د قرآن کریم د معناګانو ژباړه - تامیلي ژباړه- د عمر شریف

د مخ نمبر:close

external-link copy
12 : 57

یَوْمَ تَرَی الْمُؤْمِنِیْنَ وَالْمُؤْمِنٰتِ یَسْعٰی نُوْرُهُمْ بَیْنَ اَیْدِیْهِمْ وَبِاَیْمَانِهِمْ بُشْرٰىكُمُ الْیَوْمَ جَنّٰتٌ تَجْرِیْ مِنْ تَحْتِهَا الْاَنْهٰرُ خٰلِدِیْنَ فِیْهَا ؕ— ذٰلِكَ هُوَ الْفَوْزُ الْعَظِیْمُ ۟ۚ

(நபியே!) நம்பிக்கை கொண்ட ஆண்களையும் நம்பிக்கை கொண்ட பெண்களையும் (மறுமையில்) நீர் பார்ப்பீர், அவர்களின் ஒளி (-அவர்களின் நம்பிக்கை மற்றும் நல்ல அமல்களின் நன்மைகள்) அவர்களுக்கு முன்னர் செல்லும். இன்னும், அவர்களின் வலப்பக்கங்களில் (அவர்களின் செயலேடுகள் பறந்து கொண்டிருக்கும்). இன்று உங்கள் நற்செய்தி சொர்க்கங்களாகும். அவற்றின் கீழ் நதிகள் ஓடும். அவர்கள் அதில் நிரந்தரமாக இருப்பார்கள். அதுதான் மகத்தான வெற்றியாகும். info
التفاسير:

external-link copy
13 : 57

یَوْمَ یَقُوْلُ الْمُنٰفِقُوْنَ وَالْمُنٰفِقٰتُ لِلَّذِیْنَ اٰمَنُوا انْظُرُوْنَا نَقْتَبِسْ مِنْ نُّوْرِكُمْ ۚ— قِیْلَ ارْجِعُوْا وَرَآءَكُمْ فَالْتَمِسُوْا نُوْرًا ؕ— فَضُرِبَ بَیْنَهُمْ بِسُوْرٍ لَّهٗ بَابٌ ؕ— بَاطِنُهٗ فِیْهِ الرَّحْمَةُ وَظَاهِرُهٗ مِنْ قِبَلِهِ الْعَذَابُ ۟ؕ

அந்நாளில் நயவஞ்சகர்களும் நயவஞ்சகிகளும் நம்பிக்கை கொண்டவர்களுக்கு கூறுவார்கள்: “எங்களை (கொஞ்சம்) காத்திருங்கள்! உங்கள் ஒளியிலிருந்து நாங்கள் (கொஞ்சம்) எடுத்துக் கொள்கிறோம்.” (அப்போது அவர்களுக்கு) கூறப்படும் “உங்களுக்குப் பின்னால் (வந்த வழியிலேயே) நீங்கள் திரும்பிச் செல்லுங்கள்! (அங்கு) ஒளியை தேடுங்கள்!” ஆக, அவர்களுக்கு மத்தியில் ஒரு சுவர் அமைக்கப்படும். அதற்கு ஒரு வாசல் இருக்கும். அதன் உள் பக்கம், அதில் அருள் இருக்கும். அதன் வெளிப்பக்கம், அதற்கு முன்னால் தண்டனை இருக்கும். info
التفاسير:

external-link copy
14 : 57

یُنَادُوْنَهُمْ اَلَمْ نَكُنْ مَّعَكُمْ ؕ— قَالُوْا بَلٰی وَلٰكِنَّكُمْ فَتَنْتُمْ اَنْفُسَكُمْ وَتَرَبَّصْتُمْ وَارْتَبْتُمْ وَغَرَّتْكُمُ الْاَمَانِیُّ حَتّٰی جَآءَ اَمْرُ اللّٰهِ وَغَرَّكُمْ بِاللّٰهِ الْغَرُوْرُ ۟

“நாங்கள் உங்களுடன் இருக்கவில்லையா?” என்று (கூறி) அவர்களை கூவி அழைப்பார்கள். அவர்கள் (-நம்பிக்கையாளர்கள்) கூறுவார்கள்: “ஏன் இல்லை. என்றாலும், நீங்கள் (-நயவஞ்சகர்கள்) உங்களையே அழித்துக் கொண்டீர்கள்; இன்னும், (நபிக்கும் நம்பிக்கையாளர்களுக்கும்) ஆபத்து நிகழ வேண்டும் என்று சமயம் பார்த்துக் கொண்டிருந்தீர்கள்; இன்னும், (அல்லாஹ்வின் தூதரின் கூற்றில்) சந்தேகித்தீர்கள்; இன்னும், பொய்யான ஆசைகள் உங்களை மயக்கின. இறுதியாக, அல்லாஹ்வின் கட்டளை வந்துவிட்டது. மயக்கக் கூடியவன் (-ஷைத்தான்) அல்லாஹ்வை விட்டும் உங்களை மயக்கிவிட்டான்.” info
التفاسير:

external-link copy
15 : 57

فَالْیَوْمَ لَا یُؤْخَذُ مِنْكُمْ فِدْیَةٌ وَّلَا مِنَ الَّذِیْنَ كَفَرُوْا ؕ— مَاْوٰىكُمُ النَّارُ ؕ— هِیَ مَوْلٰىكُمْ ؕ— وَبِئْسَ الْمَصِیْرُ ۟

ஆக, இன்றைய தினம் உங்களிடமும் நிராகரிப்பாளர்களிடமும் எவ்வித பரிகாரம் (மீட்புத் தொகை) - வாங்கப்படாது. உங்கள் தங்குமிடம் நரகம்தான். அதுதான் உங்களுக்கு மிக ஏற்றமானது. மீளுமிடங்களில் அது மிகக் கெட்டது. info
التفاسير:

external-link copy
16 : 57

اَلَمْ یَاْنِ لِلَّذِیْنَ اٰمَنُوْۤا اَنْ تَخْشَعَ قُلُوْبُهُمْ لِذِكْرِ اللّٰهِ وَمَا نَزَلَ مِنَ الْحَقِّ ۙ— وَلَا یَكُوْنُوْا كَالَّذِیْنَ اُوْتُوا الْكِتٰبَ مِنْ قَبْلُ فَطَالَ عَلَیْهِمُ الْاَمَدُ فَقَسَتْ قُلُوْبُهُمْ ؕ— وَكَثِیْرٌ مِّنْهُمْ فٰسِقُوْنَ ۟

அல்லாஹ்வை நினைவு கூர்வதாலும் இறங்கிய உண்மையான வேதத்(தை ஓதுவ)தினாலும் அவர்களின் உள்ளங்கள் நடுங்க நம்பிக்கையாளர்களுக்கு நேரம் வரவில்லையா? இன்னும், இதற்கு முன்னர் வேதம் கொடுக்கப்பட்டவர்களைப் போல் அவர்கள் ஆகிவிட வேண்டாம். ஆக, அவர்கள் (-முந்திய வேதக்காரர்கள்) மீது காலம் மிக நீண்டுவிட்டது. ஆகவே, அவர்களின் உள்ளங்கள் இறுகிவிட்டன. இன்னும், அவர்களில் அதிகமானவர்கள் (அல்லாஹ்வின் கட்டளைகளை மீறக்கூடிய) பாவிகள் ஆவார்கள். info
التفاسير:

external-link copy
17 : 57

اِعْلَمُوْۤا اَنَّ اللّٰهَ یُحْیِ الْاَرْضَ بَعْدَ مَوْتِهَا ؕ— قَدْ بَیَّنَّا لَكُمُ الْاٰیٰتِ لَعَلَّكُمْ تَعْقِلُوْنَ ۟

அறிந்து கொள்ளுங்கள்! நிச்சயமாக அல்லாஹ், பூமியை, அது இறந்த பின்னர் உயிர்ப்பிக்கிறான். நீங்கள் சிந்தித்து புரிவதற்காக வசனங்களை நாம் உங்களுக்கு திட்டமாக தெளிவுபடுத்துகிறோம். info
التفاسير:

external-link copy
18 : 57

اِنَّ الْمُصَّدِّقِیْنَ وَالْمُصَّدِّقٰتِ وَاَقْرَضُوا اللّٰهَ قَرْضًا حَسَنًا یُّضٰعَفُ لَهُمْ وَلَهُمْ اَجْرٌ كَرِیْمٌ ۟

நிச்சயமாக (அல்லாஹ்வின் பாதையில்) தர்மம் செய்த ஆண்கள், தர்மம் செய்த பெண்கள், இன்னும், அல்லாஹ்விற்கு அழகிய கடனாக கடன் கொடுத்தவர்கள் அவர்களுக்கு (நற்கூலிகள்) பன்மடங்காக்கப்படும். இன்னும், அவர்களுக்கு கண்ணியமான வெகுமதி(யாகிய சொர்க்கம்) உண்டு. info
التفاسير: