Kur'an-ı Kerim meal tercümesi - Tamilce Tercüme - Abdülhamid Bagavi

Sayfa numarası:close

external-link copy
74 : 7

وَاذْكُرُوْۤا اِذْ جَعَلَكُمْ خُلَفَآءَ مِنْ بَعْدِ عَادٍ وَّبَوَّاَكُمْ فِی الْاَرْضِ تَتَّخِذُوْنَ مِنْ سُهُوْلِهَا قُصُوْرًا وَّتَنْحِتُوْنَ الْجِبَالَ بُیُوْتًا ۚ— فَاذْكُرُوْۤا اٰلَآءَ اللّٰهِ وَلَا تَعْثَوْا فِی الْاَرْضِ مُفْسِدِیْنَ ۟

74. ‘ஆத்' (என்னும்) மக்களுக்குப் பின்னர் (அவர்களுடைய) பூமியில் உங்களைக் குடியேறச்செய்து (அதற்கு) உங்களை அதிபதிகளாக்கி வைத்ததை நீங்கள் நினைத்துப் பாருங்கள். நீங்கள் அதன் சமவெளியில் மாளிகைகளையும், மலைகளைக் குடைந்து வீடுகளையும் அமைத்துக் கொள்கிறீர்கள். ஆகவே, அல்லாஹ்வின் இவ்வருட் கொடைகளை எல்லாம் நீங்கள் நினைத்துப் பாருங்கள். மேலும், பூமியில் கடுமையாக விஷமம் செய்து கொண்டு அலையாதீர்கள்'' (என்றும் கூறினார்.) info
التفاسير:

external-link copy
75 : 7

قَالَ الْمَلَاُ الَّذِیْنَ اسْتَكْبَرُوْا مِنْ قَوْمِهٖ لِلَّذِیْنَ اسْتُضْعِفُوْا لِمَنْ اٰمَنَ مِنْهُمْ اَتَعْلَمُوْنَ اَنَّ صٰلِحًا مُّرْسَلٌ مِّنْ رَّبِّهٖ ؕ— قَالُوْۤا اِنَّا بِمَاۤ اُرْسِلَ بِهٖ مُؤْمِنُوْنَ ۟

75. அதற்கு அவருடைய மக்களில் கர்வம் கொண்டிருந்த தலைவர்கள், தங்களைவிட தாழ்ந்தவர்களென எண்ணிக் கொண்டிருந்த நம்பிக்கையாளர்களை நோக்கி, ‘‘நிச்சயமாக இந்த ஸாலிஹ் தம் இறைவனால் அனுப்பப்பட்ட ஒரு தூதரென நீங்கள் உறுதியாக நம்புகிறீர்களா?'' என்று கேட்டார்கள். அதற்கவர்கள் ‘‘நிச்சயமாக நாங்கள் அவர் கொண்டுவந்த தூதை நம்பிக்கை கொள்கிறோம்'' என்று கூறினார்கள். info
التفاسير:

external-link copy
76 : 7

قَالَ الَّذِیْنَ اسْتَكْبَرُوْۤا اِنَّا بِالَّذِیْۤ اٰمَنْتُمْ بِهٖ كٰفِرُوْنَ ۟

76. அதற்கு கர்வம்கொண்ட அவர்கள் (அந்த நம்பிக்கையாளர்களை நோக்கி) ‘‘நீங்கள் நம்பியவற்றை நிச்சயமாக நாங்கள் நிராகரிக்கிறோம்'' என்று கூறினர். info
التفاسير:

external-link copy
77 : 7

فَعَقَرُوا النَّاقَةَ وَعَتَوْا عَنْ اَمْرِ رَبِّهِمْ وَقَالُوْا یٰصٰلِحُ ائْتِنَا بِمَا تَعِدُنَاۤ اِنْ كُنْتَ مِنَ الْمُرْسَلِیْنَ ۟

77. ஆகவே, தங்கள் இறைவனின் கட்டளையை மீறி, அந்த ஒட்டகத்தை அறுத்து (ஸாலிஹ் நபியை நோக்கி), ‘‘ஸாலிஹே! மெய்யாகவே நீர் இறைவனுடைய தூதர்களில் ஒருவராக இருந்தால் நீர் அச்சமூட்டும் அ(ந்)த (வேத)னை(யை) எங்களிடம் கொண்டு வருவீராக'' என்று கூறினார்கள். info
التفاسير:

external-link copy
78 : 7

فَاَخَذَتْهُمُ الرَّجْفَةُ فَاَصْبَحُوْا فِیْ دَارِهِمْ جٰثِمِیْنَ ۟

78. ஆகவே, (முன்னர் அவர்களுக்கு எச்சரிக்கப்பட்டு வந்த) பூகம்பம் அவர்களைப் பிடித்துக் கொண்டது. அதனால் அவர்கள் தங்கள் வீடுகளில் இருந்தவான்ற இறந்து அழிந்துவிட்டனர். info
التفاسير:

external-link copy
79 : 7

فَتَوَلّٰی عَنْهُمْ وَقَالَ یٰقَوْمِ لَقَدْ اَبْلَغْتُكُمْ رِسَالَةَ رَبِّیْ وَنَصَحْتُ لَكُمْ وَلٰكِنْ لَّا تُحِبُّوْنَ النّٰصِحِیْنَ ۟

79. (அந்நேரத்தில் ஸாலிஹ் நபி) அவர்களிலிருந்து விலகிக்கொண்டு (அவர்களை நோக்கி,) ‘‘என் மக்களே! நிச்சயமாக நான் உங்களுக்கு என் இறைவனின் தூதையே எடுத்துரைத்து உங்களுக்கு நல்லுபதேசம் செய்தேன். எனினும் நீங்களோ நல்லுபதேசம் செய்பவர்களை நேசிக்கவில்லை'' என்று கூறினார். info
التفاسير:

external-link copy
80 : 7

وَلُوْطًا اِذْ قَالَ لِقَوْمِهٖۤ اَتَاْتُوْنَ الْفَاحِشَةَ مَا سَبَقَكُمْ بِهَا مِنْ اَحَدٍ مِّنَ الْعٰلَمِیْنَ ۟

80. லூத்தையும் (நம் தூதராக அவருடைய மக்களுக்கு நாம் அனுப்பிவைத்தோம்.) அவர் தம் மக்களை நோக்கி ‘‘உங்களுக்கு முன்னர் உலகத்தில் எவருமே செய்திராத மானக்கேடானதொரு காரியத்தையா நீங்கள் செய்கிறீர்கள்? info
التفاسير:

external-link copy
81 : 7

اِنَّكُمْ لَتَاْتُوْنَ الرِّجَالَ شَهْوَةً مِّنْ دُوْنِ النِّسَآءِ ؕ— بَلْ اَنْتُمْ قَوْمٌ مُّسْرِفُوْنَ ۟

81. நிச்சயமாக நீங்கள் பெண்களை விட்டு (விட்டு) ஆண்களிடம் காம இச்சையைத் தணித்துக் கொள்ளச் செல்கிறீர்கள். நீங்கள் மிக்க வரம்பு மீறிய மக்களாக இருக்கிறீர்கள்'' என்று கூறினார். info
التفاسير: