Tradução dos significados do Nobre Qur’an. - A tradução para a língua Tamil -Umar Sharif

Número de página:close

external-link copy
163 : 4

اِنَّاۤ اَوْحَیْنَاۤ اِلَیْكَ كَمَاۤ اَوْحَیْنَاۤ اِلٰی نُوْحٍ وَّالنَّبِیّٖنَ مِنْ بَعْدِهٖ ۚ— وَاَوْحَیْنَاۤ اِلٰۤی اِبْرٰهِیْمَ وَاِسْمٰعِیْلَ وَاِسْحٰقَ وَیَعْقُوْبَ وَالْاَسْبَاطِ وَعِیْسٰی وَاَیُّوْبَ وَیُوْنُسَ وَهٰرُوْنَ وَسُلَیْمٰنَ ۚ— وَاٰتَیْنَا دَاوٗدَ زَبُوْرًا ۟ۚ

(நபியே!) நூஹுக்கும், அவருக்குப் பின்னர் (வந்த) நபிமார்களுக்கும் நாம் வஹ்யி அறிவித்தது போன்றே உமக்கும் நிச்சயமாக நாம் வஹ்யி அறிவித்தோம். இன்னும், இப்ராஹீம், இஸ்மாயீல், இஸ்ஹாக், யஅகூப், (அவர்களுடைய) சந்ததிகள், ஈஸா, அய்யூப், யூனுஸ், ஹாரூன், ஸுலைமான் ஆகியவர்களுக்கும் வஹ்யி அறிவித்தோம். இன்னும் தாவூதுக்கு ‘ஸபூர்’ ஐ கொடுத்தோம். info
التفاسير:

external-link copy
164 : 4

وَرُسُلًا قَدْ قَصَصْنٰهُمْ عَلَیْكَ مِنْ قَبْلُ وَرُسُلًا لَّمْ نَقْصُصْهُمْ عَلَیْكَ ؕ— وَكَلَّمَ اللّٰهُ مُوْسٰی تَكْلِیْمًا ۟ۚ

இன்னும் (பல) தூதர்களுக்கும் நாம் வஹ்யி அறிவித்திருக்கிறோம். அவர்களை முன்னர் உமக்கு விவரித்தோம். இன்னும், பல தூதர்களுக்கு வஹ்யி அறிவித்திருக்கிறோம். அவர்களை உமக்கு நாம் விவரிக்கவில்லை. இன்னும், மூஸாவுடன் அல்லாஹ் நேரடியாக பேசினான். info
التفاسير:

external-link copy
165 : 4

رُسُلًا مُّبَشِّرِیْنَ وَمُنْذِرِیْنَ لِئَلَّا یَكُوْنَ لِلنَّاسِ عَلَی اللّٰهِ حُجَّةٌ بَعْدَ الرُّسُلِ ؕ— وَكَانَ اللّٰهُ عَزِیْزًا حَكِیْمًا ۟

தூதர்களுக்குப் பின்பு அல்லாஹ்வின் மீது (குற்றம் கூற) மக்களுக்கு ஓர் ஆதாரமும் இல்லாதிருக்க, நற்செய்தி கூறுபவர்களாக, (அச்சமூட்டி) எச்சரிப்பவர்களாக (பல) தூதர்களை (எமது அடியார்களுக்கு தொடர்ந்து நாம் அனுப்பினோம்). இன்னும், அல்லாஹ் மிகைத்தவனாக, மகா ஞானவானாக இருக்கிறான். info
التفاسير:

external-link copy
166 : 4

لٰكِنِ اللّٰهُ یَشْهَدُ بِمَاۤ اَنْزَلَ اِلَیْكَ اَنْزَلَهٗ بِعِلْمِهٖ ۚ— وَالْمَلٰٓىِٕكَةُ یَشْهَدُوْنَ ؕ— وَكَفٰی بِاللّٰهِ شَهِیْدًا ۟ؕ

என்றாலும், அல்லாஹ் உம்மீது இறக்கியதற்கு அல்லாஹ்வே சாட்சி கூறுகிறான், - “அதை அவனுடைய அறிவு ஞானத்தைக் கொண்டே இறக்கி இருக்கிறான்” என்று. (அவ்வாறே) வானவர்களும் (உமக்கு இறக்கப்பட்ட வேதத்தின் உண்மைக்கு) சாட்சி கூறுகிறார்கள். சாட்சியாளனாக அல்லாஹ்வே போதுமானவன். info
التفاسير:

external-link copy
167 : 4

اِنَّ الَّذِیْنَ كَفَرُوْا وَصَدُّوْا عَنْ سَبِیْلِ اللّٰهِ قَدْ ضَلُّوْا ضَلٰلًا بَعِیْدًا ۟

நிச்சயமாக, எவர்கள் நிராகரித்தார்களோ; இன்னும், அல்லாஹ்வுடைய பாதையிலிருந்து (மக்களைத்) தடுத்தார்களோ அவர்கள் வெகுதூரமான வழிகேடாக வழிகெட்டு விட்டனர். info
التفاسير:

external-link copy
168 : 4

اِنَّ الَّذِیْنَ كَفَرُوْا وَظَلَمُوْا لَمْ یَكُنِ اللّٰهُ لِیَغْفِرَ لَهُمْ وَلَا لِیَهْدِیَهُمْ طَرِیْقًا ۟ۙ

நிச்சயமாக, எவர்கள் நிராகரித்தார்களோ; இன்னும் அநியாயம் செய்தார்களோ அவர்களை அல்லாஹ் மன்னிப்பவனாக இல்லை. இன்னும், (நரகத்தின் வழியைத் தவிர வேறு) வழியை அவர்களுக்கு வழி காட்டுபவனாக இல்லை. (அவர்கள் சொர்க்கப் பாதையில் செல்ல மாட்டார்கள். அவர்கள் மன முரண்டாக நிராகரித்த காரணத்தால் அல்லாஹ் அவர்களை கைவிட்டுவிட்டான்.) info
التفاسير:

external-link copy
169 : 4

اِلَّا طَرِیْقَ جَهَنَّمَ خٰلِدِیْنَ فِیْهَاۤ اَبَدًا ؕ— وَكَانَ ذٰلِكَ عَلَی اللّٰهِ یَسِیْرًا ۟

நரகத்தின் வழியைத் தவிர (வேறு வழியை அவர்களுக்கு அல்லாஹ் காட்ட மாட்டான். அ(ந்த நரகத்)தில் அவர்கள் என்றென்றும் நிரந்தரமாக தங்கிவிடுவார்கள். இது (-அவர்களை நரகத்தில் தள்ளுவது) அல்லாஹ்விற்கு இலகுவானதாக இருக்கிறது. info
التفاسير:

external-link copy
170 : 4

یٰۤاَیُّهَا النَّاسُ قَدْ جَآءَكُمُ الرَّسُوْلُ بِالْحَقِّ مِنْ رَّبِّكُمْ فَاٰمِنُوْا خَیْرًا لَّكُمْ ؕ— وَاِنْ تَكْفُرُوْا فَاِنَّ لِلّٰهِ مَا فِی السَّمٰوٰتِ وَالْاَرْضِ ؕ— وَكَانَ اللّٰهُ عَلِیْمًا حَكِیْمًا ۟

மக்களே! இத்தூதர் உங்கள் இறைவனிடமிருந்து உங்களிடம் சத்தியத்தைக் கொண்டு வந்துவிட்டார். ஆகவே, நம்பிக்கை கொள்ளுங்கள். (அது) உங்களுக்கு மிக்க நல்லதாக அமையும். நீங்கள் (அவரை) நிராகரித்தால், (அல்லாஹ்விற்கு ஒன்றும் நஷ்டமில்லை. ஏனெனில்,) வானங்களிலும் பூமியிலுமுள்ளவை நிச்சயமாக அல்லாஹ்விற்கே உரியன! அல்லாஹ் நன்கறிந்தவனாக, மகா ஞானவானாக இருக்கிறான். info
التفاسير: