Tradução dos significados do Nobre Qur’an. - Tradução tâmil de interpretação abreviada do Nobre Alcorão.

external-link copy
23 : 30

وَمِنْ اٰیٰتِهٖ مَنَامُكُمْ بِالَّیْلِ وَالنَّهَارِ وَابْتِغَآؤُكُمْ مِّنْ فَضْلِهٖ ؕ— اِنَّ فِیْ ذٰلِكَ لَاٰیٰتٍ لِّقَوْمٍ یَّسْمَعُوْنَ ۟

30.23. அல்லாஹ் ஒருவனே என்பதையும் அவனுடைய வல்லமையையும் அறிவிக்கக்கூடிய மகத்தான சான்றுகளில் சில: உங்களின் வேலையின் களைப்பைப் போக்குவதற்காக இரவிலும் பகலிலும் உங்களின் உறக்கம். நீங்கள் உங்கள் இறைவனின்பால் வாழ்வாதாரத்தை தேடிச் செல்வதற்காக பகலை ஏற்படுத்தியுள்ளமையும் அவனுடைய அத்தாட்சியே. நிச்சயமாக (மேலே) கூறப்பட்ட இதில் சிந்தித்து ஏற்றுக்கொள்ளும் நோக்கில் செவியேற்கும் மக்களுக்கு சான்றுகள், ஆதாரங்கள் இருக்கின்றன. info
التفاسير:
Das notas do versículo nesta página:
• إعمار العبد أوقاته بالصلاة والتسبيح علامة على حسن العاقبة.
1. அடியான் தன் நேரங்களை அல்லாஹ்வைத் தொழுவதற்கும் அவனைப் புகழ்வதற்கும் செலவிடுவது அவனுடைய நல்ல முடிவிற்கான அடையாளமாகும். info

• الاستدلال على البعث بتجدد الحياة، حيث يخلق الله الحي من الميت والميت من الحي.
2. அல்லாஹ் உயிரற்றதிலிருந்து உயிருள்ளதை வெளிப்படுத்துகிறான், உயிருள்ளதிலிருந்து உயிரற்றதை வெளிப்படுத்துகிறான். வாழ்க்கையில் மீண்டும் மீண்டும் நிகழ்ந்துகொண்டேயிருக்கும் இவைகள் மறுமையில் மீண்டும் உயிர்கொடுத்து எழுப்பப்படுவதற்கான ஆதாரமாகும். info

• آيات الله في الأنفس والآفاق لا يستفيد منها إلا من يُعمِل وسائل إدراكه الحسية والمعنوية التي أنعم الله بها عليه.
3. உயிர்களிலும் பிரபஞ்சத்திலும் காணப்படும் அல்லாஹ்வின் சான்றுகளை தங்களுக்கு அருட்கொடையாக வழங்கப்பட்ட புலனுணர்வுகளையும் உள்ரங்கமான சாதனங்களையும் செயற்படுத்துபவர்கள் மட்டுமே புரிந்துகொள்ள முடியும். info