Tradução dos significados do Nobre Qur’an. - tradução Tamil - Abdel Hamid Baqwi

அஷ்ஷுஅரா

external-link copy
1 : 26

طٰسٓمّٓ ۟

1, 2. தா ஸீம் மீம். (நபியே!) இவை தெளிவான இவ்வேதத்தின் வசனங்களாகும். info
التفاسير:

external-link copy
2 : 26

تِلْكَ اٰیٰتُ الْكِتٰبِ الْمُبِیْنِ ۟

1, 2. தா ஸீம் மீம். (நபியே!) இவை தெளிவான இவ்வேதத்தின் வசனங்களாகும். info
التفاسير:

external-link copy
3 : 26

لَعَلَّكَ بَاخِعٌ نَّفْسَكَ اَلَّا یَكُوْنُوْا مُؤْمِنِیْنَ ۟

3. (நபியே!) அவர்கள் (உம்மை) நம்பிக்கை கொள்ளாததன் காரணமாக (துக்கத்தால்) நீங்கள் தற்கொலை செய்து கொள்வீர் போலும்! info
التفاسير:

external-link copy
4 : 26

اِنْ نَّشَاْ نُنَزِّلْ عَلَیْهِمْ مِّنَ السَّمَآءِ اٰیَةً فَظَلَّتْ اَعْنَاقُهُمْ لَهَا خٰضِعِیْنَ ۟

4. நாம் விரும்பினால் அவர்களுடைய கழுத்துகள் பணிந்து குனிந்து வரும்படி (வேதனை) செய்யக்கூடிய அத்தாட்சிகளை வானத்திலிருந்து அவர்கள் மீது நாம் இறக்கியிருப்போம். info
التفاسير:

external-link copy
5 : 26

وَمَا یَاْتِیْهِمْ مِّنْ ذِكْرٍ مِّنَ الرَّحْمٰنِ مُحْدَثٍ اِلَّا كَانُوْا عَنْهُ مُعْرِضِیْنَ ۟

5. ரஹ்மானிடமிருந்து புதிதான ஒரு நல்லுபதேசம் வரும்போதெல்லாம் அதை அவர்கள் (நிராகரித்து) புறக்கணிக்காமல் இருப்பதில்லை. info
التفاسير:

external-link copy
6 : 26

فَقَدْ كَذَّبُوْا فَسَیَاْتِیْهِمْ اَنْۢبٰٓؤُا مَا كَانُوْا بِهٖ یَسْتَهْزِءُوْنَ ۟

6. (ஆகவே, இதையும்) நிச்சயமாக அவர்கள் பொய்யாக்குகின்றனர். எனினும், அவர்கள் எதைப் (பொய்யாக்கிப்) பரிகசித்துக் கொண்டிருக்கிறார்களோ அதன் (உண்மை) செய்திகள் நிச்சயமாக அவர்களிடம் வந்தே தீரும். info
التفاسير:

external-link copy
7 : 26

اَوَلَمْ یَرَوْا اِلَی الْاَرْضِ كَمْ اَنْۢبَتْنَا فِیْهَا مِنْ كُلِّ زَوْجٍ كَرِیْمٍ ۟

7. அவர்கள் பூமியைப் பார்க்கவில்லையா? அதில் ஒவ்வொரு வகையிலும் (பயனளிக்கக் கூடிய) மேலான எத்தனையோ புற்பூண்டுகளை ஜோடி ஜோடியாகவே நாம் முளைப்பித்து இருக்கிறோம். info
التفاسير:

external-link copy
8 : 26

اِنَّ فِیْ ذٰلِكَ لَاٰیَةً ؕ— وَمَا كَانَ اَكْثَرُهُمْ مُّؤْمِنِیْنَ ۟

8. நிச்சயமாக இதில் ஓர் அத்தாட்சி இருக்கிறது. எனினும், அவர்களில் பெரும்பாலானவர்கள் நம்பிக்கை கொள்ளவில்லை. info
التفاسير:

external-link copy
9 : 26

وَاِنَّ رَبَّكَ لَهُوَ الْعَزِیْزُ الرَّحِیْمُ ۟۠

9. (நபியே!) உமது இறைவன் நிச்சயமாக (அனைவரையும்) மிகைத்தவன்,மகா கருணையுடையவன் ஆவான். info
التفاسير:

external-link copy
10 : 26

وَاِذْ نَادٰی رَبُّكَ مُوْسٰۤی اَنِ ائْتِ الْقَوْمَ الظّٰلِمِیْنَ ۟ۙ

10. (நபியே!) உமது இறைவன் மூஸாவை அழைத்து ‘‘ நீர் அநியாயக்காரர்களான ஃபிர்அவ்னுடைய மக்களிடம் செல்வீராக'' எனக் கூறியதை நீர் கவனித்துப் பார்ப்பீராக. info
التفاسير:

external-link copy
11 : 26

قَوْمَ فِرْعَوْنَ ؕ— اَلَا یَتَّقُوْنَ ۟

11. ‘‘ அவர்கள் (எனக்குப்) பயப்பட மாட்டார்களா?'' (என்று உமது இறைவன் கேட்டான்.) info
التفاسير:

external-link copy
12 : 26

قَالَ رَبِّ اِنِّیْۤ اَخَافُ اَنْ یُّكَذِّبُوْنِ ۟ؕ

12. அதற்கு அவர் ‘‘ என் இறைவனே! அவர்கள் என்னைப் பொய்யாக்கி விடுவார்கள் என நான் பயப்படுகிறேன்'' என்றார். info
التفاسير:

external-link copy
13 : 26

وَیَضِیْقُ صَدْرِیْ وَلَا یَنْطَلِقُ لِسَانِیْ فَاَرْسِلْ اِلٰی هٰرُوْنَ ۟

13. இன்னும், “(அவ்வாறு அவர்கள் பொய்யாக்கினால்) என் மனமுடைந்து விடும். (அத்துடன் எனக்குக் கோனல் இருப்பதால்) என் நாவால் (சரியாகப்) பேசமுடியாது. ஆதலால் (என்னுடன்) வருமாறு ஹாரூனுக்கு நீ அறிவிப்பாயாக! info
التفاسير:

external-link copy
14 : 26

وَلَهُمْ عَلَیَّ ذَنْۢبٌ فَاَخَافُ اَنْ یَّقْتُلُوْنِ ۟ۚۖ

14. மேலும், என் மீது அவர்களுக்கு ஒரு குற்றச்சாட்டுதலும் இருக்கிறது. அதற்காக அவர்கள் என்னைக் கொலை செய்து விடுவார்கள் என நான் பயப்படுகிறேன்'' (என்றும் கூறினார்). info
التفاسير:

external-link copy
15 : 26

قَالَ كَلَّا ۚ— فَاذْهَبَا بِاٰیٰتِنَاۤ اِنَّا مَعَكُمْ مُّسْتَمِعُوْنَ ۟

15. அதற்கு (இறைவன்) கூறியதாவது: ‘‘ அவ்வாறல்ல (பயப்படாதீர்; ஹாரூனையும் அழைத்துக் கொண்டு) நீங்கள் இருவரும் என் அத்தாட்சிகளை (எடுத்து)க் கொண்டு செல்லுங்கள். நிச்சயமாக நான் உங்களுடன் இருந்து (அனைத்தையும்) கேட்டுக் கொண்டிருப்பேன். info
التفاسير:

external-link copy
16 : 26

فَاْتِیَا فِرْعَوْنَ فَقُوْلَاۤ اِنَّا رَسُوْلُ رَبِّ الْعٰلَمِیْنَ ۟ۙ

16. ஆகவே, நீங்களிருவரும் ஃபிர்அவ்னிடம் சென்று, ‘‘ நிச்சயமாக நாங்கள் உலகத்தார் அனைவரையும் படைத்து பரிபாலிப்பவனின் தூதர்களாவோம்.'' info
التفاسير:

external-link copy
17 : 26

اَنْ اَرْسِلْ مَعَنَا بَنِیْۤ اِسْرَآءِیْلَ ۟ؕ

17. ஆகவே, ‘‘ இஸ்ராயீலின் சந்ததிகளை நீ எங்களுடன் அனுப்பிவிடு'' எனக் கூறுங்கள்! (என்பதாகவும் கட்டளையிட்டான்.) info
التفاسير:

external-link copy
18 : 26

قَالَ اَلَمْ نُرَبِّكَ فِیْنَا وَلِیْدًا وَّلَبِثْتَ فِیْنَا مِنْ عُمُرِكَ سِنِیْنَ ۟ۙ

18. (அவ்வாறே அவர்கள் ஃபிர்அவ்னிடம் சென்று கூறவே) அதற்கவன் (மூஸாவை நோக்கி) “நாங்கள் உம்மைக் குழந்தையாக எடுத்துக்கொண்டு வளர்க்கவில்லையா? நீர் (உமது வாலிபத்தை அடையும் வரை) பல வருடங்கள் நம்மிடம் வாழ்ந்திருந்தீர். info
التفاسير:

external-link copy
19 : 26

وَفَعَلْتَ فَعْلَتَكَ الَّتِیْ فَعَلْتَ وَاَنْتَ مِنَ الْكٰفِرِیْنَ ۟

19. நீர் செய்(யத் தகா)த (ஒரு) காரியத்தையும் செய்தீர்! (அதை மன்னித்திருந்தும்) நீர் நன்றி கெட்டவராகவே இருக்கிறீர்'' என்றான். info
التفاسير: