Ibisobanuro bya qoran ntagatifu - Ibisobanuro bya Qur'an Ntagatifu mu rurimi rw'igitamili, bikaba ari incamacye y'ibisobanuro bya Qur'an Ntagatifu.

external-link copy
47 : 9

لَوْ خَرَجُوْا فِیْكُمْ مَّا زَادُوْكُمْ اِلَّا خَبَالًا وَّلَاۡاَوْضَعُوْا خِلٰلَكُمْ یَبْغُوْنَكُمُ الْفِتْنَةَ ۚ— وَفِیْكُمْ سَمّٰعُوْنَ لَهُمْ ؕ— وَاللّٰهُ عَلِیْمٌۢ بِالظّٰلِمِیْنَ ۟

9.47. இந்த நயவஞ்சகர்கள் உங்களுடன் புறப்படாமல் இருப்பதே சிறந்ததாகும். அவர்கள் உங்களுடன் புறப்பட்டால், போரிடச் செய்யாமல் இருப்பதற்கான முயற்சி, சந்தேகங்களைத் தோற்றுவித்தல் போன்றவற்றின் ஊடாக குழப்பத்தையே ஏற்படுத்துவார்கள். உங்களிடையே பிரிவினையை ஏற்படுத்த கோல் மூட்டுவதில் விரைவாக ஈடுபடுவார்கள். -நம்பிக்கையாளர்களே!- அவர்கள் பரப்பும் பொய்யைக் கேட்டு அதனை ஏற்றுப் பரப்புவர்களும் உங்களிடையே உள்ளனர். இதனால் உங்களிடையே கருத்து வேறுபாடு தோன்றி விடும். நம்பிக்கையாளர்களிடையே சூழ்ச்சிகளையும் சந்தேகங்களையும் ஏற்படுத்தும் நயவஞ்சகம் கொண்ட அநியாயக்காரர்களை அல்லாஹ் நன்கறிந்தவன். info
التفاسير:
Inyungu dukura muri ayat kuri Uru rupapuro:
• وجوب الجهاد بالنفس والمال كلما دعت الحاجة.
1. தேவை ஏற்படும் பொழுதெல்லாம் உடலாலும் பொருளாலும் ஜிஹாது செய்வது கட்டாயமாகும். info

• الأيمان الكاذبة توجب الهلاك.
2. பொய்ச் சத்தியம் அழிவுக்கு காரணமாக அமைகிறது. info

• وجوب الاحتراز من العجلة، ووجوب التثبت والتأني، وترك الاغترار بظواهر الأمور، والمبالغة في التفحص والتريث.
3. அவசரத்தை விட்டும் தவிர்ந்து கொள்வதும் உறுதிப்படுத்திக் கொள்வதும் நிதானமாகச் செயற்படுவதும் அவசியமாகும். வெளிரங்கத்தை வைத்து ஏமாறாது மென்மேலும் சோதித்து நிதானமாகச் செயலாற்றுவது கடமையாகும். info

• من عناية الله بالمؤمنين تثبيطه المنافقين ومنعهم من الخروج مع عباده المؤمنين، رحمة بالمؤمنين ولطفًا من أن يداخلهم من لا ينفعهم بل يضرهم.
4. நயவஞ்சகர்கள் நம்பிக்கையாளர்களான தனது அடியார்களுடன் போருக்காக புறப்படுவதைத் தடுப்பதற்காக அவர்களை அல்லாஹ் விரக்தியூட்டியமை நம்பிக்கையாளர்களின் மீதான அல்லாஹ்வின் அக்கறையின் வெளிப்பாடாகும். அவர்களுக்கு நன்மை பயக்காத மாறாக தீங்கு விளைவிப்போர் அவர்களுக்குள் நுழையாமல் இருக்கு முகமாக நம்பிக்கையாளர்களின் மீது கொண்ட அன்பினால் செய்த ஏற்பாடே இதுவாகும். info