Kur'an-ı Kerim meal tercümesi - Muhtasar Kur'an-ı Kerim Tefsiri Tamilce Tercümesi

அத்தாரிக்

Surenin hedefleri:
بيان قدرة الله وإحاطته في خلق الإنسان وإعادته.
மனிதனைப் படைப்பதிலும் அவனை மீண்டும் எழுப்புவதிலும் அல்லாஹ்வின் ஆற்றலையும் சூழ்ந்தறியும் தன்மையையும் தெளிவுபடுத்தல் info

external-link copy
1 : 86

وَالسَّمَآءِ وَالطَّارِقِ ۟ۙ

86.1. அல்லாஹ் வானத்தைக் கொண்டும் இரவில் தோன்றக்கூடிய நட்சத்திரத்தைக் கொண்டும் சத்தியம் செய்கின்றான். info
التفاسير:

external-link copy
2 : 86

وَمَاۤ اَدْرٰىكَ مَا الطَّارِقُ ۟ۙ

86.2. -தூதரே!- மகத்தான அந்த நட்சத்திரத்தின் செய்தியைக் குறித்து உமக்கு அறிவித்தது எது? info
التفاسير:

external-link copy
3 : 86

النَّجْمُ الثَّاقِبُ ۟ۙ

86.3. அது தனது எரிக்கும் பிரகாசத்தின் மூலம் விண்ணை ஊடறுத்துச் செல்லும் நட்சத்திரமாகும். info
التفاسير:

external-link copy
4 : 86

اِنْ كُلُّ نَفْسٍ لَّمَّا عَلَیْهَا حَافِظٌ ۟ؕ

86.4. அல்லாஹ் ஒவ்வொருவரின் மீதும் ஒரு வானவரை நியமித்துள்ளான். அவர் மறுமை நாளில் விசாரணை செய்வதற்காக அந்த மனிதரின் செயல்களைக் கண்காணிக்கிறார். info
التفاسير:

external-link copy
5 : 86

فَلْیَنْظُرِ الْاِنْسَانُ مِمَّ خُلِقَ ۟ؕ

86.5. அல்லாஹ்வின் வல்லமையும் தன் இயலாமையும் அவனுக்குப் புரிவதற்காக அல்லாஹ் தன்னை எதிலிருந்து படைத்துள்ளான் என்பதை மனிதன் சிந்தித்துப் பார்க்கட்டும். info
التفاسير:

external-link copy
6 : 86

خُلِقَ مِنْ مَّآءٍ دَافِقٍ ۟ۙ

86.6. குதித்து வெளிப்படக்கூடிய, கர்ப்பப்பையில் சிந்தப்படக்கூடிய நீரிலிருந்து அவன் மனிதனைப் படைத்தான். info
التفاسير:

external-link copy
7 : 86

یَّخْرُجُ مِنْ بَیْنِ الصُّلْبِ وَالتَّرَآىِٕبِ ۟ؕ

86.7. அந்த நீர் ஆணின் முதுகெலும்பிற்கும் (பெண்ணின்) நெஞ்செலும்பிற்கும் இடையிலிருந்து வெளிப்படுகிறது. info
التفاسير:

external-link copy
8 : 86

اِنَّهٗ عَلٰی رَجْعِهٖ لَقَادِرٌ ۟ؕ

86.8. -அந்த அற்ப நீரிலிருந்து மனிதனைப் படைத்த- இறைவன் மனிதன் இறந்தபிறகு அவனை விசாரணை செய்வதற்காகவும் கூலி கொடுக்கப்படுவதற்காவும் மீண்டும் உயிர்கொடுத்து எழுப்புதற்கு நிச்சயமாக ஆற்றலுடையவன். info
التفاسير:

external-link copy
9 : 86

یَوْمَ تُبْلَی السَّرَآىِٕرُ ۟ۙ

86.9. உள்ளங்கள் சோதனைக்குள்ளாக்கப்படும் நாளில் அவை மறைத்துவைத்த எண்ணங்கள், கொள்கைகள் மற்றும் இன்னபிற அனைத்தும் வெளிப்படுத்தப்படும். அவற்றில் நல்லவையும் தீயவையும் தனித்தனியாகப் பிரிந்துவிடும். info
التفاسير:

external-link copy
10 : 86

فَمَا لَهٗ مِنْ قُوَّةٍ وَّلَا نَاصِرٍ ۟ؕ

86.10. அந்நாளில் அல்லாஹ்வின் வேதனையிலிருந்து தன்னைக் தடுத்துக்கொள்வதற்கு மனிதனிடம் எந்த சக்தியோ, அவனுக்கு உதவுவதற்கு எந்த உதவியாளனோ இருக்கமாட்டாது. info
التفاسير:

external-link copy
11 : 86

وَالسَّمَآءِ ذَاتِ الرَّجْعِ ۟ۙ

86.11. அல்லாஹ் மழையுடைய வானத்தைக் கொண்டு சத்தியம் செய்கின்றான். ஏனெனில் நிச்சயமாக அதன் திசையிலிருந்துதான் மழை திரும்பத் திரும்ப இறங்குகிறது. info
التفاسير:

external-link copy
12 : 86

وَالْاَرْضِ ذَاتِ الصَّدْعِ ۟ۙ

86.12. தாவரங்கள், மரங்கள், கனிகள் ஆகியவற்றை வெளிப்படுத்தும் பூமியைக் கொண்டும் அவன் சத்தியம் செய்கின்றான். info
التفاسير:

external-link copy
13 : 86

اِنَّهٗ لَقَوْلٌ فَصْلٌ ۟ۙ

86.13. நிச்சயமாக முஹம்மது மீது இறக்கப்பட்ட குர்ஆன் சத்தியத்தையும் அசத்தியத்தையும் உண்மையையம் பொய்யையும் பிரித்தறிவிக்கும் வார்த்தையாகும். info
التفاسير:

external-link copy
14 : 86

وَّمَا هُوَ بِالْهَزْلِ ۟ؕ

86.14. அது வீணானதோ, அசத்தியமோ அல்ல. மாறாக உறுதியானதும் சத்தியமும் ஆகும். info
التفاسير:

external-link copy
15 : 86

اِنَّهُمْ یَكِیْدُوْنَ كَیْدًا ۟ۙ

86.15. தங்களின் தூதர் கொண்டுவந்ததை மறுப்பவர்கள் அவரின் அழைப்பை அசத்தியமாக்கி, முறியடிப்பதற்காக ஏராளமான சூழ்ச்சிகளைச் செய்கிறார்கள். info
التفاسير:

external-link copy
16 : 86

وَّاَكِیْدُ كَیْدًا ۟ۚۖ

86.16. நானும் மார்க்கத்தை மேலோங்கச் செய்வதற்காக, அசத்தியத்தை வீழ்த்துவதற்காக திட்டங்கள் தீட்டுகிறேன். info
التفاسير:

external-link copy
17 : 86

فَمَهِّلِ الْكٰفِرِیْنَ اَمْهِلْهُمْ رُوَیْدًا ۟۠

86.17. -தூதரே!- இந்த நிராகரிப்பாளர்களுக்கு சிறிது காலம்வரை அவகாசம் அளிப்பீராக. அவர்கள் விரைவாக அழிக்கப்படு, தண்டிக்கப்பட வேண்டும் என்று அவசரப்படாதீர். info
التفاسير:
Bu sayfadaki ayetlerin faydaları:
• تحفظ الملائكة الإنسان وأعماله خيرها وشرها ليحاسب عليها.
1. வானவர்கள் மனிதனின் விசாரணைக்காக அவனது நன்மையான, தீமையான செயல்கள் அனைத்தையும் பாதுகாக்கிறார்கள். info

• ضعف كيد الكفار إذا قوبل بكيد الله سبحانه.
2. அல்லாஹ்வின் சூழ்ச்சியோடு ஒப்பிடுகையில் நிராகரிப்பாளர்களின் சூழ்ச்சி பலவீனமானதாகும். info

• خشية الله تبعث على الاتعاظ.
3. அல்லாஹ்வின் மீதுள்ள அச்சம் அறிவுரை பெற்றுக்கொள்ளத் தூண்டுகிறது. info