Ibisobanuro bya qoran ntagatifu - Ibisobanuro bya Qur'an Ntagatifu mu rurimi rw'igitamili, bikaba ari incamacye y'ibisobanuro bya Qur'an Ntagatifu.

external-link copy
90 : 6

اُولٰٓىِٕكَ الَّذِیْنَ هَدَی اللّٰهُ فَبِهُدٰىهُمُ اقْتَدِهْ ؕ— قُلْ لَّاۤ اَسْـَٔلُكُمْ عَلَیْهِ اَجْرًا ؕ— اِنْ هُوَ اِلَّا ذِكْرٰی لِلْعٰلَمِیْنَ ۟۠

6.90. இந்த தூதர்களும் அவர்களுடன் இணைத்துக் கூறப்பட்ட அவர்களது மூதாதையர்கள், சந்ததிகள், சகோதரர்கள் ஆகியோர்தான் உண்மையில் நேர்வழி பெற்றவர்கள். எனவே அவர்களை நீர் பின்பற்றுவீராக. முன்மாதிரயாக எடுத்துக்கொள்வீராக. தூதரே! உம் சமூகத்தினரிடம் கூறுவீராக: இந்த குர்ஆனை எடுத்துரைப்பதற்கு நான் உங்களிடம் எந்த கூலியையும் வேண்டவில்லை. இது உலகிலுள்ள மனிதர்கள், ஜின்கள் அனைவருக்கும் ஓர் அறிவுரையேயாகும். இதன் மூலம் நேரான வழியை அவர்கள் அடைந்துகொள்ளலாம். info
التفاسير:
Inyungu dukura muri ayat kuri Uru rupapuro:
• من فضائل التوحيد أنه يضمن الأمن للعبد، خاصة في الآخرة حين يفزع الناس.
1. ஓரிறைக் கொள்கையின் சிறப்புக்களில் ஒன்றுதான், அடியானுக்கு பாதுகாப்புக்கு உத்தரவாதம் அளிப்பதாகும். குறிப்பாக மனிதர்கள் பதற்றமடைந்திருக்கும் மறுமை நாளின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் அளிக்கின்றது. info

• تُقَرِّر الآيات أن جميع من سبق من الأنبياء إنما بَلَّغوا دعوتهم بتوفيق الله تعالى لا بقدرتهم.
2. முந்தைய தூதர்கள் அனைவரும் அல்லாஹ்வின் உதவியைக் கொண்டே தங்களின் தூதை எடுத்துரைத்துனர் தமது ஆற்றலைக் கொண்டல்ல, என்பதை மேற்கூறிய வசனங்கள் சுட்டிக்காட்டுகின்றன. info

• الأنبياء يشتركون جميعًا في الدعوة إلى توحيد الله تعالى مع اختلاف بينهم في تفاصيل التشريع.
3. தூதர்களுக்கு மத்தியில் சட்டதிட்ட விபரங்களில் வேறுபாடு இருந்தாலும் ஓரிறைக் கொள்கையின் பக்கம் அழைப்பதில் அவர்கள் அனைவரும் ஒன்றுபட்டுள்ளார்கள். info

• الاقتداء بالأنبياء سنة محمودة، وخاصة في أصول التوحيد.
4. குறிப்பாக ஓரிறைக் கொள்கையின் அடிப்படைகளில், இறைத்தூதர்களைப் பின்பற்றுவது விரும்பத்தக்க வழிமுறையாகும். info