Kur'an-ı Kerim meal tercümesi - Tamilce Tercüme - Ömer Şerif

புஸ்ஸிலத்

external-link copy
1 : 41

حٰمٓ ۟ۚ

ஹா மீம். info
التفاسير:

external-link copy
2 : 41

تَنْزِیْلٌ مِّنَ الرَّحْمٰنِ الرَّحِیْمِ ۟ۚ

பேரருளாளன் பேரன்பாளனிடமிருந்து இறக்கப்பட்ட வேதமாகும் (இது). info
التفاسير:

external-link copy
3 : 41

كِتٰبٌ فُصِّلَتْ اٰیٰتُهٗ قُرْاٰنًا عَرَبِیًّا لِّقَوْمٍ یَّعْلَمُوْنَ ۟ۙ

(இது) அரபி மொழியில் உள்ள (போற்றத் தகுந்த) குர்ஆன் என்னும் வேதமாகும். (அரபி மொழியை) அறிகின்ற மக்களுக்காக (அரபி மொழியில்) இதன் வசனங்கள் விவரிக்கப்பட்டன. info
التفاسير:

external-link copy
4 : 41

بَشِیْرًا وَّنَذِیْرًا ۚ— فَاَعْرَضَ اَكْثَرُهُمْ فَهُمْ لَا یَسْمَعُوْنَ ۟

(இந்த வேதம்) நற்செய்தி கூறக்கூடியதும், அச்சமூட்டி எச்சரிக்கக் கூடியதும் ஆகும். ஆக, அவர்களில் அதிகமானோர் (இதை) புறக்கணித்தனர். ஆக, அவர்கள் (இதன் நல்லுபதேசங்களை) செவியுறுவதில்லை. info
التفاسير:

external-link copy
5 : 41

وَقَالُوْا قُلُوْبُنَا فِیْۤ اَكِنَّةٍ مِّمَّا تَدْعُوْنَاۤ اِلَیْهِ وَفِیْۤ اٰذَانِنَا وَقْرٌ وَّمِنْ بَیْنِنَا وَبَیْنِكَ حِجَابٌ فَاعْمَلْ اِنَّنَا عٰمِلُوْنَ ۟

அவர்கள் கூறினார்கள்: “நீர் எதன் பக்கம் எங்களை அழைக்கிறீரோ அதில் இருந்து (எங்களைத் தடுக்கக்கூடிய) திரைகளில்தான் எங்கள் உள்ளங்கள் இருக்கின்றன. இன்னும், எங்கள் செவிகளில் செவிட்டுத்தனம் இருக்கிறது. எங்களுக்கு மத்தியிலும் உமக்கு மத்தியிலும் (உமது உபதேசத்தை நாங்கள் செவியுறாமல் எங்களை தடுக்கக்கூடிய) ஒரு திரையும் இருக்கிறது. ஆகவே, நீர் (விரும்பியதை) செய்வீராக! நிச்சயமாக நாங்கள் (விரும்புவதை நாங்கள்) செய்வோம்.” info
التفاسير:

external-link copy
6 : 41

قُلْ اِنَّمَاۤ اَنَا بَشَرٌ مِّثْلُكُمْ یُوْحٰۤی اِلَیَّ اَنَّمَاۤ اِلٰهُكُمْ اِلٰهٌ وَّاحِدٌ فَاسْتَقِیْمُوْۤا اِلَیْهِ وَاسْتَغْفِرُوْهُ ؕ— وَوَیْلٌ لِّلْمُشْرِكِیْنَ ۟ۙ

(நபியே) கூறுவீராக! “நான் எல்லாம் உங்களைப் போன்ற ஒரு மனிதர்தான். எனக்கு வஹ்யி அறிவிக்கப்படுவது என்னவென்றால்: “(நீங்கள் வணங்கத் தகுதியான) உங்கள் கடவுள் எல்லாம் ஒரே ஒரு கடவுள்தான்.” ஆகவே, அவன் பக்கம் (உங்களை சேர்த்துவைக்கின்ற நேரான பாதையில்) நீங்கள் நேர்வழி செல்லுங்கள்! இன்னும், அவனிடம் பாவமன்னிப்புக் கேளுங்கள்! இணைவைப்பவர்களுக்கு நாசம்தான்.” info
التفاسير:

external-link copy
7 : 41

الَّذِیْنَ لَا یُؤْتُوْنَ الزَّكٰوةَ وَهُمْ بِالْاٰخِرَةِ هُمْ كٰفِرُوْنَ ۟

அவர்கள் (செல்வங்களில் அவற்றுக்குரிய) ஸகாத்தை கொடுப்பதில்லை. இன்னும், அவர்கள் மறுமையை நிராகரிக்கிறார்கள். info
التفاسير:

external-link copy
8 : 41

اِنَّ الَّذِیْنَ اٰمَنُوْا وَعَمِلُوا الصّٰلِحٰتِ لَهُمْ اَجْرٌ غَیْرُ مَمْنُوْنٍ ۟۠

நிச்சயமாக எவர்கள் நம்பிக்கை கொண்டு நன்மைகளை செய்தார்களோ - அவர்களுக்கு முடிவுறாத வெகுமதிகள் உண்டு. info
التفاسير:

external-link copy
9 : 41

قُلْ اَىِٕنَّكُمْ لَتَكْفُرُوْنَ بِالَّذِیْ خَلَقَ الْاَرْضَ فِیْ یَوْمَیْنِ وَتَجْعَلُوْنَ لَهٗۤ اَنْدَادًا ؕ— ذٰلِكَ رَبُّ الْعٰلَمِیْنَ ۟ۚ

(நபியே!) கூறுவீராக! “பூமியை இரண்டு நாள்களில் படைத்தவனை நீங்கள் நிராகரிக்கிறீர்களா? இன்னும், அவனுக்கு இணைகளை ஏற்படுத்துகிறீர்களா? அவன் அகிலங்களின் இறைவன் ஆவான்.” info
التفاسير:

external-link copy
10 : 41

وَجَعَلَ فِیْهَا رَوَاسِیَ مِنْ فَوْقِهَا وَبٰرَكَ فِیْهَا وَقَدَّرَ فِیْهَاۤ اَقْوَاتَهَا فِیْۤ اَرْبَعَةِ اَیَّامٍ ؕ— سَوَآءً لِّلسَّآىِٕلِیْنَ ۟

இன்னும், அவன் அதில் அதற்கு மேலாக மலைகளை ஏற்படுத்தினான். அதில், அருள்வளம் (-அபிவிருத்தி) செய்தான். அதன் உணவுகளை அதில் திட்டமிட்டு நிர்ணயித்தான். (இவை எல்லாம் ஞாயிறு, திங்கள், செவ்வாய், புதன் ஆகிய பூரணமான) நான்கு நாட்களில் முடிந்தன. (பூமியையும் அதில் உள்ள படைப்புகளைப் பற்றியும்) விசாரிப்பவர்களுக்கு சரியான பதிலாக (இதைச் சொல்லுங்கள்). info
التفاسير:

external-link copy
11 : 41

ثُمَّ اسْتَوٰۤی اِلَی السَّمَآءِ وَهِیَ دُخَانٌ فَقَالَ لَهَا وَلِلْاَرْضِ ائْتِیَا طَوْعًا اَوْ كَرْهًا ؕ— قَالَتَاۤ اَتَیْنَا طَآىِٕعِیْنَ ۟

பிறகு, அவன் வானத்திற்கு மேல் உயர்ந்தான். அது (தண்ணீரில் இருந்து வெளியேறும்) ஓர் ஆவியாக இருந்தது. ஆக, (அந்த ஆவியை ஒரு வானமாக அவன் ஆக்கினான். அந்த ஒரு வானத்தில் இருந்து ஏழு வானங்களைப் படைத்தான்.) அவன் அதற்கும் (-வானத்திற்கும்) பூமிக்கும் கூறினான்: “நீங்கள் இருவரும் விருப்பத்துடன் அல்லது வெறுப்புடன் வாருங்கள் (-என் கட்டளைக்கு பணிந்து நடங்கள்! உங்களுக்குள் படைக்கப்பட்டதை வெளிப்படுத்துங்கள்.)!” அவை இரண்டும் கூறின: “நாங்கள் விருப்பமுள்ளவர்களாகவே வந்தோம் (உனக்கு கீழ்ப்படிந்து உனது கட்டளையை ஏற்று நடப்போம்.” ஆகவே, சூரியனையும் சந்திரனையும் நட்சத்திரங்களையும் இன்னும் அதனுள் அல்லாஹ் படைத்த மற்ற படைப்புகளையும் வானம் வெளிப்படுத்தியது. மலை, செடிகொடி, நதி, கடல், ஊர், கிராமம், பாலைவனம், காடுகள் என தன்னில் உள்ளவற்றை பூமி வெளிப்படுத்தியது.) info
التفاسير: