ශුද්ධවූ අල් කුර්ආන් අර්ථ කථනය - දෙමළ පරිවර්තනය- උමර් ෂරීෆ්

පිටු අංක:close

external-link copy
19 : 57

وَالَّذِیْنَ اٰمَنُوْا بِاللّٰهِ وَرُسُلِهٖۤ اُولٰٓىِٕكَ هُمُ الصِّدِّیْقُوْنَ ۖۗ— وَالشُّهَدَآءُ عِنْدَ رَبِّهِمْ ؕ— لَهُمْ اَجْرُهُمْ وَنُوْرُهُمْ ؕ— وَالَّذِیْنَ كَفَرُوْا وَكَذَّبُوْا بِاٰیٰتِنَاۤ اُولٰٓىِٕكَ اَصْحٰبُ الْجَحِیْمِ ۟۠

இன்னும், எவர்கள் அல்லாஹ்வையும் அவனது தூதர்களையும் நம்பிக்கை கொண்டார்களோ அவர்கள்தான் “ஸித்தீக்” (என்ற மிக உண்மையாளர்கள்) ஆவார்கள். இன்னும், (அல்லாஹ்வின் பாதையில் கொல்லப்பட்ட) ஷுஹதா, அவர்களுக்கு அவர்களின் கூலியும் அவர்களின் ஒளியும் அவர்களின் இறைவனிடம் உண்டு. எவர்கள் நிராகரித்தார்களோ; இன்னும், நமது வசனங்களை பொய்ப்பித்தார்களோ அவர்கள்தான் நரகவாசிகள் ஆவார்கள். info
التفاسير:

external-link copy
20 : 57

اِعْلَمُوْۤا اَنَّمَا الْحَیٰوةُ الدُّنْیَا لَعِبٌ وَّلَهْوٌ وَّزِیْنَةٌ وَّتَفَاخُرٌ بَیْنَكُمْ وَتَكَاثُرٌ فِی الْاَمْوَالِ وَالْاَوْلَادِ ؕ— كَمَثَلِ غَیْثٍ اَعْجَبَ الْكُفَّارَ نَبَاتُهٗ ثُمَّ یَهِیْجُ فَتَرٰىهُ مُصْفَرًّا ثُمَّ یَكُوْنُ حُطَامًا ؕ— وَفِی الْاٰخِرَةِ عَذَابٌ شَدِیْدٌ ۙ— وَّمَغْفِرَةٌ مِّنَ اللّٰهِ وَرِضْوَانٌ ؕ— وَمَا الْحَیٰوةُ الدُّنْیَاۤ اِلَّا مَتَاعُ الْغُرُوْرِ ۟

அறிந்து கொள்ளுங்கள்! “உலக வாழ்க்கை எல்லாம் விளையாட்டும் வேடிக்கையும் அலங்காரமும் உங்களுக்கு மத்தியில் பெருமை அடிப்பதும் செல்வங்களிலும் பிள்ளைகளிலும் அதிகத்தின் போட்டியும்தான். (இவ்வாழ்க்கை) ஒரு மழையைப் போன்றுதான், அதன் விளைச்சல் விவசாயிகளை கவர்ந்தது. பிறகு, அது காய்ந்து விடுகிறது. ஆக, அதை நீர் மஞ்சளாக பார்க்கிறீர். பிறகு, அது குப்பையாக ஆகிவிடுகிறது. இன்னும், மறுமையில் (நிராகரிப்பாளர்களுக்கு) கடுமையான தண்டனையும் (நம்பிக்கையாளர்களுக்கு) அல்லாஹ்வின் புறத்தில் இருந்து மன்னிப்பும் திருப்பொருத்தமும் உண்டு. மயக்கக்கூடிய இன்பமாகவே தவிர உலக வாழ்க்கை இல்லை.” info
التفاسير:

external-link copy
21 : 57

سَابِقُوْۤا اِلٰی مَغْفِرَةٍ مِّنْ رَّبِّكُمْ وَجَنَّةٍ عَرْضُهَا كَعَرْضِ السَّمَآءِ وَالْاَرْضِ ۙ— اُعِدَّتْ لِلَّذِیْنَ اٰمَنُوْا بِاللّٰهِ وَرُسُلِهٖ ؕ— ذٰلِكَ فَضْلُ اللّٰهِ یُؤْتِیْهِ مَنْ یَّشَآءُ ؕ— وَاللّٰهُ ذُو الْفَضْلِ الْعَظِیْمِ ۟

உங்கள் இறைவனின் மன்னிப்பு இன்னும் சொர்க்கத்தின் பக்கம் முந்துங்கள். அதன் அகலம் வானம் பூமியின் அகலத்தைப் போலாகும். அது அல்லாஹ்வையும் அவனது தூதரையும் நம்பிக்கை கொண்டவர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அது அல்லாஹ்வின் சிறப்பா(ன அருளா)கும். அவன் நாடுபவர்களுக்கு அதை அவன் கொடுக்கிறான். அல்லாஹ் மகத்தான அருளுடையவன் ஆவான். info
التفاسير:

external-link copy
22 : 57

مَاۤ اَصَابَ مِنْ مُّصِیْبَةٍ فِی الْاَرْضِ وَلَا فِیْۤ اَنْفُسِكُمْ اِلَّا فِیْ كِتٰبٍ مِّنْ قَبْلِ اَنْ نَّبْرَاَهَا ؕ— اِنَّ ذٰلِكَ عَلَی اللّٰهِ یَسِیْرٌ ۟ۙ

பூமியிலும் உங்களிலும் ஒரு சோதனை ஏற்படுவதில்லை, நாம் (பூமியில், அல்லது உங்களில்) அதை உருவாக்குவதற்கு முன்னர் அது விதியில் (எழுதப்பட்டு) இருந்தே தவிர. நிச்சயமாக இது அல்லாஹ்விற்கு மிக எளிதானதாகும். info
التفاسير:

external-link copy
23 : 57

لِّكَیْلَا تَاْسَوْا عَلٰی مَا فَاتَكُمْ وَلَا تَفْرَحُوْا بِمَاۤ اٰتٰىكُمْ ؕ— وَاللّٰهُ لَا یُحِبُّ كُلَّ مُخْتَالٍ فَخُوْرِ ۟ۙ

(இதை நாம் உங்களுக்கு அறிவித்தோம்.) ஏனெனில், உங்களுக்கு தவறிவிட்டதற்காக நீங்கள் துக்கப்படாமல் இருப்பதற்காகவும், அவன் உங்களுக்கு கொடுத்ததைக் கொண்டு நீங்கள் பெருமைப்படாமல் இருப்பதற்காகவும் ஆகும். இன்னும், அகம்பாவக்காரர்கள், தற்பெருமையடிப்பவர்கள் எல்லோரையும் அல்லாஹ் நேசிக்க மாட்டான். info
التفاسير:

external-link copy
24 : 57

١لَّذِیْنَ یَبْخَلُوْنَ وَیَاْمُرُوْنَ النَّاسَ بِالْبُخْلِ ؕ— وَمَنْ یَّتَوَلَّ فَاِنَّ اللّٰهَ هُوَ الْغَنِیُّ الْحَمِیْدُ ۟

இவர்கள் கருமித்தனம் காட்டுகிறார்கள். இன்னும், மக்களை கருமித்தனத்திற்கு ஏவுகிறார்கள் (-ஊக்குவிக்கிறார்கள், தூண்டுகிறார்கள்). யார் (அல்லாஹ்விற்கு கீழ்ப்படிவதை விட்டும்) விலகுவாரோ அவர் தனக்குத்தான் தீங்கிழைத்துக் கொண்டார். நிச்சயமாக அல்லாஹ்தான் மகா நிறைவானவன் (அவனுக்கு யாருடைய தேவையும் இல்லை), மகா புகழாளன். (எவரின் புறக்கணிப்பாலும் அவனது கண்ணியமும் புகழும் குறையாது.) info
التفاسير: