Ibisobanuro bya qoran ntagatifu - Ibisobanuro bya Qur'an Ntagatifu mu rurimi rw'igitamili, bikaba ari incamacye y'ibisobanuro bya Qur'an Ntagatifu.

external-link copy
34 : 14

وَاٰتٰىكُمْ مِّنْ كُلِّ مَا سَاَلْتُمُوْهُ ؕ— وَاِنْ تَعُدُّوْا نِعْمَتَ اللّٰهِ لَا تُحْصُوْهَا ؕ— اِنَّ الْاِنْسَانَ لَظَلُوْمٌ كَفَّارٌ ۟۠

14.34. நீங்கள் வேண்டிய, வேண்டாத அனைத்திலிருந்தும் அவன் உங்களுக்குத் தந்துள்ளான். அதன் அதிகரிப்பினால் அவனுடைய அருட்கொடைகளை எண்ணினால் அவற்றை எண்ணி முடிக்க நீங்கள் ஆற்றல் பெறமாட்டீர்கள். அவற்றுள் சில உதாரணங்கள்தான் உங்களுக்குக் கூறப்பட்டுள்ளன. நிச்சயமாக மனிதன் தன்மீதே மிகவும் அநீதி இழைப்பவனாகவும் அல்லாஹ்வின் அருட்கொடைகளுக்கு அதிகமாக நன்றி கெட்டத்தனமாக நடந்துகொள்ளக் கூடியவனாகவும் இருக்கின்றான். info
التفاسير:
Inyungu dukura muri ayat kuri Uru rupapuro:
• بيان فضيلة مكة التي دعا لها نبي الله إبراهيم عليه الصلاة والسلام.
1. இப்ராஹீம் (அலை) அவர்கள் பிரார்த்தனை செய்த மக்காவின் சிறப்பு தெளிவாகிறது. info

• أن الإنسان مهما ارتفع شأنه في مراتب الطاعة والعبودية ينبغي له أن يخاف على نفسه وذريته من جليل الشرك ودقيقه.
2. மனிதன் அல்லாஹ்வை வணங்குவதில், அவனுக்குக் கட்டுப்படுவதில் எவ்வளவுதான் உயர்ந்த இடத்தைப் பெற்று விட்டாலும் அவன் சிறிய மற்றும் பெரிய இணைவைப்பிலிருந்து தன் விஷயத்திலும் தன் பிள்ளைகள் விஷயத்திலும் அஞ்ச வேண்டும். info

• دعاء إبراهيم عليه الصلاة والسلام يدل على أن العبد مهما ارتفع شأنه يظل مفتقرًا إلى الله تعالى ومحتاجًا إليه.
3. இப்ராஹீம் (அலை) அவர்களின் பிரார்த்தனை, அடியான் எவ்வளவுதான் உயர்ந்த அந்தஸ்தைப் பெற்று விட்டாலும் அவன் அல்லாஹ்வின்பால் தேவையுடையவனாகவே இருக்கின்றான் என்பதைக் காட்டுகிறது. info

• من أساليب التربية: الدعاء للأبناء بالصلاح وحسن المعتقد والتوفيق في إقامة شعائر الدين.
4. பிள்ளைகளின் சீர்திருத்தம், சிறந்த கொள்கை, மார்க்க காரியங்களை நிலைநாட்டுவதற்கான இறை உதவி போன்றவற்றுக்காக பிள்ளைகளுக்காகப் பிரார்த்தித்தல் பிள்ளை வளர்ப்பின் முறைகளில் ஒன்றாகும். info