ශුද්ධවූ අල් කුර්ආන් අර්ථ කථනය - ශුද්ධ වූ අල්කුර්ආන් අර්ථ විවරණයේ සංෂිප්ත අනුවාදය - දෙමළ පරිවර්තනය

external-link copy
38 : 3

هُنَالِكَ دَعَا زَكَرِیَّا رَبَّهٗ ۚ— قَالَ رَبِّ هَبْ لِیْ مِنْ لَّدُنْكَ ذُرِّیَّةً طَیِّبَةً ۚ— اِنَّكَ سَمِیْعُ الدُّعَآءِ ۟

3.38. வழக்கத்திற்கு மாறாக அல்லாஹ் மர்யமுக்கு உணவளித்ததைக் கண்ட ஸகரிய்யா அவன் தனக்கும் - இந்த தள்ளாத வயதிலும், மனைவி மலடியாக இருந்தபோதும் - ஒரு குழந்தையை வழங்குவான் என்று நம்பிக்கை வைத்தார். “என் இறைவனே! தூய்மையான ஒரு ஆண்மகனை எனக்குத் தந்தருள்வாயாக. நிச்சயமாக நீ உன்னிடம் பிரார்த்திப்பவர்களின் பிரார்த்தனையை செவியேற்கக்கூடியவன்; அவர்களின் நிலையை நன்கறிந்தவன்” என்று பிரார்த்தனை செய்தார். info
التفاسير:
මෙ⁣ම පිටුවේ තිබෙන වැකිවල ප්‍රයෝජන:
• عناية الله تعالى بأوليائه، فإنه سبحانه يجنبهم السوء، ويستجيب دعاءهم.
1. அல்லாஹ் தன் நேசர்களின்பால் தனிக்கவனம் செலுத்துகிறான். தீமைகளிலிருந்து அவர்களைப் பாதுகாக்கிறான்; அவர்களின் பிரார்த்தனையை அங்கீகரிக்கிறான். info

• فَضْل مريم عليها السلام حيث اختارها الله على نساء العالمين، وطهَّرها من النقائص، وجعلها مباركة.
2. உலகிலுள்ள பெண்கள் அனைவரைக் காட்டிலும் அல்லாஹ் மர்யமைத் தேர்ந்தெடுத்துள்ளான்; குறைகளிலிருந்து அவரைத் தூய்மைப்படுத்தி, பாக்கியம்மிக்கவராக அவரை ஆக்கியுள்ளான். info

• كلما عظمت نعمة الله على العبد عَظُم ما يجب عليه من شكره عليها بالقنوت والركوع والسجود وسائر العبادات.
3. அடியானின் மீது அல்லாஹ்வின் அருட்கொடைகள் அதிகரிக்கும் அளவு நின்றுவணங்குதல், ருகூஃ, ஸுஜுத், ஏனைய வணக்கங்கள் ஆகியவற்றின் மூலம் நன்றிசெலுத்துவதும் அவன்மீது கடமையாகி விடுகிறது. info

• مشروعية القُرْعة عند الاختلاف فيما لا بَيِّنة عليه ولا قرينة تشير إليه.
4. தெளிவான ஆதாரங்கள் இல்லாத விடயங்களில் கருத்துவேறுபாடு கொள்ளும் போது சீட்டுக் குலுக்கிப் போட்டுக் கொள்ளலாம். info