Kur'an-ı Kerim meal tercümesi - Muhtasar Kur'an-ı Kerim Tefsiri Tamilce Tercümesi

external-link copy
123 : 2

وَاتَّقُوْا یَوْمًا لَّا تَجْزِیْ نَفْسٌ عَنْ نَّفْسٍ شَیْـًٔا وَّلَا یُقْبَلُ مِنْهَا عَدْلٌ وَّلَا تَنْفَعُهَا شَفَاعَةٌ وَّلَا هُمْ یُنْصَرُوْنَ ۟

2.123. அல்லாஹ்வின் கட்டளைகளைக் கடைப்பிடித்து, அவன் தடுத்துள்ளவற்றிலிருந்து தவிர்ந்து மறுமைநாளில் உங்களுக்கும் தண்டனைக்குமிடையே தடுப்பை ஏற்படுத்திக்கொள்ளுங்கள். அந்த நாளில் எந்த உயிரும் பிற உயிருக்கு எதுவும் பயனளிக்க முடியாது. எவ்வளவு பெரிய பிணைத்தொகையும் எந்த மதிப்புமிக்கவரின் பரிந்துரையும் ஏற்றுக் கொள்ளப்படாது. அல்லாஹ்வைத்தவிர உதவிசெய்யக்கூடிய வேறு உதவியாளனும் அங்கு இருக்கமாட்டார்கள். info
التفاسير:
Bu sayfadaki ayetlerin faydaları:
• أن المسلمين مهما فعلوا من خير لليهود والنصارى؛ فلن يرضوا حتى يُخرجوهم من دينهم، ويتابعوهم على ضلالهم.
1. முஸ்லிம்கள், யூதர்களுக்கும் கிருஸ்தவர்களுக்கும் எவ்வளவுதான் நன்மைகள் புரிந்தாலும் தங்களின் மார்க்கத்தை விட்டு அவர்கள் வெளியேறி யூதர்களின் மற்றும் கிருஸ்தவர்களின் வழியைப் பின்பற்றாதவரை அவர்களைக் குறித்து யூதர்களும் கிருஸ்தவர்களும் திருப்தியடைய மாட்டார்கள். info

• الإمامة في الدين لا تُنَال إلا بصحة اليقين والصبر على القيام بأمر الله تعالى.
2. சரியான நம்பிக்கை மற்றும் அல்லாஹ்வின் கட்டளைகளை நிறைவேற்றுவதில் பொறுமையாக இருத்தல் ஆகியவற்றைக் கொண்டுதான் மார்க்கத் தலைமை பெறப்படுகிறது. info

• بركة دعوة إبراهيم عليه السلام للبلد الحرام، حيث جعله الله مكانًا آمنًا للناس، وتفضّل على أهله بأنواع الأرزاق.
3. புனித பூமி மக்காவுக்கு இப்ராஹீம் (அலை) அவர்கள் புரிந்த பிரார்த்தனை அருள்நிறைந்ததாகும். அதன் விளைவாக அல்லாஹ் மக்களுக்கு அதனை பாதுகாப்புமிக்கதாக ஆக்கி அங்கு வசிப்போருக்கு பலவித உணவுகளையும் வழங்கியுள்ளான். info