Ibisobanuro bya qoran ntagatifu - Ibisobanuro bya Qur'an Ntagatifu mu rurimi rw'igitamili - Omar Sharif

அல்ஹஜ்

external-link copy
1 : 22

یٰۤاَیُّهَا النَّاسُ اتَّقُوْا رَبَّكُمْ ۚ— اِنَّ زَلْزَلَةَ السَّاعَةِ شَیْءٌ عَظِیْمٌ ۟

மக்களே! உங்கள் இறைவனை அஞ்சுங்கள். நிச்சயமாக மறுமை (நிகழும்போது பூமி)யின் அதிர்வு மிகப்பெரிய ஒன்றாக இருக்கும். info
التفاسير:

external-link copy
2 : 22

یَوْمَ تَرَوْنَهَا تَذْهَلُ كُلُّ مُرْضِعَةٍ عَمَّاۤ اَرْضَعَتْ وَتَضَعُ كُلُّ ذَاتِ حَمْلٍ حَمْلَهَا وَتَرَی النَّاسَ سُكٰرٰی وَمَا هُمْ بِسُكٰرٰی وَلٰكِنَّ عَذَابَ اللّٰهِ شَدِیْدٌ ۟

நீங்கள் அதை பார்க்கின்ற நாளில், பாலூட்டுகின்ற ஒவ்வொரு பெண்ணும் தான் பால் கொடுத்ததை (-அந்த குழந்தையை) மறந்து விடுவாள். இன்னும், கர்ப்பம் தரித்த ஒவ்வொரு பெண்ணும் தமது கர்ப்பத்தை (குறை மாதத்தில்) ஈன்று விடுவாள். இன்னும், மக்களை மயக்கமுற்றவர்களாக நீர் பார்ப்பீர். ஆனால், அவர்கள் (மதுவினால்) மயக்கமுற்றவர்கள் அல்லர். என்றாலும், அல்லாஹ்வுடைய தண்டனை மிகக் கடினமானதாகும். info
التفاسير:

external-link copy
3 : 22

وَمِنَ النَّاسِ مَنْ یُّجَادِلُ فِی اللّٰهِ بِغَیْرِ عِلْمٍ وَّیَتَّبِعُ كُلَّ شَیْطٰنٍ مَّرِیْدٍ ۟ۙ

அல்லாஹ்வின் (ஆற்றல்) விஷயத்தில் கல்வியறிவு இன்றி தர்க்கிப்பவனும் மக்களில் இருக்கிறான். (இது விஷயத்தில்) திமிரு பிடித்த எல்லா ஷைத்தான்களையும் அவன் பின்பற்றுகிறான். info
التفاسير:

external-link copy
4 : 22

كُتِبَ عَلَیْهِ اَنَّهٗ مَنْ تَوَلَّاهُ فَاَنَّهٗ یُضِلُّهٗ وَیَهْدِیْهِ اِلٰی عَذَابِ السَّعِیْرِ ۟

அவன் (-ஷைத்தான்) மீது விதிக்கப்பட்டதாவது, யார் அவனை பின்பற்றுகிறாரோ அவரை நிச்சயமாக அவன் வழிகெடுப்பான். இன்னும், கொழுந்துவிட்டெரியும் நரக தண்டனையின் பக்கம் அவருக்கு வழிகாட்டுவான். info
التفاسير:

external-link copy
5 : 22

یٰۤاَیُّهَا النَّاسُ اِنْ كُنْتُمْ فِیْ رَیْبٍ مِّنَ الْبَعْثِ فَاِنَّا خَلَقْنٰكُمْ مِّنْ تُرَابٍ ثُمَّ مِنْ نُّطْفَةٍ ثُمَّ مِنْ عَلَقَةٍ ثُمَّ مِنْ مُّضْغَةٍ مُّخَلَّقَةٍ وَّغَیْرِ مُخَلَّقَةٍ لِّنُبَیِّنَ لَكُمْ ؕ— وَنُقِرُّ فِی الْاَرْحَامِ مَا نَشَآءُ اِلٰۤی اَجَلٍ مُّسَمًّی ثُمَّ نُخْرِجُكُمْ طِفْلًا ثُمَّ لِتَبْلُغُوْۤا اَشُدَّكُمْ ۚ— وَمِنْكُمْ مَّنْ یُّتَوَفّٰی وَمِنْكُمْ مَّنْ یُّرَدُّ اِلٰۤی اَرْذَلِ الْعُمُرِ لِكَیْلَا یَعْلَمَ مِنْ بَعْدِ عِلْمٍ شَیْـًٔا ؕ— وَتَرَی الْاَرْضَ هَامِدَةً فَاِذَاۤ اَنْزَلْنَا عَلَیْهَا الْمَآءَ اهْتَزَّتْ وَرَبَتْ وَاَنْۢبَتَتْ مِنْ كُلِّ زَوْجٍ بَهِیْجٍ ۟

மக்களே! நீங்கள் (மறுமையில்) எழுப்பப்படுவதில் சந்தேகத்தில் இருந்தால், (நாம் கூறும் இதை சிந்தித்துப் பாருங்கள்!) நிச்சயமாக நாம் உங்களை மண்ணிலிருந்து படைத்தோம். பின்னர், இந்திரியத்திலிருந்தும் பின்னர், இரத்தக் கட்டியிலிருந்தும் பின்னர், முழுமையான உருவம் கொடுக்கப்பட்ட, முழுமையான உருவம் கொடுக்கப்படாத சதை துண்டிலிருந்தும் (உங்களை படைத்து உருவாக்கினோம்). (இதை நாம் கூறுவது) ஏனெனில், (நமது ஆற்றலை) உங்களுக்கு விவரிப்பதற்காக ஆகும். (முழு குழந்தையாக பிறக்கவேண்டும் என்று) நாம் நாடியதை கர்ப்பப் பைகளில் குறிப்பிட்ட (முழு) தவணை வரை தங்க வைக்கிறோம். பிறகு, உங்களை குழந்தைகளாக வெளியாக்குகிறோம். பிறகு, நீங்கள் உங்களது (முழு அறிவையும்) வலிமையை(யும்) அடைவதற்காக (உங்களை உயிர் வாழவைக்கிறோம்). இன்னும், (வாலிபத்தை அடைவதற்கு முன்னரே) உயிர் கைப்பற்றப்படுகின்றவரும் உங்களில் உண்டு. இன்னும், தள்ளாத வயது வரை (வாழ்வு அளிக்கப்பட்டு, பின்னர் குழந்தையாக இருந்ததைப் போன்ற பலவீனமான நிலைக்கு) திருப்பப்படுகின்றவரும் உங்களில் உண்டு, இறுதியாக, (வயோதிகத்தில் மனிதன், தான் பலவற்றை) அறிந்திருந்ததற்குப் பின்னர் எதையும் அறியாதவனாக ஆகிவிடுகிறான். இன்னும், பூமி அழிந்து போய்விட்டதாக (-காய்ந்து போனதாக) பார்க்கிறீர். ஆக, அதன்மீது நாம் மழைநீரை இறக்கினால் அது (உயிர்ப் பெற்று தாவரங்களால்) அசைகிறது. இன்னும், (அதிக மழையினால் புற்பூண்டுகளும் விளைச்சல்களும்) உயர்ந்து வளர்கிறது. இன்னும், எல்லா விதமான அழகிய தாவரங்களை அது முளைக்க வைக்கிறது. info
التفاسير: