పవిత్ర ఖురాన్ యొక్క భావార్థాల అనువాదం - తమిళ అనువాదం - ఉమర్ షరీఫ్

పేజీ నెంబరు:close

external-link copy
127 : 2

وَاِذْ یَرْفَعُ اِبْرٰهٖمُ الْقَوَاعِدَ مِنَ الْبَیْتِ وَاِسْمٰعِیْلُ ؕ— رَبَّنَا تَقَبَّلْ مِنَّا ؕ— اِنَّكَ اَنْتَ السَّمِیْعُ الْعَلِیْمُ ۟

இன்னும், இப்ராஹீமும் இஸ்மாயீலும் இறை இல்லத்தின் அஸ்திவாரங்களை உயர்த்திய சமயத்தை நினைவு கூர்வாயாக! (அவ்விருவரும் பிரார்த்தனை செய்தார்கள்:) “எங்கள் இறைவா! எங்களிடமிருந்து ஏற்றுக்கொள். நிச்சயமாக நீதான் நன்கு செவியுறுபவன்; மிக அறிந்தவன்.” info
التفاسير:

external-link copy
128 : 2

رَبَّنَا وَاجْعَلْنَا مُسْلِمَیْنِ لَكَ وَمِنْ ذُرِّیَّتِنَاۤ اُمَّةً مُّسْلِمَةً لَّكَ ۪— وَاَرِنَا مَنَاسِكَنَا وَتُبْ عَلَیْنَا ۚ— اِنَّكَ اَنْتَ التَّوَّابُ الرَّحِیْمُ ۟

“எங்கள் இறைவா! எங்களிருவரையும் உனக்கு முழுமையாக பணிந்தவர்களாகவும் எங்கள் சந்ததியிலிருந்தும் உனக்கு முழுமையாக பணிந்து நடக்கின்ற சமுதாயத்தை ஆக்கு! இன்னும், எங்கள் ஹஜ் கிரியைகளின் இடங்களை(யும் அங்கு நாங்கள் செய்ய வேண்டிய அமல்களையும்) எங்களுக்குக் காண்பித்துக் கொடு! இன்னும், எங்களை மன்னித்துவிடு! நிச்சயமாக நீதான் தவ்பாவை (-பாவ மன்னிப்புத் தேடியவரின் பிரார்த்தனையை) அதிகம் அங்கீகரிப்பவன், மகா கருணையாளன்.” info
التفاسير:

external-link copy
129 : 2

رَبَّنَا وَابْعَثْ فِیْهِمْ رَسُوْلًا مِّنْهُمْ یَتْلُوْا عَلَیْهِمْ اٰیٰتِكَ وَیُعَلِّمُهُمُ الْكِتٰبَ وَالْحِكْمَةَ وَیُزَكِّیْهِمْ ؕ— اِنَّكَ اَنْتَ الْعَزِیْزُ الْحَكِیْمُ ۟۠

இன்னும், “எங்கள் இறைவா! (என் சந்ததிகளாகிய) அவர்களில் இருந்தே ஒரு தூதரை அவர்களுக்கு அனுப்பு! அவர் உனது வேத வசனங்களை அவர்களுக்கு ஓதி காண்பிப்பார். இன்னும், வேதத்தையும் ஞானத்தையும் அவர்களுக்குக் கற்பித்து கொடுப்பார். இன்னும், (தீய குணங்களில் இருந்து) அவர்களைப் பரிசுத்தப்படுத்துவார். நிச்சயமாக நீதான் மிகைத்தவன்; மகா ஞானவான்.” info
التفاسير:

external-link copy
130 : 2

وَمَنْ یَّرْغَبُ عَنْ مِّلَّةِ اِبْرٰهٖمَ اِلَّا مَنْ سَفِهَ نَفْسَهٗ ؕ— وَلَقَدِ اصْطَفَیْنٰهُ فِی الدُّنْیَا ۚ— وَاِنَّهٗ فِی الْاٰخِرَةِ لَمِنَ الصّٰلِحِیْنَ ۟

பெரிய மடையனாக இருப்பவனைத் தவிர இப்ராஹீமுடைய (இஸ்லாம்) மார்க்கத்தை (வேறு) யார் வெறுப்பார்? திட்டவட்டமாக நாம் அவரை இவ்வுலகில் தேர்ந்தெடுத்தோம். இன்னும், மறுமையில் நிச்சயமாக அவர் நல்லோரில் இருப்பார். info
التفاسير:

external-link copy
131 : 2

اِذْ قَالَ لَهٗ رَبُّهٗۤ اَسْلِمْ ۙ— قَالَ اَسْلَمْتُ لِرَبِّ الْعٰلَمِیْنَ ۟

(இப்ராஹீமை நோக்கி) அவருடைய இறைவன், “நீ எனக்குப் பணிந்து (முஸ்லிமாகி)விடு!” என்று அவருக்குக் கூறியபோது, அவர் கூறினார்: “அகிலத்தார்களின் இறைவனுக்கு நான் பணிந்து (முஸ்லிமாகி) விட்டேன்.” info
التفاسير:

external-link copy
132 : 2

وَوَصّٰی بِهَاۤ اِبْرٰهٖمُ بَنِیْهِ وَیَعْقُوْبُ ؕ— یٰبَنِیَّ اِنَّ اللّٰهَ اصْطَفٰی لَكُمُ الدِّیْنَ فَلَا تَمُوْتُنَّ اِلَّا وَاَنْتُمْ مُّسْلِمُوْنَ ۟ؕ

இன்னும், இப்ராஹீமும், யஅகூபும் (அகிலங்களின் இறைவனுக்கு பணிந்து முஸ்லிமாக இருக்க வேண்டும் என்ற) அ(ந்த உபதேசத்)தையே தமது பிள்ளைகளுக்கு உபதேசித்தார்கள். “என் பிள்ளைகளே! நிச்சயமாக அல்லாஹ் உங்களுக்காக (இஸ்லாமிய) மார்க்கத்தை தேர்ந்தெடுத்தான். ஆகவே, ஒருபோதும் நீங்கள் மரணித்து விடாதீர்கள், நீங்கள் முஸ்லிம்களாக இருக்கும் நிலையில் தவிர.” info
التفاسير:

external-link copy
133 : 2

اَمْ كُنْتُمْ شُهَدَآءَ اِذْ حَضَرَ یَعْقُوْبَ الْمَوْتُ ۙ— اِذْ قَالَ لِبَنِیْهِ مَا تَعْبُدُوْنَ مِنْ بَعْدِیْ ؕ— قَالُوْا نَعْبُدُ اِلٰهَكَ وَاِلٰهَ اٰبَآىِٕكَ اِبْرٰهٖمَ وَاِسْمٰعِیْلَ وَاِسْحٰقَ اِلٰهًا وَّاحِدًا ۖۚ— وَّنَحْنُ لَهٗ مُسْلِمُوْنَ ۟

(யூதர்களே!) யஅகூபுக்கு மரணம் வந்தபோது (நீங்கள் அங்கு) சாட்சிகளாக இருந்தீர்களா? அவர் தமது பிள்ளைகளை நோக்கி, “எனக்குப் பின்னர் யாரை வணங்குவீர்கள்?” எனக் கூறியபோது (அவர்கள்) கூறினார்கள்: “நாம் உமது கடவுளை, இன்னும் இப்ராஹீம், இஸ்மாயீல், இஸ்ஹாக் ஆகிய உமது மூதாதைகளின் கடவுளை - ஒரே ஒரு கடவுளை - வணங்குவோம். நாங்கள் அவனுக்கு - முற்றிலும் பணிந்த முஸ்லிம்களாக இருப்போம்.” info
التفاسير:

external-link copy
134 : 2

تِلْكَ اُمَّةٌ قَدْ خَلَتْ ۚ— لَهَا مَا كَسَبَتْ وَلَكُمْ مَّا كَسَبْتُمْ ۚ— وَلَا تُسْـَٔلُوْنَ عَمَّا كَانُوْا یَعْمَلُوْنَ ۟

அவர்கள் சென்றுவிட்ட சமுதாயம் ஆவார்கள். அவர்கள் செய்த (செயல்களின் கூலியான)து அவர்களுக்கு கிடைக்கும். நீங்கள் செய்த (செயல்களின் கூலியான)து உங்களுக்கு கிடைக்கும். அவர்கள் செய்து கொண்டிருந்தது பற்றி நீங்கள் விசாரிக்கப்பட மாட்டீர்கள் info
التفاسير: