையும் புசிப்பவர்களுக்கு ஒரு சுவையையும் (குழம்பையும்) தருகிறது. info
التفاسير:

external-link copy
21 : 23

وَاِنَّ لَكُمْ فِی الْاَنْعَامِ لَعِبْرَةً ؕ— نُسْقِیْكُمْ مِّمَّا فِیْ بُطُوْنِهَا وَلَكُمْ فِیْهَا مَنَافِعُ كَثِیْرَةٌ وَّمِنْهَا تَاْكُلُوْنَ ۟ۙ

21. நிச்சயமாக ஆடு, மாடு, ஒட்டகம் ஆகியவற்றில் உங்களுக்கு ஒரு படிப்பினை இருக்கிறது. அவற்றின் மடியில் இருந்து (பாலை) நாம் உங்களுக்குப் புகட்டுகிறோம். இன்னும், உங்களுக்கு அவற்றில் அநேக பயன்களும் இருக்கின்றன. அவற்றில் சிலவற்றை நீங்கள் புசிக்கிறீர்கள். info
التفاسير:

external-link copy
22 : 23

وَعَلَیْهَا وَعَلَی الْفُلْكِ تُحْمَلُوْنَ ۟۠

22. அவற்றின் மீதும், கப்பல்களின் மீதும் நீங்கள் சுமந்து செல்லப்படுகிறீர்கள். info
التفاسير:

external-link copy
23 : 23

وَلَقَدْ اَرْسَلْنَا نُوْحًا اِلٰی قَوْمِهٖ فَقَالَ یٰقَوْمِ اعْبُدُوا اللّٰهَ مَا لَكُمْ مِّنْ اِلٰهٍ غَیْرُهٗ ؕ— اَفَلَا تَتَّقُوْنَ ۟

23. நிச்சயமாக நாம் ‘‘நூஹ்' (நபியை) நம் தூதராக அவருடைய மக்களிடம் அனுப்பி வைத்தோம். அவர் (அவர்களை நோக்கி) ‘‘ என் மக்களே! அல்லாஹ் ஒருவனையே நீங்கள் வணங்குங்கள். அவனைத் தவிர வேறு இறைவன் உங்களுக்கு இல்லவே இல்லை. அவனுக்கு நீங்கள் பயப்பட வேண்டாமா?'' என்று கூறினார். info
التفاسير:

external-link copy
24 : 23

فَقَالَ الْمَلَؤُا الَّذِیْنَ كَفَرُوْا مِنْ قَوْمِهٖ مَا هٰذَاۤ اِلَّا بَشَرٌ مِّثْلُكُمْ ۙ— یُرِیْدُ اَنْ یَّتَفَضَّلَ عَلَیْكُمْ ؕ— وَلَوْ شَآءَ اللّٰهُ لَاَنْزَلَ مَلٰٓىِٕكَةً ۖۚ— مَّا سَمِعْنَا بِهٰذَا فِیْۤ اٰبَآىِٕنَا الْاَوَّلِیْنَ ۟ۚۖ

24. அவரை நிராகரித்துவிட்ட அவருடைய மக்களில் உள்ள தலைவர்கள் (தமது மக்களுக்கு நூஹ் நபியைச் சுட்டிக் காண்பித்து) இவர் உங்களைப் போன்ற ஒரு மனிதரே தவிர வேறில்லை. எனினும், அவர் உங்கள் மீது மேலான பதவியை வகிக்கவே நாடுகிறார். (மெய்யாகவே) அல்லாஹ் (நம்மிடம் ஒரு தூதரை அனுப்ப) நாடியிருந்தால் வானவர்களையே அனுப்பிவைத்திருப்பான். முன்னுள்ள எங்கள் மூதாதைகளிடம் இத்தகைய விஷயத்தை நாங்கள் கேள்விப்பட்டதே இல்லை என்றும், info
التفاسير:

external-link copy
25 : 23

اِنْ هُوَ اِلَّا رَجُلٌۢ بِهٖ جِنَّةٌ فَتَرَبَّصُوْا بِهٖ حَتّٰی حِیْنٍ ۟

25. ‘‘ இவர் ஒரு பைத்தியக்காரராகவே தவிர வேறில்லை. ஆகவே, இவர் விஷயத்தில் (இவர் கூறுவது நிகழும் வரை) சிறிது காலம் பொறுத்திருந்து பாருங்கள்'' என்றும் கூறினார்கள். info
التفاسير:

external-link copy
26 : 23

قَالَ رَبِّ انْصُرْنِیْ بِمَا كَذَّبُوْنِ ۟

26. (அதற்கு நூஹ் நபி) ‘‘என் இறைவனே! இவர்கள் என்னைப் பொய்யாக்கி விட்டார்கள். ஆகவே, நீ எனக்கு உதவி செய்'' என்று பிரார்த்தித்தார். info
التفاسير:

external-link copy
27 : 23

فَاَوْحَیْنَاۤ اِلَیْهِ اَنِ اصْنَعِ الْفُلْكَ بِاَعْیُنِنَا وَوَحْیِنَا فَاِذَا جَآءَ اَمْرُنَا وَفَارَ التَّنُّوْرُ ۙ— فَاسْلُكْ فِیْهَا مِنْ كُلٍّ زَوْجَیْنِ اثْنَیْنِ وَاَهْلَكَ اِلَّا مَنْ سَبَقَ عَلَیْهِ الْقَوْلُ مِنْهُمْ ۚ— وَلَا تُخَاطِبْنِیْ فِی الَّذِیْنَ ظَلَمُوْا ۚ— اِنَّهُمْ مُّغْرَقُوْنَ ۟

27. அதற்கு நாம் அவரை நோக்கி நீர் ‘‘நாம் அறிவிக்கின்றபடி நம் கண்முன் ஒரு கப்பலைச் செய்வீராக. நம் உத்தரவு ஏற்பட்டு அடுப்புப்பொங்க ஆரம்பித்தால் (ஒவ்வோர் உயிர்ப் பிராணிகளிலும்) ஆண், பெண் இரண்டிரண்டு சேர்ந்த ஜோடியையும், உமது குடும்பத்தினரையும் நீர் அதில் ஏற்றிக் கொள்வீராக. ஆயினும், எவன் மீது நம் தண்டனை விதிக்கப்பட்டு விட்டதோ அவனைத் தவிர. (ஏனென்றால்,) அநியாயம் செய்பவ(ர் உங்கள் குடும்பத்தவராயினும் அவ)ரைப் பற்றி நீர் என்னிடம் ஏதும் (சிபாரிசாகப்) பேசாதீர். நிச்சயமாக அவர்கள் (வெள்ளப் பிரளயத்தில்) மூழ்கடிக்கப்பட்டு விடுவார்கள்'' என்று வஹ்யி அறிவித்தோம். info
التفاسير: