ශුද්ධවූ අල් කුර්ආන් අර්ථ කථනය - දෙමළ පරිවර්තනය - අබ්දුල් හමීද් බාකවී

පිටු අංක:close

external-link copy
34 : 10

قُلْ هَلْ مِنْ شُرَكَآىِٕكُمْ مَّنْ یَّبْدَؤُا الْخَلْقَ ثُمَّ یُعِیْدُهٗ ؕ— قُلِ اللّٰهُ یَبْدَؤُا الْخَلْقَ ثُمَّ یُعِیْدُهٗ فَاَنّٰی تُؤْفَكُوْنَ ۟

34. (அவர்களை நோக்கி) ‘‘புதிதாக படைப்புகளை உண்டுபண்ணக் கூடியதும் (மரணித்த பின்) அவற்றை உயிர்ப்பிக்கக் கூடியதும் நீங்கள் இணைவைத்து வணங்கும் தெய்வங்களில் ஏதும் உண்டா?'' என்று (நபியே!) நீர் கேட்பீராக. (அதற்கு அவர்கள் பதில் கூறுவதென்ன? நீர் அவர்களை நோக்கி) ‘‘படைப்புகளை முதலாவதாக உற்பத்தி செய்கிறவனும் (அவை மரணித்த) பின்னர் அவற்றை உயிர்ப்பிக்கக் கூடியவனும் அல்லாஹ்தான்'' (என்று கூறி ‘‘இந்த உண்மையை விட்டு) நீங்கள் எங்குச் செல்கிறீர்கள்?'' என்றும் கேட்பீராக. info
التفاسير:

external-link copy
35 : 10

قُلْ هَلْ مِنْ شُرَكَآىِٕكُمْ مَّنْ یَّهْدِیْۤ اِلَی الْحَقِّ ؕ— قُلِ اللّٰهُ یَهْدِیْ لِلْحَقِّ ؕ— اَفَمَنْ یَّهْدِیْۤ اِلَی الْحَقِّ اَحَقُّ اَنْ یُّتَّبَعَ اَمَّنْ لَّا یَهِدِّیْۤ اِلَّاۤ اَنْ یُّهْدٰی ۚ— فَمَا لَكُمْ ۫— كَیْفَ تَحْكُمُوْنَ ۟

35. (‘‘சத்திய மார்க்கத்தில் செலுத்தக்கூடியது நீங்கள் வணங்கும் தெய்வங்களில் ஏதும் உண்டா?'' என்றும் கேட்பீராக. (அதற்கு அவர்கள் பதில் கூறுவதென்ன? நீர் அவர்களை நோக்கி) ‘‘அல்லாஹ்தான் சத்திய மார்க்கத்தில் செலுத்தக்கூடியவன்'' (என்று கூறி) ‘‘நேரான வழியில் செலுத்தக்கூடியவனைப் பின்பற்றுவது தகுமா? அல்லது பிறர் அதற்கு வழி காண்பிக்காமல் தானாகவே வழி செல்ல முடியாததைப் பின்பற்றுவது தகுமா? உங்களுக்கு என்ன (கேடு) நேர்ந்தது? (இதற்கு மாறாக) நீங்கள் எவ்வாறு முடிவு செய்யலாம்'' என்றும் கேட்பீராக. info
التفاسير:

external-link copy
36 : 10

وَمَا یَتَّبِعُ اَكْثَرُهُمْ اِلَّا ظَنًّا ؕ— اِنَّ الظَّنَّ لَا یُغْنِیْ مِنَ الْحَقِّ شَیْـًٔا ؕ— اِنَّ اللّٰهَ عَلِیْمٌۢ بِمَا یَفْعَلُوْنَ ۟

36. அவர்களில் பெரும்பாலானவர்கள் வீண் சந்தேகத்தையே தவிர வேறொன்றையும் பின்பற்றுவது இல்லை. நிச்சயமாக வீண் சந்தேகம் உண்மையை அறிவதற்கு ஒரு சிறிதும் பயன்படாது. நிச்சயமாக அல்லாஹ் அவர்கள் செய்பவற்றை நன்கறிந்தவன். info
التفاسير:

external-link copy
37 : 10

وَمَا كَانَ هٰذَا الْقُرْاٰنُ اَنْ یُّفْتَرٰی مِنْ دُوْنِ اللّٰهِ وَلٰكِنْ تَصْدِیْقَ الَّذِیْ بَیْنَ یَدَیْهِ وَتَفْصِیْلَ الْكِتٰبِ لَا رَیْبَ فِیْهِ مِنْ رَّبِّ الْعٰلَمِیْنَ ۟۫

37. இந்தக் குர்ஆன் அல்லாஹ்வினால் (அருளப்பட்டதே) தவிர (மற்ற எவராலும்) பொய்யாகக் கற்பனை செய்யப்பட்டதல்ல. மேலும், இதற்கு முன்னுள்ள வேதங்களை இது உண்மையாக்கி வைத்து அவற்றில் உள்ளவற்றை விவரித்துக் கூறுவதாகவும் இருக்கிறது. ஆகவே, (இது) உலகத்தாரின் இறைவனிடமிருந்து வந்தது என்பதில் அறவே சந்தேகமில்லை. info
التفاسير:

external-link copy
38 : 10

اَمْ یَقُوْلُوْنَ افْتَرٰىهُ ؕ— قُلْ فَاْتُوْا بِسُوْرَةٍ مِّثْلِهٖ وَادْعُوْا مَنِ اسْتَطَعْتُمْ مِّنْ دُوْنِ اللّٰهِ اِنْ كُنْتُمْ صٰدِقِیْنَ ۟

38. இதை (நம் தூதராகிய) ‘‘அவர் பொய்யாகக் கற்பனை செய்து கொண்டார்'' என அவர்கள் கூறுகின்றனரா? (அவ்வாறாயின் நபியே!) கூறுவீராக: ‘‘நீங்கள் உண்மை சொல்பவர்களாக இருந்தால் அல்லாஹ்வை தவிர்த்து உங்களுக்குச் சாத்தியமானவர்கள் அனைவரையும் (உங்களுக்குத் துணையாக) அழைத்துக் கொண்டு (நீங்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து,) இதிலுள்ளதைப் போன்றதோர் அத்தியாயத்தை (அமைத்து)க் கொண்டு வாருங்கள்.'' info
التفاسير:

external-link copy
39 : 10

بَلْ كَذَّبُوْا بِمَا لَمْ یُحِیْطُوْا بِعِلْمِهٖ وَلَمَّا یَاْتِهِمْ تَاْوِیْلُهٗ ؕ— كَذٰلِكَ كَذَّبَ الَّذِیْنَ مِنْ قَبْلِهِمْ فَانْظُرْ كَیْفَ كَانَ عَاقِبَةُ الظّٰلِمِیْنَ ۟

39. எனினும், அவர்கள் தங்கள் அறிவால் தெரிந்து கொள்ள முடியாததையும், (நிகழுமென) அதில் கூறப்பட்டவை நிகழாதிருக்கையில் அவற்றையும் (அதில் கூறப்பட்ட மற்றவற்றையும்) பொய்யென அவர்கள் கூறுகின்றனர்.இவர்களுக்கு முன்னிருந்தவர்களும் இவ்வாறே (தங்கள் அறிவுக்கு எட்டாததையும், தாங்கள் காணாததையும்) பொய்யெனக் கூறிக்கொண்டிருந்தனர். ஆகவே, அந்த அநியாயக்காரர்களின் முடிவு எப்படி முடிந்தது என்பதை (நபியே!) கவனிப்பீராக. info
التفاسير:

external-link copy
40 : 10

وَمِنْهُمْ مَّنْ یُّؤْمِنُ بِهٖ وَمِنْهُمْ مَّنْ لَّا یُؤْمِنُ بِهٖ ؕ— وَرَبُّكَ اَعْلَمُ بِالْمُفْسِدِیْنَ ۟۠

40. (திரு குர்ஆனில் கூறப்பட்டவை நிகழுமென) அதை நம்பக்கூடியவரும் அவர்களில் உள்ளனர்; (நிகழ்ந்த பின்னரும்) அதை நம்பாதவரும் அவர்களில் உள்ளனர். (அதை நம்பாத) இந்த விஷமிகளை உமது இறைவன் நன்கறிவான். info
التفاسير:

external-link copy
41 : 10

وَاِنْ كَذَّبُوْكَ فَقُلْ لِّیْ عَمَلِیْ وَلَكُمْ عَمَلُكُمْ ۚ— اَنْتُمْ بَرِیْٓـُٔوْنَ مِمَّاۤ اَعْمَلُ وَاَنَا بَرِیْٓءٌ مِّمَّا تَعْمَلُوْنَ ۟

41. (நபியே!) உம்மை பொய்யரென அவர்கள் கூறினால் (அவர்களை நோக்கி ‘‘நன்மையோ தீமையோ) என் செயல்(களின் பலன்) எனக்குரியது; (அவ்வாறே) உங்கள் செயல்(களின் பலன்) உங்களுக்குரியது. என் செயலில் இருந்து நீங்கள் விடுபட்டவர்கள்; உங்கள் செயலில் இருந்து நான் விடுபட்டவன்'' என்று கூறுவீராக. info
التفاسير:

external-link copy
42 : 10

وَمِنْهُمْ مَّنْ یَّسْتَمِعُوْنَ اِلَیْكَ ؕ— اَفَاَنْتَ تُسْمِعُ الصُّمَّ وَلَوْ كَانُوْا لَا یَعْقِلُوْنَ ۟

42. அவர்களில், உங்கள் வார்த்தையைக் கேட்போ(ரைப் போல் பாவனை செய்வோ)ரும் இருக்கின்றனர். (அதனால் அவர்கள் உங்களுக்கு கட்டுப்பட்டு விட்டார்கள் என்று நீர் எண்ணி விட்டீரா?) ஒன்றையுமே (செவியுற்று) அறிந்து கொள்ள முடியாத முழுச் செவிடர்களை செவி கேட்கும்படிச் செய்ய உம்மால் முடியுமா? info
التفاسير: