د قرآن کریم د معناګانو ژباړه - تامیلي ژباړه- د عمر شریف

د مخ نمبر:close

external-link copy
25 : 57

لَقَدْ اَرْسَلْنَا رُسُلَنَا بِالْبَیِّنٰتِ وَاَنْزَلْنَا مَعَهُمُ الْكِتٰبَ وَالْمِیْزَانَ لِیَقُوْمَ النَّاسُ بِالْقِسْطِ ۚ— وَاَنْزَلْنَا الْحَدِیْدَ فِیْهِ بَاْسٌ شَدِیْدٌ وَّمَنَافِعُ لِلنَّاسِ وَلِیَعْلَمَ اللّٰهُ مَنْ یَّنْصُرُهٗ وَرُسُلَهٗ بِالْغَیْبِ ؕ— اِنَّ اللّٰهَ قَوِیٌّ عَزِیْزٌ ۟۠

திட்டவட்டமாக நாம் நமது தூதர்களை தெளிவான அத்தாட்சிகளைக் கொண்டு அனுப்பினோம். இன்னும், அவர்களுடன் வேதத்தையும் தராசையும் - மக்கள் (அதன் மூலம்) நீதத்தை நிலை நிறுத்துவதற்காக - நாம் இறக்கினோம். இன்னும், இரும்பையும் நாம் (உங்களுக்கு) உருவாக்கினோம் (-சுரங்கங்களிலிருந்து வெளியாக்கிக் கொடுத்தோம்). அதில் உறுதியான வலிமையும் மக்களுக்கு பல பலன்களும் உள்ளன. இன்னும், அல்லாஹ்விற்கும் அவனது தூதருக்கும் மறைவில் உதவி செய்பவரை (வெளிப்படையாக நீங்கள் அறியும்படி) அல்லாஹ் அறிவதற்காகவும் (அல்லாஹ் இரும்பைப் படைத்தான்). நிச்சயமாக அல்லாஹ் வலிமையாளன், மிகைத்தவன் ஆவான். info
التفاسير:

external-link copy
26 : 57

وَلَقَدْ اَرْسَلْنَا نُوْحًا وَّاِبْرٰهِیْمَ وَجَعَلْنَا فِیْ ذُرِّیَّتِهِمَا النُّبُوَّةَ وَالْكِتٰبَ فَمِنْهُمْ مُّهْتَدٍ ۚ— وَكَثِیْرٌ مِّنْهُمْ فٰسِقُوْنَ ۟

திட்டவட்டமாக நாம் நூஹையும் இப்ராஹீமையும் (நமது தூதர்களாக) அனுப்பினோம். இன்னும், அ(வ்விரு)வர்களின் சந்ததியில் நபித்துவத்தையும் வேதங்களையும் நாம் ஏற்படுத்தினோம். ஆக, அவர்க(ளுடைய சந்ததி)களில் நேர்வழி பெற்றவர்களும் உள்ளனர். இன்னும், அவர்க(ளுடைய சந்ததி)களில் அதிகமானவர்கள் பாவிகள் ஆவார்கள். info
التفاسير:

external-link copy
27 : 57

ثُمَّ قَفَّیْنَا عَلٰۤی اٰثَارِهِمْ بِرُسُلِنَا وَقَفَّیْنَا بِعِیْسَی ابْنِ مَرْیَمَ وَاٰتَیْنٰهُ الْاِنْجِیْلَ ۙ۬— وَجَعَلْنَا فِیْ قُلُوْبِ الَّذِیْنَ اتَّبَعُوْهُ رَاْفَةً وَّرَحْمَةً ؕ— وَرَهْبَانِیَّةَ ١بْتَدَعُوْهَا مَا كَتَبْنٰهَا عَلَیْهِمْ اِلَّا ابْتِغَآءَ رِضْوَانِ اللّٰهِ فَمَا رَعَوْهَا حَقَّ رِعَایَتِهَا ۚ— فَاٰتَیْنَا الَّذِیْنَ اٰمَنُوْا مِنْهُمْ اَجْرَهُمْ ۚ— وَكَثِیْرٌ مِّنْهُمْ فٰسِقُوْنَ ۟

பிறகு, அவர்களின் அடிச்சுவடுகளில் (இஸ்ரவேலர்களில்) நமது தூதர்களை நாம் தொடர்ந்து அனுப்பினோம். (இறுதியாக அவர்களை தொடர்ந்து) மர்யமுடைய மகன் ஈஸாவை அனுப்பினோம். அவருக்கு இன்ஜீலை கொடுத்தோம். அவரை (உண்மையாக) பின்பற்றியவர்களின் உள்ளங்களில் இரக்கத்தையும் கருணையையும் நாம் ஏற்படுத்தினோம். அவர்கள் துறவரத்தை மார்க்கத்தில் புதுமையாக ஏற்படுத்திக் கொண்டனர். நாம் அவர்கள் மீது அதை கடமையாக்கவில்லை. அல்லாஹ்வின் பொருத்தத்தை நாடியே தவிர (வேறு ஒன்றுக்காக அவர்கள் அதை ஏற்படுத்தவில்லை). ஆனால், அ(ந்த துறவறத்)தை பேண வேண்டிய முறையில் அதை அவர்கள் பேணவில்லை. அவர்களில் இருந்து எவர்கள் (இந்த நபியையும் இந்த வேதத்தையும்) நம்பிக்கை கொள்வார்களோ அவர்களின் கூலியை நாம் அவர்களுக்குக் கொடுப்போம். இன்னும், அவர்களில் அதிகமானவர்கள் (அல்லாஹ்வின் கட்டளையை மீறக்கூடிய) பாவிகள் ஆவார்கள். info
التفاسير:

external-link copy
28 : 57

یٰۤاَیُّهَا الَّذِیْنَ اٰمَنُوا اتَّقُوا اللّٰهَ وَاٰمِنُوْا بِرَسُوْلِهٖ یُؤْتِكُمْ كِفْلَیْنِ مِنْ رَّحْمَتِهٖ وَیَجْعَلْ لَّكُمْ نُوْرًا تَمْشُوْنَ بِهٖ وَیَغْفِرْ لَكُمْ ؕ— وَاللّٰهُ غَفُوْرٌ رَّحِیْمٌ ۟ۙ

(முந்திய வேதங்களை நம்பிக்கை கொண்ட) நம்பிக்கையாளர்களே! அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள்! இன்னும், அவனது தூதரை நம்பிக்கை கொள்ளுங்கள்! அவன் உங்களுக்கு தனது கருணையிலிருந்து இரு மடங்கு பங்குகளைக் கொடுப்பான். இன்னும், உங்களுக்கு ஒளியை (நீதமான, ஒழுக்கமான, இலகுவான, நேர்வழிமிக்க சட்டங்களை உடைய அழகிய மார்க்கத்தை) ஏற்படுத்துவான். அதன் மூலம் (கண்ணியத்தோடு மக்களுக்கு மத்தியில்) நீங்கள் நடந்து செல்வீர்கள். இன்னும், அவன் உங்களை மன்னிப்பான். அல்லாஹ் மகா மன்னிப்பாளன், மகா கருணையாளன் ஆவான். info
التفاسير:

external-link copy
29 : 57

لِّئَلَّا یَعْلَمَ اَهْلُ الْكِتٰبِ اَلَّا یَقْدِرُوْنَ عَلٰی شَیْءٍ مِّنْ فَضْلِ اللّٰهِ وَاَنَّ الْفَضْلَ بِیَدِ اللّٰهِ یُؤْتِیْهِ مَنْ یَّشَآءُ ؕ— وَاللّٰهُ ذُو الْفَضْلِ الْعَظِیْمِ ۟۠

(நம்பிக்கையாளர்களே! அல்லாஹ் உங்களுக்கு இவ்வளவு நன்மைகளைக் கொடுத்தான்.) ஏனெனில், (இந்த தூதரை நம்பிக்கை கொள்ளாத) வேதக்காரர்கள் அல்லாஹ்வின் அருளில் எதன் மீதும் ஆற்றல் பெற மாட்டார்கள் என்பதையும்; நிச்சயமாக அருள் அல்லாஹ்வின் கரத்தில் இருக்கிறது, அவன் நாடுகிறவர்களுக்கு அதைக் கொடுக்கிறான் என்பதையும் அவர்கள் அறிந்து கொள்வதற்காக ஆகும். அல்லாஹ் மகத்தான அருளுடையவன் ஆவான். info
التفاسير: