Kur'an-ı Kerim meal tercümesi - Tamilce Tercüme - Ömer Şerif

Sayfa numarası:close

external-link copy
14 : 27

وَجَحَدُوْا بِهَا وَاسْتَیْقَنَتْهَاۤ اَنْفُسُهُمْ ظُلْمًا وَّعُلُوًّا ؕ— فَانْظُرْ كَیْفَ كَانَ عَاقِبَةُ الْمُفْسِدِیْنَ ۟۠

(அவர்களுக்கு அல்லாஹ் ஒன்பது அத்தாட்சிகளை காண்பித்தான்.) அவர்கள் அவற்றை அநியாயமாகவும் பெருமையாகவும் மறுத்தனர். அவர்களுடைய ஆன்மாக்களோ அவற்றை உறுதிகொண்டிருந்தன. ஆக, (இந்த) விஷமிகளின் முடிவு எவ்வாறு ஆகிவிட்டது என்பதை (நபியே!) நீர் கவனிப்பீராக. info
التفاسير:

external-link copy
15 : 27

وَلَقَدْ اٰتَیْنَا دَاوٗدَ وَسُلَیْمٰنَ عِلْمًا ۚ— وَقَالَا الْحَمْدُ لِلّٰهِ الَّذِیْ فَضَّلَنَا عَلٰی كَثِیْرٍ مِّنْ عِبَادِهِ الْمُؤْمِنِیْنَ ۟

திட்டவட்டமாக தாவூதுக்கும் ஸுலைமானுக்கும் (பறவைகளின் மொழி அறிவு மற்றும் பல துறைகளின் சிறப்பான) கல்வி அறிவை நாம் தந்தோம். அவ்விருவரும் கூறினார்கள்: “தனது நம்பிக்கையாளர்களான அடியார்களில் பலரைப் பார்க்கிலும் எங்களை மேன்மைப்படுத்திய அல்லாஹ்விற்கே எல்லா புகழும்.” info
التفاسير:

external-link copy
16 : 27

وَوَرِثَ سُلَیْمٰنُ دَاوٗدَ وَقَالَ یٰۤاَیُّهَا النَّاسُ عُلِّمْنَا مَنْطِقَ الطَّیْرِ وَاُوْتِیْنَا مِنْ كُلِّ شَیْءٍ ؕ— اِنَّ هٰذَا لَهُوَ الْفَضْلُ الْمُبِیْنُ ۟

தாவூதுக்கு (அவரின் கல்விக்கும் ஆட்சிக்கும் அவரின் மற்ற பிள்ளைகளைப் பார்க்கிலும்) ஸுலைமான் வாரிசாக ஆனார். இன்னும், அவர் கூறினார்: “மக்களே! நாங்கள் பறவைகளின் பேச்சை (-மொழிகளை புரியும் கல்வியை) கற்பிக்கப்பட்டோம். இன்னும், (பல செல்வங்களிலிருந்து எங்களுக்கு தேவையான) எல்லா பொருள்களையும் நாங்கள் வழங்கப்பட்டோம். நிச்சயமாக இதுதான் தெளிவான மேன்மையாகும். info
التفاسير:

external-link copy
17 : 27

وَحُشِرَ لِسُلَیْمٰنَ جُنُوْدُهٗ مِنَ الْجِنِّ وَالْاِنْسِ وَالطَّیْرِ فَهُمْ یُوْزَعُوْنَ ۟

ஸுலைமானுக்கு ஜின்கள், மனிதர்கள் இன்னும் பறவைகளில் இருந்து அவருடைய இராணுவங்கள் ஒன்றுதிரட்டப்பட்டன. ஆக, அவர்கள் (ஒன்றிணைந்து வரிசை ஒழுங்குடன் செல்வதற்காக இடையிடையே) நிறுத்தப்படுவார்கள். info
التفاسير:

external-link copy
18 : 27

حَتّٰۤی اِذَاۤ اَتَوْا عَلٰی وَادِ النَّمْلِ ۙ— قَالَتْ نَمْلَةٌ یّٰۤاَیُّهَا النَّمْلُ ادْخُلُوْا مَسٰكِنَكُمْ ۚ— لَا یَحْطِمَنَّكُمْ سُلَیْمٰنُ وَجُنُوْدُهٗ ۙ— وَهُمْ لَا یَشْعُرُوْنَ ۟

இறுதியாக, (ஒரு பயணத்தில்) எறும்புகளின் ஒரு பள்ளத்தாக்கில் அவர்கள் வந்தபோது ஓர் எறும்பு கூறியது: எறும்புகளே! உங்கள் பொந்துகளுக்குள் நுழைந்து விடுங்கள்! சுலைமானும் அவருடைய இராணுவங்களும் உங்களை (மிதித்து) அழித்து விடவேண்டாம். அவர்களோ (நீங்கள் கீழே இருப்பதையும் அவர்கள் உங்களை மிதிப்பதையும்) உணர மாட்டார்கள். info
التفاسير:

external-link copy
19 : 27

فَتَبَسَّمَ ضَاحِكًا مِّنْ قَوْلِهَا وَقَالَ رَبِّ اَوْزِعْنِیْۤ اَنْ اَشْكُرَ نِعْمَتَكَ الَّتِیْۤ اَنْعَمْتَ عَلَیَّ وَعَلٰی وَالِدَیَّ وَاَنْ اَعْمَلَ صَالِحًا تَرْضٰىهُ وَاَدْخِلْنِیْ بِرَحْمَتِكَ فِیْ عِبَادِكَ الصّٰلِحِیْنَ ۟

ஆக, அதன் பேச்சினால் அவர் சிரித்தவராக புன்முறுவல் பூத்தார். இன்னும் கூறினார்: “என் இறைவா! நீ என் மீதும் என் பெற்றோர் மீதும் அருள்புரிந்த உன் அருட்கொடைக்கு நான் நன்றி செலுத்துவதற்கும் நீ எந்த நல்லதைக் கொண்டு திருப்தி அடைவாயோ அதை நான் செய்வதற்கும் எனக்கு நீ உள்ளத்தில் உதிப்பை ஏற்படுத்து! (மனதில் அதற்குண்டான ஆசையையும் உணர்வையும் ஏற்படுத்து!) இன்னும், உன் கருணையால் உன் நல்லடியார்களில் என்னை நுழைத்துவிடு!” info
التفاسير:

external-link copy
20 : 27

وَتَفَقَّدَ الطَّیْرَ فَقَالَ مَا لِیَ لَاۤ اَرَی الْهُدْهُدَ ۖؗ— اَمْ كَانَ مِنَ الْغَآىِٕبِیْنَ ۟

இன்னும், அவர் பறவைகளில் (ஹுத்ஹுத் பறவையைத்) தேடினார். (அது காணவில்லை. அப்போது) எனக்கென்ன ஏற்பட்டது, நான் ஹுத்ஹுதை (ஏன்) காண முடியவில்லை?! அல்லது, அது (இங்கு) வராதவர்களில் இருக்கிறதா? என்று கூறினார். info
التفاسير:

external-link copy
21 : 27

لَاُعَذِّبَنَّهٗ عَذَابًا شَدِیْدًا اَوْ لَاَاذْبَحَنَّهٗۤ اَوْ لَیَاْتِیَنِّیْ بِسُلْطٰنٍ مُّبِیْنٍ ۟

“நிச்சயமாக நான் அதை கடுமையாக தண்டிப்பேன். அல்லது, அதை நிச்சயமாக நான் அறுத்து விடுவேன். அல்லது அது கண்டிப்பாக தெளிவான ஆதாரத்தை என்னிடம் கொண்டுவர வேண்டும்.” info
التفاسير:

external-link copy
22 : 27

فَمَكَثَ غَیْرَ بَعِیْدٍ فَقَالَ اَحَطْتُّ بِمَا لَمْ تُحِطْ بِهٖ وَجِئْتُكَ مِنْ سَبَاٍ بِنَبَاٍ یَّقِیْنٍ ۟

ஆக, அவர் (ஹுத்ஹுதைப் பற்றி விசாரித்த பின்னர்) சிறிது நேரம்தான் தாமதித்தார். (அதற்குள் ஹுத்ஹுத் அவர் முன் வந்துவிட்டது.) ஆக, அது கூறியது: “(ஸுலைமானே!) நீர் அறியாததை நான் அறிந்து (வந்து)ள்ளேன். இன்னும், ‘சபா’ நாட்டவர்களிடமிருந்து உறுதியான செய்தியை உம்மிடம் கொண்டு வந்திருக்கிறேன். info
التفاسير: