Ibisobanuro bya qoran ntagatifu - Ibisobanuro bya Qur'an Ntagatifu mu rurimi rw'igitamili, bikaba ari incamacye y'ibisobanuro bya Qur'an Ntagatifu.

external-link copy
180 : 2

كُتِبَ عَلَیْكُمْ اِذَا حَضَرَ اَحَدَكُمُ الْمَوْتُ اِنْ تَرَكَ خَیْرَا ۖۚ— ١لْوَصِیَّةُ لِلْوَالِدَیْنِ وَالْاَقْرَبِیْنَ بِالْمَعْرُوْفِ ۚ— حَقًّا عَلَی الْمُتَّقِیْنَ ۟ؕ

2.180. நீங்கள் மரண வேளையை நெருங்கிவிட்டால், நீங்கள் ஏராளமான செல்வங்களை விட்டுச் செல்பவர்களாக இருந்தால் தாய்தந்தையருக்கும், உறவினருக்கும் - இறைவன் விதித்தபடி - மூன்றில் ஒரு பகுதியை விட அதிகமின்றி உயில் எழுதிவிடுங்கள். இவ்வாறு செய்வது அல்லாஹ்வை அஞ்சக்கூடியவர்கள்மீது கட்டாயக் கடமையாகும். இது வாரிசுரிமை தொடர்பாக வசனங்கள் இறங்குவதற்கு முன்னுள்ள சட்டமாகும். வாரிசுரிமை தொடர்பான வசனங்கள் இறங்கிய பிறகு யார் எந்தளவு அனந்தரம் பெறுவார் என்பது தெளிவுபடுத்தப்பட்டு விட்டது. info
التفاسير:
Inyungu dukura muri ayat kuri Uru rupapuro:
• البِرُّ الذي يحبه الله يكون بتحقيق الإيمان والعمل الصالح، وأما التمسك بالمظاهر فقط فلا يكفي عنده تعالى.
1. அல்லாஹ் விரும்பும் நன்மை என்பது ஈமானையும் நற்செயலையும் உறுதிப்படுத்துவதைக் கொண்டே இருக்கும். அதை விட்டுவிட்டு வெளிப்படையான விஷயங்களை மாத்திரம் பற்றிக்கொள்வது அல்லாஹ்விடத்தில் பயனளிக்காது. info

• من أعظم ما يحفظ الأنفس، ويمنع من التعدي والظلم؛ تطبيق مبدأ القصاص الذي شرعه الله في النفس وما دونها.
2. உயிர் மற்றும் உடலுறுப்புக்களில் அல்லாஹ் விதித்த பழிவாங்கும் சட்டத்தைச் செயல்படுத்துவதால் உயிர்கள் பாதுகாக்கப்படுகிறது, அநியாயமும் வரம்பு மீறலும் தடுக்கப்படுகிறது. info

• عِظَمُ شأن الوصية، ولا سيما لمن كان عنده شيء يُوصي به، وإثمُ من غيَّر في وصية الميت وبدَّل ما فيها.
3. உயில் எழுதுவதின் முக்கியத்துவம் தெளிவாகிறது. குறிப்பாக உயில் எழுத வேண்டியவற்றை தம்மிடம் வைத்திருப்பவர். இறந்தவர் எழுதிய உயிலை மாற்றுவதும் பாரிய குற்றமாகும். info