Kur'an-ı Kerim meal tercümesi - Tamilce Tercüme - Abdülhamid Bagavi

Sayfa numarası:close

external-link copy
135 : 2

وَقَالُوْا كُوْنُوْا هُوْدًا اَوْ نَصٰرٰی تَهْتَدُوْا ؕ— قُلْ بَلْ مِلَّةَ اِبْرٰهٖمَ حَنِیْفًا ؕ— وَمَا كَانَ مِنَ الْمُشْرِكِیْنَ ۟

135. (நம்பிக்கையாளர்களை நோக்கி) ‘‘நீங்கள் யூதர்களாக அல்லது கிறிஸ்தவர்களாக ஆகிவிடுங்கள். நேரானவழியை அடைந்து விடுவீர்கள்'' என அவர்கள் கூறுகிறார்கள். அதற்கு, ‘‘இல்லை! நேரான வழியைச் சார்ந்த இப்றாஹீமின் மார்க்கத்தையே (பின்பற்றுவோம்). அவர் (உங்களைப்போல்) இணைவைத்து வணங்கியவர்களில்'' இல்லை என்று (நபியே!) கூறுவீராக. info
التفاسير:

external-link copy
136 : 2

قُوْلُوْۤا اٰمَنَّا بِاللّٰهِ وَمَاۤ اُنْزِلَ اِلَیْنَا وَمَاۤ اُنْزِلَ اِلٰۤی اِبْرٰهٖمَ وَاِسْمٰعِیْلَ وَاِسْحٰقَ وَیَعْقُوْبَ وَالْاَسْبَاطِ وَمَاۤ اُوْتِیَ مُوْسٰی وَعِیْسٰی وَمَاۤ اُوْتِیَ النَّبِیُّوْنَ مِنْ رَّبِّهِمْ ۚ— لَا نُفَرِّقُ بَیْنَ اَحَدٍ مِّنْهُمْ ؗ— وَنَحْنُ لَهٗ مُسْلِمُوْنَ ۟

136. (நம்பிக்கையாளர்களே!) நீங்களும் கூறுங்கள்: ‘‘அல்லாஹ்வையும் எங்களுக்கு அருளப்பட்ட (இவ்வேதத்)தையும், இப்றாஹீம், இஸ்மாயீல், இஸ்ஹாக், யஅகூப் ஆகியவர்களுக்கும், அவர்களுடைய சந்ததிகளுக்கும் அருளப்பட்ட அனைத்தையும், மூஸாவுக்கும், ஈஸாவுக்கும் கொடுக்கப்பட்டிருந்ததையும், (மற்றைய) நபிமார்களுக்கு தங்கள் இறைவனிடமிருந்து கொடுக்கப்பட்டிருந்தவற்றையும் நாங்கள் நம்பிக்கை கொள்கிறோம். அவர்களிலிருந்து எவரையும் (நபியல்ல என்று) பிரித்துவிட மாட்டோம். மேலும், அவனுக்கே நாங்கள் முற்றிலும் பணிந்து வழிப்படுவோம்.'' info
التفاسير:

external-link copy
137 : 2

فَاِنْ اٰمَنُوْا بِمِثْلِ مَاۤ اٰمَنْتُمْ بِهٖ فَقَدِ اهْتَدَوْا ۚ— وَاِنْ تَوَلَّوْا فَاِنَّمَا هُمْ فِیْ شِقَاقٍ ۚ— فَسَیَكْفِیْكَهُمُ اللّٰهُ ۚ— وَهُوَ السَّمِیْعُ الْعَلِیْمُ ۟ؕ

137. (நம்பிக்கையாளர்களே!) நீங்கள் நம்பிக்கை கொண்டவாறே அவர்களும் நம்பிக்கை கொண்டால் நிச்சயமாக அவர்கள் நேரான வழியை அடைந்து விடுவார்கள். அவர்கள் புறக்கணித்து விட்டால் நிச்சயமாக வீண் பிடிவாதத்தில்தான் அவர்கள் இருக்கின்றனர். (நபியே!) அவர்களைப் பற்றி உமக்கு(ப் பயம் வேண்டாம்) அல்லாஹ் போதுமானவன். மேலும், அவன் (அனைத்தையும்) செவியுறுபவன், நன்கறிபவன் ஆவான். info
التفاسير:

external-link copy
138 : 2

صِبْغَةَ اللّٰهِ ۚ— وَمَنْ اَحْسَنُ مِنَ اللّٰهِ صِبْغَةً ؗ— وَّنَحْنُ لَهٗ عٰبِدُوْنَ ۟

138. ‘‘அல்லாஹ்வுடைய மார்க்கத்தையே நாங்கள் பின்பற்றுவோம். அல்லாஹ்வை விட மார்க்கத்தால் மிக அழகானவன் யார்? (யாருமில்லை) நாம் அவனையே வணங்குவோம்'' (என்றும் கூறுவீர்களாக!) info
التفاسير:

external-link copy
139 : 2

قُلْ اَتُحَآجُّوْنَنَا فِی اللّٰهِ وَهُوَ رَبُّنَا وَرَبُّكُمْ ۚ— وَلَنَاۤ اَعْمَالُنَا وَلَكُمْ اَعْمَالُكُمْ ۚ— وَنَحْنُ لَهٗ مُخْلِصُوْنَ ۟ۙ

139. ‘‘நீங்கள் அல்லாஹ்வைப் பற்றி நம்மிடம் தர்க்கிக்கிறீர்களா? எங்கள் இறைவனும் உங்கள் இறைவனும் அவனே! எங்கள் செயல்கள் (உடைய பலன்) எங்களுக்கே; உங்கள் செயல்கள் (உடைய பலன்) உங்களுக்கே. நாங்கள் அவனுக்கு இணைவைக்காது, வணக்கங்களை முற்றிலும் அவனுக்கே கலப்பற்றதாக ஆக்குவோம்'' என்றும் கூறுவீராக! info
التفاسير:

external-link copy
140 : 2

اَمْ تَقُوْلُوْنَ اِنَّ اِبْرٰهٖمَ وَاِسْمٰعِیْلَ وَاِسْحٰقَ وَیَعْقُوْبَ وَالْاَسْبَاطَ كَانُوْا هُوْدًا اَوْ نَصٰرٰی ؕ— قُلْ ءَاَنْتُمْ اَعْلَمُ اَمِ اللّٰهُ ؕ— وَمَنْ اَظْلَمُ مِمَّنْ كَتَمَ شَهَادَةً عِنْدَهٗ مِنَ اللّٰهِ ؕ— وَمَا اللّٰهُ بِغَافِلٍ عَمَّا تَعْمَلُوْنَ ۟

140. ‘‘நிச்சயமாக இப்றாஹீம், இஸ்மாயீல், இஸ்ஹாக், யஅகூப் இவர்களும், இவர்களுடைய சந்ததிகளும் யூதர்களாக அல்லது கிறிஸ்தவர்களாக இருந்தார்கள் என கூறுவீர்களா? (இதை) நன்கறிந்திருப்பது நீங்களா? அல்லாஹ்வா? என்று (நபியே!) கேட்பீராக. மேலும், (இதைப்பற்றி) தன்னிடமிருக்கும் அல்லாஹ்வின் சாட்சியத்தை மறைப்பவனைவிடப் பெரிய அநியாயக்காரன் யார்? உங்கள் இச்செயலைப் பற்றி அல்லாஹ் பராமுகமாக இல்லை'' (என்றும் கூறுவீராக). info
التفاسير:

external-link copy
141 : 2

تِلْكَ اُمَّةٌ قَدْ خَلَتْ ۚ— لَهَا مَا كَسَبَتْ وَلَكُمْ مَّا كَسَبْتُمْ ۚ— وَلَا تُسْـَٔلُوْنَ عَمَّا كَانُوْا یَعْمَلُوْنَ ۟۠

141. (மேற்கூறப்பட்ட நபிமார்களாகிய) அவர்கள் சென்றுபோன ஒரு (நல்ல) சமுதாயத்தினர். அவர்கள் செய்தவை அவர்களுக்கே; நீங்கள் செய்தவை உங்களுக்கே. அவர்கள் என்ன செய்து கொண்டிருந்தார்கள் என்று நீங்கள் கேட்கப்படமாட்டீர்கள். info
التفاسير: