Kur'an-ı Kerim meal tercümesi - Tamilce Tercüme - Ömer Şerif

அல்இஸ்ரா

external-link copy
1 : 17

سُبْحٰنَ الَّذِیْۤ اَسْرٰی بِعَبْدِهٖ لَیْلًا مِّنَ الْمَسْجِدِ الْحَرَامِ اِلَی الْمَسْجِدِ الْاَقْصَا الَّذِیْ بٰرَكْنَا حَوْلَهٗ لِنُرِیَهٗ مِنْ اٰیٰتِنَا ؕ— اِنَّهٗ هُوَ السَّمِیْعُ الْبَصِیْرُ ۟

(மக்காவின்) புனிதமான மஸ்ஜிதிலிருந்து (பைத்துல் முகத்தஸில் உள்ள) அல் மஸ்ஜிதுல் அக்ஸா வரை தன் அடிமை(யாகிய முஹம்மத் நபி)யை இரவில் அழைத்துச் சென்ற (இறை)வன் மிகப் பரிசுத்தமானவன். அ(ந்த மஸ்ஜி)தைச் சுற்றி நாம் அருள் புரிந்தோம். நமது அத்தாட்சிகளிலிருந்து (பலவற்றை) அவருக்கு காண்பிப்பதற்காக அவரை அழைத்து சென்றோம். நிச்சயமாக அவன்தான் நன்கு செவியுறுபவன், உற்று நோக்குபவன் ஆவான். info
التفاسير:

external-link copy
2 : 17

وَاٰتَیْنَا مُوْسَی الْكِتٰبَ وَجَعَلْنٰهُ هُدًی لِّبَنِیْۤ اِسْرَآءِیْلَ اَلَّا تَتَّخِذُوْا مِنْ دُوْنِیْ وَكِیْلًا ۟ؕ

இன்னும், மூஸாவிற்கு வேதத்தைக் கொடுத்தோம். மேலும், “நீங்கள் என்னைத் தவிர (எவரையும் உங்கள் தேவைகளுக்கு நீங்கள் பிரார்த்திக்கின்ற) பொறுப்பாளனாக எடுத்துக் கொள்ளாதீர்கள் என்று” இஸ்ராயீலின் சந்ததிகளுக்கு நேர்வழி காட்டக் கூடியதாக அ(ந்த வேதத்)தை ஆக்கினோம். info
التفاسير:

external-link copy
3 : 17

ذُرِّیَّةَ مَنْ حَمَلْنَا مَعَ نُوْحٍ ؕ— اِنَّهٗ كَانَ عَبْدًا شَكُوْرًا ۟

நூஹ்வுடன் நாம் (கப்பலில்) ஏற்றி பயணிக்க வைத்தவர்களின் சந்ததிகளே! நிச்சயமாக (நூஹ் ஆகிய) அவர் (அல்லாஹ்விற்கு) அதிகம் நன்றி செலுத்துகிற அடியாராக இருந்தார். info
التفاسير:

external-link copy
4 : 17

وَقَضَیْنَاۤ اِلٰی بَنِیْۤ اِسْرَآءِیْلَ فِی الْكِتٰبِ لَتُفْسِدُنَّ فِی الْاَرْضِ مَرَّتَیْنِ وَلَتَعْلُنَّ عُلُوًّا كَبِیْرًا ۟

“நிச்சயமாக பூமியில் இரு முறை நீங்கள் விஷமம் செய்வீர்கள்; இன்னும், (இறைவனுக்கு முன்பாக) நிச்சயமாக நீங்கள் பெரும் ஆணவத்துடன் நடந்து கொள்வீர்கள் (-மக்கள் மீது கொடுங்கோலர்களாக, திமிர் பிடித்தவர்களாக ஆட்சி செய்வீர்கள்) என்று இஸ்ராயீலின் சந்ததிகளுக்கு வேதத்தில் அறிவித்தோம். info
التفاسير:

external-link copy
5 : 17

فَاِذَا جَآءَ وَعْدُ اُوْلٰىهُمَا بَعَثْنَا عَلَیْكُمْ عِبَادًا لَّنَاۤ اُولِیْ بَاْسٍ شَدِیْدٍ فَجَاسُوْا خِلٰلَ الدِّیَارِ وَكَانَ وَعْدًا مَّفْعُوْلًا ۟

ஆக, அவ்விரண்டில் முதல் (முறையின்) வாக்கு வந்தபோது கடுமையான பலமு(ம் வீரமும் உ)டைய நமக்குரிய (சில) அடியார்களை உங்கள் மீது அனுப்பினோம். ஆக, அவர்கள் (உங்கள்) வீடுகளுக்கு நடுவில் ஊடுருவிச் சென்றனர். மேலும், (அது) ஒரு நிறைவேற்றப்பட்ட வாக்காக இருந்தது. info
التفاسير:

external-link copy
6 : 17

ثُمَّ رَدَدْنَا لَكُمُ الْكَرَّةَ عَلَیْهِمْ وَاَمْدَدْنٰكُمْ بِاَمْوَالٍ وَّبَنِیْنَ وَجَعَلْنٰكُمْ اَكْثَرَ نَفِیْرًا ۟

பிறகு, (நீங்கள் திருந்தி, அல்லாஹ்வின் பக்கம் திரும்பியதால்) உங்களுக்கு சாதகமாக அவர்களுக்கு எதிராக தாக்குதலை (வெற்றியை) திருப்பினோம். செல்வங்கள்; இன்னும், ஆண் பிள்ளைகளைக் கொண்டு உங்களுக்கு உதவினோம். இன்னும், (குடும்ப) எண்ணிக்கையில் அதிகமானவர்களாக உங்களை ஆக்கினோம். info
التفاسير:

external-link copy
7 : 17

اِنْ اَحْسَنْتُمْ اَحْسَنْتُمْ لِاَنْفُسِكُمْ ۫— وَاِنْ اَسَاْتُمْ فَلَهَا ؕ— فَاِذَا جَآءَ وَعْدُ الْاٰخِرَةِ لِیَسُوْٓءٗا وُجُوْهَكُمْ وَلِیَدْخُلُوا الْمَسْجِدَ كَمَا دَخَلُوْهُ اَوَّلَ مَرَّةٍ وَّلِیُتَبِّرُوْا مَا عَلَوْا تَتْبِیْرًا ۟

நீங்கள் நன்மை செய்தால் (அது) உங்கள் ஆன்மாக்களுக்குத்தான் நன்மை செய்தீர்கள். மேலும், நீங்கள் தீமை செய்தால் அதுவும் அவற்றுக்கே (தீமையாக அமையும்). ஆக, (இரண்டு வாக்குகளில்) மற்றொரு வாக்கு வந்தபோது, (மீண்டும்) உங்கள் முகங்களை அவர்கள் கெடுப்பதற்காகவும் (-தோல்வியினால் உங்கள் முகங்கள் இழிவடைந்து வாடிபோவதற்காகவும்), முதல் முறை மஸ்ஜிதில் அவர்கள் நுழைந்தவாறு (இம்முறையும்) அவர்கள் அதில் நுழைவதற்காகவும், அவர்கள் வெற்றிகொண்ட ஊர்களை எல்லாம் அழித்தொழிப்பதற்காகவும் (அவர்களை மீண்டும் உங்கள் மீது அனுப்பினோம்). info
التفاسير: