Tradução dos significados do Nobre Qur’an. - Tradução tâmil de interpretação abreviada do Nobre Alcorão.

external-link copy
35 : 21

كُلُّ نَفْسٍ ذَآىِٕقَةُ الْمَوْتِ ؕ— وَنَبْلُوْكُمْ بِالشَّرِّ وَالْخَیْرِ فِتْنَةً ؕ— وَاِلَیْنَا تُرْجَعُوْنَ ۟

21.35. நம்பிக்கைகொண்ட ஆன்மா, நிராகரித்த ஆன்மா என ஒவ்வொரு ஆன்மாவும் இவ்வுலகில் மரணித்தை சுவைத்தே தீர வேண்டும். -மனிதர்களே!- இவ்வுலக வாழ்வில் உங்களுக்கு கடமைகளையும் அருட்கொடைகளையும் வேதனைகளையும் அளித்து சோதிக்கின்றோம். பின்னர் நீங்கள் மரணித்த பிறகு நம்மிடமே திரும்பிவர வேண்டும். ஏனையவர்களிடம் அல்ல. நாம் உங்களின் செயல்களுக்கேற்ப உங்களுக்குக் கூலி வழங்குவோம். info
التفاسير:
Das notas do versículo nesta página:
• تنزيه الله عن الولد.
1. பிள்ளை ஏற்படுத்திக்கொள்வதைவிட்டு அல்லாஹ்வைத் தூய்மைப்படுத்தல். info

• منزلة الملائكة عند الله أنهم عباد خلقهم لطاعته، لا يوصفون بالذكورة ولا الأنوثة، بل عباد مكرمون.
2. வானவர்கள் அல்லாஹ்வை வணஹ்கி வழிபடுவதற்காகப் படைக்கபட்ட அடியார்கள் என்பதே அல்லாஹ்விடம் அவர்களுக்குள்ள மதிப்பாகும். அவர்கள் ஆண்கள் என்றோ பெண்கள் என்றோ வர்ணிக்கப்பட முடியாதவர்கள். மாறாக அல்லாஹ்வின் கண்ணியமான அடியார்களாவர். info

• خُلِقت السماوات والأرض وفق سُنَّة التدرج، فقد خُلِقتا مُلْتزِقتين، ثم فُصِل بينهما.
3. படிப்படியாகவே வானங்களும் பூமியும் படைக்கப்பட்டுள்ளன. அவை இரண்டும் சேர்ந்ததாக படைக்கப்பட்டு பின்பு பிரிக்கப்பட்டன. info

• الابتلاء كما يكون بالشر يكون بالخير.
4. தீங்கின் மூலம் சோதனை ஏற்படுவது போன்று நலவின் மூலமும் அது ஏற்படும். info