Ibisobanuro bya qoran ntagatifu - Ibisobanuro bya Qur'an Ntagatifu mu rurimi rw'igitamili, bikaba ari incamacye y'ibisobanuro bya Qur'an Ntagatifu.

external-link copy
2 : 22

یَوْمَ تَرَوْنَهَا تَذْهَلُ كُلُّ مُرْضِعَةٍ عَمَّاۤ اَرْضَعَتْ وَتَضَعُ كُلُّ ذَاتِ حَمْلٍ حَمْلَهَا وَتَرَی النَّاسَ سُكٰرٰی وَمَا هُمْ بِسُكٰرٰی وَلٰكِنَّ عَذَابَ اللّٰهِ شَدِیْدٌ ۟

22.2. அந்நாளை நீங்கள் காணும்போது பாலூட்டக்கூடிய ஒவ்வொரு பெண்ணும் தான் பாலூட்டும் குழந்தையை மறந்துவிடுவாள். கர்ப்பமான ஒவ்வொரு பெண்ணும் அந்த நாளில் ஏற்படும் பயத்தால் தன் வயிற்றிலுள்ளதை ஈன்றுவிடுவாள். அந்த நாளின் பயங்கரத்தால் மக்கள் புத்தியிழந்து மயங்கியவர்களைப்போல் தோன்றுவார்கள். அவர்கள் மதுவின் போதையால் மயங்கியவர்களாக இல்லை. மாறாக அல்லாஹ்வின் வேதனை கடுமையானது. அதுதான் அவர்களின் அறிவைப் போக்கிவிட்டது. info
التفاسير:
Inyungu dukura muri ayat kuri Uru rupapuro:
• وجوب الاستعداد ليوم القيامة بزاد التقوى.
1. தக்வா எனும் முன்னேற்பாடுகளைச் செய்து மறுமை நாளுக்காக தயாராவது கட்டாயமாகும். info

• شدة أهوال القيامة حيث تنسى المرضعة طفلها وتسقط الحامل حملها وتذهب عقول الناس.
2. மறுமையின் பயங்கரங்கள் கடுமையானவை. எந்தளவுக்கெனில் பாலூட்டும் தாய் தனது குழந்தையை மறந்து விடுவாள். கர்ப்பிணி தனது கருவை ஈன்றுவிடுவாள். மனிதர்களின் புத்தி நீங்கிவிடும். info

• التدرج في الخلق سُنَّة إلهية.
3. படிப்படியாக படைப்பது இறை நியதியாகும். info

• دلالة الخلق الأول على إمكان البعث.
4. ஆரம்பமாகப் படைத்தது மீண்டும் உயிர் கொடுத்து எழுப்புவது சாத்தியம் என்பதற்கான ஆதாரமாகும். info

• ظاهرة المطر وما يتبعها من إنبات الأرض دليل ملموس على بعث الأموات.
5. மழை மற்றும் அதனைத் தொடர்ந்து இடம்பெறும் பூமியின் விளைச்சல் மரணித்தவர்கள் உயிர்ப்பிக்கப்படுவார்கள் என்பதற்கான பௌதீக ஆதாரமாகும். info