Tradução dos significados do Nobre Qur’an. - A tradução para a língua Tamil -Umar Sharif

Número de página:close

external-link copy
12 : 47

اِنَّ اللّٰهَ یُدْخِلُ الَّذِیْنَ اٰمَنُوْا وَعَمِلُوا الصّٰلِحٰتِ جَنّٰتٍ تَجْرِیْ مِنْ تَحْتِهَا الْاَنْهٰرُ ؕ— وَالَّذِیْنَ كَفَرُوْا یَتَمَتَّعُوْنَ وَیَاْكُلُوْنَ كَمَا تَاْكُلُ الْاَنْعَامُ وَالنَّارُ مَثْوًی لَّهُمْ ۟

நிச்சயமாக நம்பிக்கை கொண்டு, நன்மைகளை செய்தவர்களை அல்லாஹ் சொர்க்கங்களில் பிரவேசிக்கச் செய்வான். அவற்றின் கீழ் ஆறுகள் ஓடும். இன்னும், நிராகரித்தவர்களோ (இவ்வுலகில்) சுகபோகமாக வாழ்கிறார்கள். கால்நடைகள் சாப்பிடுவது போல் சாப்பிடுகிறார்கள். நரகம்தான் அவர்களுக்கு தங்குமிடமாகும். info
التفاسير:

external-link copy
13 : 47

وَكَاَیِّنْ مِّنْ قَرْیَةٍ هِیَ اَشَدُّ قُوَّةً مِّنْ قَرْیَتِكَ الَّتِیْۤ اَخْرَجَتْكَ ۚ— اَهْلَكْنٰهُمْ فَلَا نَاصِرَ لَهُمْ ۟

உம்மை வெளியேற்றிய உமது ஊரை (-உமது ஊர் மக்களை) விட பலத்தால் மிகக் கடுமையான எத்தனையோ ஊர் மக்கள் - அவர்களை நாம் அழித்தோம். ஆக, அவர்களுக்கு (அப்போது) அறவே உதவியாளர்(கள்) இருக்கவில்லை. info
التفاسير:

external-link copy
14 : 47

اَفَمَنْ كَانَ عَلٰی بَیِّنَةٍ مِّنْ رَّبِّهٖ كَمَنْ زُیِّنَ لَهٗ سُوْٓءُ عَمَلِهٖ وَاتَّبَعُوْۤا اَهْوَآءَهُمْ ۟

ஆக, தமது இறைவனின் தெளிவான அத்தாட்சியில் இருப்பவர்கள், எவர்களுக்கு அவர்களது கெட்ட செயல்கள் அலங்கரிக்கப்பட்டு; இன்னும், அவர்களுடைய மன இச்சைகளை பின்பற்றினார்களோ அவர்களைப் போன்று ஆவார்களா? info
التفاسير:

external-link copy
15 : 47

مَثَلُ الْجَنَّةِ الَّتِیْ وُعِدَ الْمُتَّقُوْنَ ؕ— فِیْهَاۤ اَنْهٰرٌ مِّنْ مَّآءٍ غَیْرِ اٰسِنٍ ۚ— وَاَنْهٰرٌ مِّنْ لَّبَنٍ لَّمْ یَتَغَیَّرْ طَعْمُهٗ ۚ— وَاَنْهٰرٌ مِّنْ خَمْرٍ لَّذَّةٍ لِّلشّٰرِبِیْنَ ۚ۬— وَاَنْهٰرٌ مِّنْ عَسَلٍ مُّصَفًّی ؕ— وَلَهُمْ فِیْهَا مِنْ كُلِّ الثَّمَرٰتِ وَمَغْفِرَةٌ مِّنْ رَّبِّهِمْ ؕ— كَمَنْ هُوَ خَالِدٌ فِی النَّارِ وَسُقُوْا مَآءً حَمِیْمًا فَقَطَّعَ اَمْعَآءَهُمْ ۟

இறையச்சமுள்ளவர்களுக்கு வாக்களிக்கப்பட்ட சொர்க்கத்தின் தன்மையாவது துர்வாடை வீசாத (கெட்டுப் போகாத) தண்ணீர் ஆறுகளும், அதன் ருசி மாறாத பால் ஆறுகளும், அருந்துபவர்களுக்கு ருசியாக இருக்கும் மது ஆறுகளும் தூய்மையான தேன் ஆறுகளும் அ(ந்த சொர்க்கத்)தில் இருக்கும். இன்னும், அவர்களுக்கு எல்லாவகையான கனிகளும் அதில் கிடைக்கும். இன்னும், அவர்களின் இறைவனிடமிருந்து மன்னிப்பும் அவர்களுக்கு உண்டு. இத்தகைய சொர்க்கவாசிகள், நரகத்தில் நிரந்தரமாக இருப்பவர்களை போன்று ஆகிவிடுவார்களா? (நரகத்தில் நுழைந்த) அவர்கள் கொதிக்கின்ற நீர் புகட்டப்படுவார்கள். ஆக, அது அவர்களின் குடல்களை துண்டு துண்டாக அறுத்து விடும். info
التفاسير:

external-link copy
16 : 47

وَمِنْهُمْ مَّنْ یَّسْتَمِعُ اِلَیْكَ ۚ— حَتّٰۤی اِذَا خَرَجُوْا مِنْ عِنْدِكَ قَالُوْا لِلَّذِیْنَ اُوْتُوا الْعِلْمَ مَاذَا قَالَ اٰنِفًا ۫— اُولٰٓىِٕكَ الَّذِیْنَ طَبَعَ اللّٰهُ عَلٰی قُلُوْبِهِمْ وَاتَّبَعُوْۤا اَهْوَآءَهُمْ ۟

அவர்களில் (-அந்த நயவஞ்சகர்களில் அலட்சியமாக) உம் பக்கம் செவி சாய்ப்பவர்களும் உள்ளனர். இறுதியில் அவர்கள் உம்மிடமிருந்து வெளியே புறப்பட்டால் (தாங்களும் கவனமாகக் கேட்டது போன்று காண்பிப்பதற்காகவும் கேலியாகவும்) கல்வி கொடுக்கப்பட்டவர்களிடம் கூறுகிறார்கள்: “இவர் (-இந்த தூதர்) சற்று நேரத்திற்கு முன்பு என்ன கூறினார் (தெரியுமா? எவ்வளவு அழகான கருத்தைக் கூறினார் தெரியுமா?)” இவர்கள் எத்தகையோர் என்றால், அல்லாஹ் இவர்களின் உள்ளங்களில் முத்திரையிட்டு விட்டான். இன்னும், இவர்கள் தங்கள் கெட்ட ஆசைகளைப் பின்பற்றினார்கள். info
التفاسير:

external-link copy
17 : 47

وَالَّذِیْنَ اهْتَدَوْا زَادَهُمْ هُدًی وَّاٰتٰىهُمْ تَقْوٰىهُمْ ۟

இன்னும், எவர்கள் நேர்வழி பெற்றார்களோ அவர்களுக்கு (அல்லாஹ்) நேர்வழியை அதிகப்படுத்துவான். இன்னும், அவர்களுக்கு அவர்களின் தக்வாவையும் (-உள்ளச்சத்தையும்) அவன் வழங்குவான். info
التفاسير:

external-link copy
18 : 47

فَهَلْ یَنْظُرُوْنَ اِلَّا السَّاعَةَ اَنْ تَاْتِیَهُمْ بَغْتَةً ۚ— فَقَدْ جَآءَ اَشْرَاطُهَا ۚ— فَاَنّٰی لَهُمْ اِذَا جَآءَتْهُمْ ذِكْرٰىهُمْ ۟

ஆக, அவர்களிடம் திடீரென மறுமை வருவதைத் தவிர அவர்கள் எதிர்பார்க்கிறார்களா? ஆக, திட்டமாக அதன் அடையாளங்கள் வந்து விட்டன. ஆக, (அந்த மறுமை) அவர்களிடம் வரும்போது அவர்கள் நல்லறிவு பெறுவது அவர்களுக்கு எப்படி பலனளிக்கும்! info
التفاسير:

external-link copy
19 : 47

فَاعْلَمْ اَنَّهٗ لَاۤ اِلٰهَ اِلَّا اللّٰهُ وَاسْتَغْفِرْ لِذَنْۢبِكَ وَلِلْمُؤْمِنِیْنَ وَالْمُؤْمِنٰتِ ؕ— وَاللّٰهُ یَعْلَمُ مُتَقَلَّبَكُمْ وَمَثْوٰىكُمْ ۟۠

ஆக, (நபியே!) “நிச்சயமாக அல்லாஹ்வைத் தவிர (உண்மையில் வணங்கத்தகுதியான) இறைவன் அறவே இல்லை” என்பதை நன்கறிந்து கொள்வீராக! இன்னும், உமது தவறுகளுக்காகவும் நம்பிக்கை கொண்ட ஆண்களுக்காகவும், நம்பிக்கை கொண்ட பெண்களுக்காகவும் பாவமன்னிப்பு கோருவீராக! நீங்கள் (பகலில்) சுற்றுகிற இடங்களையும் (இரவில் தூங்குவதற்காக நீங்கள் ஒதுங்குகிற) உங்கள் தங்குமிடங்களையும் அல்லாஹ் நன்கறிவான். (உங்கள் காலை, மாலை, இரவு என எதுவும் அல்லாஹ்விற்கு மறைந்தவை அல்ல.) info
التفاسير: