Kur'an-ı Kerim meal tercümesi - Tamilce Tercüme - Ömer Şerif

Sayfa numarası:close

external-link copy
69 : 6

وَمَا عَلَی الَّذِیْنَ یَتَّقُوْنَ مِنْ حِسَابِهِمْ مِّنْ شَیْءٍ وَّلٰكِنْ ذِكْرٰی لَعَلَّهُمْ یَتَّقُوْنَ ۟

இன்னும் (வீண் விவாதத்தில் மூழ்கும்) அவர்களுடைய (செயல்களின்) கணக்கிலிருந்து எதுவும் அல்லாஹ்வை அஞ்சுபவர்கள் மீதில்லை. எனினும், அ(வ்வாறு கேலி செய்ப)வர்கள் தவிர்ந்து கொள்வதற்காக உபதேசித்தல் (கடமையாகும்). info
التفاسير:

external-link copy
70 : 6

وَذَرِ الَّذِیْنَ اتَّخَذُوْا دِیْنَهُمْ لَعِبًا وَّلَهْوًا وَّغَرَّتْهُمُ الْحَیٰوةُ الدُّنْیَا وَذَكِّرْ بِهٖۤ اَنْ تُبْسَلَ نَفْسٌ بِمَا كَسَبَتْ ۖۗ— لَیْسَ لَهَا مِنْ دُوْنِ اللّٰهِ وَلِیٌّ وَّلَا شَفِیْعٌ ۚ— وَاِنْ تَعْدِلْ كُلَّ عَدْلٍ لَّا یُؤْخَذْ مِنْهَا ؕ— اُولٰٓىِٕكَ الَّذِیْنَ اُبْسِلُوْا بِمَا كَسَبُوْا ۚ— لَهُمْ شَرَابٌ مِّنْ حَمِیْمٍ وَّعَذَابٌ اَلِیْمٌ بِمَا كَانُوْا یَكْفُرُوْنَ ۟۠

இன்னும், (நபியே!) எவர்கள் தங்கள் மார்க்கத்தை விளையாட்டாகவும் கேளிக்கையாகவும் எடுத்துக் கொண்டார்களோ; இன்னும், உலக வாழ்க்கை அவர்களை மயக்கிவிட்டதோ அவர்களை நீர் விட்டுவிடுவீராக. ஓர் ஆன்மா, தான் செய்ததன் காரணமாக (மறுமையில்) ஆபத்திற்குள்ளாகும் என்பதை இதன் மூலம் நினைவூட்டுவீராக. (அந்நாளில்) பாதுகாவலரோ பரிந்துரையாளரோ, அல்லாஹ்வைத் தவிர அதற்கு இருக்கமாட்டார். அது (தண்டனையிலிருந்து தப்பிக்க) எவ்வளவு ஈடு கொடுத்தாலும் அதனிடமிருந்து அது ஏற்கப்படாது. இவர்கள் எத்தகையோர் என்றால் தாங்கள் செய்ததன் காரணமாகவே ஆபத்திற்குள்ளானார்கள். இவர்கள் நிராகரித்துக் கொண்டிருந்த காரணத்தால் கடுமையான கொதி நீரிலிருந்து குடிபானமும் துன்புறுத்தும் தண்டனையும் இவர்களுக்கு உண்டு. info
التفاسير:

external-link copy
71 : 6

قُلْ اَنَدْعُوْا مِنْ دُوْنِ اللّٰهِ مَا لَا یَنْفَعُنَا وَلَا یَضُرُّنَا وَنُرَدُّ عَلٰۤی اَعْقَابِنَا بَعْدَ اِذْ هَدٰىنَا اللّٰهُ كَالَّذِی اسْتَهْوَتْهُ الشَّیٰطِیْنُ فِی الْاَرْضِ حَیْرَانَ ۪— لَهٗۤ اَصْحٰبٌ یَّدْعُوْنَهٗۤ اِلَی الْهُدَی ائْتِنَا ؕ— قُلْ اِنَّ هُدَی اللّٰهِ هُوَ الْهُدٰی ؕ— وَاُمِرْنَا لِنُسْلِمَ لِرَبِّ الْعٰلَمِیْنَ ۟ۙ

(நபியே!) கூறுவீராக: “அல்லாஹ்வைத் தவிர எங்களுக்கு பலனளிக்காதவற்றையும் தீங்கிழைக்காதவற்றையும் நாங்கள் அழைப்போமா? ஒருவர், அவரை நேர்வழி பக்கம் அழைக்கின்ற நண்பர்கள் அவருக்கு இருந்த நிலையில், ஷைத்தான்கள் அவரை வழிதவறச் செய்து, அவரோ திகைத்தவராக பூமியில் அலைகிறாரே அவரைப் போல், நாங்கள் - எங்களை அல்லாஹ் நேர்வழிப்படுத்திய பின்னர் - எங்கள் குதிங்கால்கள் மேல் (வழிகேட்டின் பக்கம்) திரும்பி (குழப்பத்தில் ஆகி) விடுவோமா?’’ (நபியே!) கூறுவீராக: “நிச்சயமாக அல்லாஹ்வின் நேர்வழி, அதுதான் (உண்மையான) நேர்வழியாகும். அகிலத்தார்களின் இறைவனுக்கே நாங்கள் (முற்றிலும்) பணிந்துவிடவேண்டும் என்று கட்டளையிடப்பட்டோம்.’’ info
التفاسير:

external-link copy
72 : 6

وَاَنْ اَقِیْمُوا الصَّلٰوةَ وَاتَّقُوْهُ ؕ— وَهُوَ الَّذِیْۤ اِلَیْهِ تُحْشَرُوْنَ ۟

இன்னும், “தொழுகையை நிலை நிறுத்துங்கள்; இன்னும், அவனை அஞ்சுங்கள் என்று நாங்கள் கட்டளை இடப்பட்டுள்ளோம்.” இன்னும், அவன் பக்கம்தான் நீங்கள் ஒன்று திரட்டப்படுவீர்கள். info
التفاسير:

external-link copy
73 : 6

وَهُوَ الَّذِیْ خَلَقَ السَّمٰوٰتِ وَالْاَرْضَ بِالْحَقِّ ؕ— وَیَوْمَ یَقُوْلُ كُنْ فَیَكُوْنُ ؕ۬— قَوْلُهُ الْحَقُّ ؕ— وَلَهُ الْمُلْكُ یَوْمَ یُنْفَخُ فِی الصُّوْرِ ؕ— عٰلِمُ الْغَیْبِ وَالشَّهَادَةِ ؕ— وَهُوَ الْحَكِیْمُ الْخَبِیْرُ ۟

அவன்தான் உண்மையில் வானங்களையும், பூமியையும் படைத்தான். இன்னும், (மறுமை நிகழும்போது வானமும் பூமியும் வேறு வானமாகவும் பூமியாகவும் மாற்றப்படும். அப்போது) ‘ஆகுக!’ என அவன் கூறும் அந்த நாளில் உடனே (அது அவன் நாடியபடி அவை இரண்டும்) ஆகிவிடும். info
التفاسير: