Ibisobanuro bya qoran ntagatifu - Ibisobanuro bya Qur'an Ntagatifu mu rurimi rw'igitamili, bikaba ari incamacye y'ibisobanuro bya Qur'an Ntagatifu.

external-link copy
25 : 6

وَمِنْهُمْ مَّنْ یَّسْتَمِعُ اِلَیْكَ ۚ— وَجَعَلْنَا عَلٰی قُلُوْبِهِمْ اَكِنَّةً اَنْ یَّفْقَهُوْهُ وَفِیْۤ اٰذَانِهِمْ وَقْرًا ؕ— وَاِنْ یَّرَوْا كُلَّ اٰیَةٍ لَّا یُؤْمِنُوْا بِهَا ؕ— حَتّٰۤی اِذَا جَآءُوْكَ یُجَادِلُوْنَكَ یَقُوْلُ الَّذِیْنَ كَفَرُوْۤا اِنْ هٰذَاۤ اِلَّاۤ اَسَاطِیْرُ الْاَوَّلِیْنَ ۟

6.25. தூதரே! நீர் குர்ஆன் ஓதினால் இணைவைப்பாளர்களில் சிலர் உம் பக்கம் காதுகொடுத்துக் கேட்கிறார்கள். ஆயினும் அவர்கள் கேட்பவை அவர்களுக்கு பயனடைவதில்லை. அவர்களின் பிடிவாதம் மற்றும் புறக்கணிப்பினால் குர்ஆனை புரிந்துகொள்ள முடியாதவாறு அவர்களின் உள்ளங்களில் திரையை ஏற்படுத்தியுள்ளோம். அவர்களின் காதுகளில் அடைப்பை ஏற்படுத்தியுள்ளோம். அவர்களால் பயனுள்ள விஷயங்களைச் செவியுற முடியாது. எவ்வளவுதான் அவர்கள் தெளிவான ஆதாரங்களையும் சான்றுகளையும் கண்டாலும் அவர்கள் நம்பிக்கைகொள்ள மாட்டார்கள். எந்தளவுக்கென்றால் அவர்கள் உம்மிடம் அசத்தியத்தைக்கொண்டு வாதிட வரும்போது, “முந்தைய வேதங்களிலிருந்தே நீர் இந்த விஷயங்களையெல்லாம் கொண்டுவந்தீர்” என்று அவர்கள் கூறுவார்கள். info
التفاسير:
Inyungu dukura muri ayat kuri Uru rupapuro:
• بيان الحكمة في إرسال النبي عليه الصلاة والسلام بالقرآن، من أجل البلاغ والبيان، وأعظم ذلك الدعوة لتوحيد الله.
1. எடுத்துக்கூறி தெளிவுபடுத்துவதே நபியவர்கள் குர்ஆனைக் கொடுத்து அனுப்பப்பட்டதன் நோக்கம் என்பது தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. அல்லாஹ்வை ஏகத்துவப்படுத்துவதன் பக்கம் அழைப்பு விடுப்பதே அவற்றில் மிக முக்கியமானதாகும். info

• نفي الشريك عن الله تعالى، ودحض افتراءات المشركين في هذا الخصوص.
2. அல்லாஹ்வுக்கு இணை இல்லையென மறுத்து, இணைகள் உண்டு என்று கூறும் இணைவைப்பாளர்களின் இட்டுக்கட்டல்களுக்கு பதிலடி கொடுக்கப்பட்டுள்ளது. info

• بيان معرفة اليهود والنصارى للنبي عليه الصلاة والسلام، برغم جحودهم وكفرهم.
3. யூதர்களும் கிருஸ்தவர்களும் நபியவர்களை மறுத்து நிராகரித்த போதும் நபியவர்கள் உண்மையாளர் என்பதைத் தெளிவாக அறிந்திருந்தார்கள். info