పవిత్ర ఖురాన్ యొక్క భావార్థాల అనువాదం - తమిళ అనువాదం - ఉమర్ షరీఫ్

పేజీ నెంబరు:close

external-link copy
225 : 2

لَا یُؤَاخِذُكُمُ اللّٰهُ بِاللَّغْوِ فِیْۤ اَیْمَانِكُمْ وَلٰكِنْ یُّؤَاخِذُكُمْ بِمَا كَسَبَتْ قُلُوْبُكُمْ ؕ— وَاللّٰهُ غَفُوْرٌ حَلِیْمٌ ۟

உங்கள் சத்தியங்களில் வீணானவற்றிற்காக அல்லாஹ் உங்களைத் தண்டிக்கமாட்டான். எனினும், உங்கள் உள்ளங்கள் செய்த (உறுதியான சத்தியத்)திற்காக (அதை நீங்கள் நிறைவேற்றவில்லை என்றால்) அவன் உங்களைத் தண்டிப்பான். அல்லாஹ் மகா மன்னிப்பாளன், பெரும் சகிப்பாளன் ஆவான். info
التفاسير:

external-link copy
226 : 2

لِلَّذِیْنَ یُؤْلُوْنَ مِنْ نِّسَآىِٕهِمْ تَرَبُّصُ اَرْبَعَةِ اَشْهُرٍ ۚ— فَاِنْ فَآءُوْ فَاِنَّ اللّٰهَ غَفُوْرٌ رَّحِیْمٌ ۟

தங்கள் மனைவிகளிடம் ஈலா* செய்பவர்களுக்கு நான்கு மாதங்கள் எதிர்பார்ப்பதற்கு அனுமதி உண்டு. (அதற்குள்) அவர்கள் (தங்கள் மனைவிகளுடன்) மீண்டுவிட்டால் (அவர்களுக்குள் பிரிவு ஏற்படாது. அவர் செய்த ஈலாவை அல்லாஹ் மன்னித்து விடுவான்.) நிச்சயமாக அல்லாஹ் மகா மன்னிப்பாளன், மகா கருணையாளன் ஆவான். info

*ஈலா என்றால் மனைவியுடன் உடலுறவு வைக்க மாட்டேன் என்று அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்வதாகும்.

التفاسير:

external-link copy
227 : 2

وَاِنْ عَزَمُوا الطَّلَاقَ فَاِنَّ اللّٰهَ سَمِیْعٌ عَلِیْمٌ ۟

இன்னும் அவர்கள் (ஈலாவினால்) விவாகரத்தை உறுதிப்படுத்தினால், (விவாகரத்து ஏற்பட்டுவிடும். அவர்களின் சொல்லை) நிச்சயமாக அல்லாஹ் நன்கு செவியுறுபவன், (அவர்களின் எண்ணங்களை) நன்கறிந்தவன் ஆவான். info
التفاسير:

external-link copy
228 : 2

وَالْمُطَلَّقٰتُ یَتَرَبَّصْنَ بِاَنْفُسِهِنَّ ثَلٰثَةَ قُرُوْٓءٍ ؕ— وَلَا یَحِلُّ لَهُنَّ اَنْ یَّكْتُمْنَ مَا خَلَقَ اللّٰهُ فِیْۤ اَرْحَامِهِنَّ اِنْ كُنَّ یُؤْمِنَّ بِاللّٰهِ وَالْیَوْمِ الْاٰخِرِ ؕ— وَبُعُوْلَتُهُنَّ اَحَقُّ بِرَدِّهِنَّ فِیْ ذٰلِكَ اِنْ اَرَادُوْۤا اِصْلَاحًا ؕ— وَلَهُنَّ مِثْلُ الَّذِیْ عَلَیْهِنَّ بِالْمَعْرُوْفِ ۪— وَلِلرِّجَالِ عَلَیْهِنَّ دَرَجَةٌ ؕ— وَاللّٰهُ عَزِیْزٌ حَكِیْمٌ ۟۠

விவாகரத்து செய்யப்பட்ட பெண்கள், தங்களுக்கு (இத்தா முடிவதற்கு) மூன்று மாதவிடாய்களை எதிர்பார்ப்பார்கள். இன்னும், அவர்கள் அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்பிக்கை கொள்கிறவர்களாக இருந்தால், அல்லாஹ் அவர்களுடைய கர்ப்பப்பைகளில் படைத்ததை மறைப்பது அவர்களுக்கு ஆகுமானதல்ல. இன்னும், அவர்களின் கணவர்கள் (தங்களுக்குள் உள்ள பிரச்சனைகளை) சீர்திருத்த(ம் செய்து சேர்ந்து வாழ) விரும்பினால் அதில் (-தவணைக்குள்) அவர்களை மீட்டுக்கொள்வதற்கு உரிமையுடையவர்கள் ஆவார்கள். (பெண்களாகிய) அவர்கள் மீது கடமைகள் இருப்பது போன்றே அவர்களுக்கு உரிமைகளும் உண்டு. இன்னும், ஆண்களுக்கு அவர்கள் மீது ஓர் உயர்வு உண்டு. அல்லாஹ் மிகைத்தவன், மகா ஞானவான் ஆவான். info
التفاسير:

external-link copy
229 : 2

اَلطَّلَاقُ مَرَّتٰنِ ۪— فَاِمْسَاكٌ بِمَعْرُوْفٍ اَوْ تَسْرِیْحٌ بِاِحْسَانٍ ؕ— وَلَا یَحِلُّ لَكُمْ اَنْ تَاْخُذُوْا مِمَّاۤ اٰتَیْتُمُوْهُنَّ شَیْـًٔا اِلَّاۤ اَنْ یَّخَافَاۤ اَلَّا یُقِیْمَا حُدُوْدَ اللّٰهِ ؕ— فَاِنْ خِفْتُمْ اَلَّا یُقِیْمَا حُدُوْدَ اللّٰهِ ۙ— فَلَا جُنَاحَ عَلَیْهِمَا فِیْمَا افْتَدَتْ بِهٖ ؕ— تِلْكَ حُدُوْدُ اللّٰهِ فَلَا تَعْتَدُوْهَا ۚ— وَمَنْ یَّتَعَدَّ حُدُوْدَ اللّٰهِ فَاُولٰٓىِٕكَ هُمُ الظّٰلِمُوْنَ ۟

(மீட்பதற்கு அனுமதியுள்ள) விவாகரத்து இருமுறை (மட்டும்) ஆகும். (அந்த தவணைக்குள்) நல்ல முறையில் (அவளை) தடுத்து (மனைவியாக) வைத்தல் வேண்டும். அல்லது அழகிய முறையில் விட்டுவிடுதல் வேண்டும். (ஆண்களாகிய) நீங்கள் (பெண்களாகிய) அவர்களுக்குக் கொடுத்ததிலிருந்து (-மஹ்ர் தொகை அல்லது மஹ்ர் பொருளிலிருந்து) எதையும் திரும்ப வாங்குவது உங்களுக்கு ஆகுமானதல்ல. (ஆனால், திருமண வாழ்க்கையில் மீண்டும் இணைந்தால்) அல்லாஹ்வின் சட்டங்களை அவ்விருவரும் நிலைநிறுத்த மாட்டார்கள் என்று அவ்விருவரும் பயந்தாலே தவிர. அவ்விருவரும் அல்லாஹ்வின் சட்டங்களை நிலைநிறுத்தமாட்டார்கள் என (நடுவர்களாகிய) நீங்கள் பயந்தால், அவள் (தனக்கு கொடுக்கப்பட்ட மஹ்ரிலிருந்து) எதை (திரும்ப) கொடுத்து (தன்னை) விடுவிப்பாளோ அதில் அவ்விருவர் மீதும் அறவே குற்றம் இல்லை. இவை அல்லாஹ்வின் சட்டங்களாகும். ஆகவே, இவற்றை மீறாதீர்கள். எவர்கள் அல்லாஹ்வின் சட்டங்களை மீறுகிறார்களோ அவர்கள்தான் அநியாயக்காரர்கள். info
التفاسير:

external-link copy
230 : 2

فَاِنْ طَلَّقَهَا فَلَا تَحِلُّ لَهٗ مِنْ بَعْدُ حَتّٰی تَنْكِحَ زَوْجًا غَیْرَهٗ ؕ— فَاِنْ طَلَّقَهَا فَلَا جُنَاحَ عَلَیْهِمَاۤ اَنْ یَّتَرَاجَعَاۤ اِنْ ظَنَّاۤ اَنْ یُّقِیْمَا حُدُوْدَ اللّٰهِ ؕ— وَتِلْكَ حُدُوْدُ اللّٰهِ یُبَیِّنُهَا لِقَوْمٍ یَّعْلَمُوْنَ ۟

பிறகு, (மூன்றாவது தலாக் கூறி) அவளை அவன் விவாகரத்து செய்தால் (அதன்) பிறகு அவள் அவனுக்கு ஆகுமாக மாட்டாள், அவனல்லாத (வேறு) ஒரு கணவனை அவள் மணம் புரியும் வரை. (அப்படி மணம் புரிந்து, பிறகு) அவனும் அவளை விவாகரத்து செய்தால் (அந்த இத்தா முடிந்தவுடன் முதல் கணவரும் இவளும் இந்த) இருவரும் அல்லாஹ்வின் சட்டங்களை நிலைநிறுத்துவோம் என்று எண்ணினால் இவ்விருவரும் மீண்டும் திருமணம் செய்வது இவ்விருவர் மீது அறவே குற்றமில்லை. இவை அல்லாஹ்வின் சட்டங்களாகும். அறி(ந்து அமல் செய்)யும் மக்களுக்காக அவற்றை அவன் விவரிக்கிறான். info
التفاسير: