د قرآن کریم د معناګانو ژباړه - تامیلي ژباړه- د عمر شریف

د مخ نمبر:close

external-link copy
16 : 18

وَاِذِ اعْتَزَلْتُمُوْهُمْ وَمَا یَعْبُدُوْنَ اِلَّا اللّٰهَ فَاْوٗۤا اِلَی الْكَهْفِ یَنْشُرْ لَكُمْ رَبُّكُمْ مِّنْ رَّحْمَتِهٖ وَیُهَیِّئْ لَكُمْ مِّنْ اَمْرِكُمْ مِّرْفَقًا ۟

(அவர்களில் சிலர் மற்றவர்களை நோக்கி கூறினார்கள்:) “(சிலைகளை வணங்குகின்ற) அவர்களையும் அல்லாஹ்வைத் தவிர அவர்கள் வணங்குகின்றவற்றையும் விட்டு நீங்கள் விலகி செல்லும்போது (உங்களை பாதுகாத்துக் கொள்வதற்காக) குகையின் பக்கம் ஒதுங்குங்கள். உங்கள் இறைவன் உங்களுக்கு தன் அருளிலிருந்து (தேவையான வாழ்வாதாரத்தை) விரிவாக்கி கொடுப்பான். இன்னும் உங்கள் காரியத்தில் இலகுவை உங்களுக்கு ஏற்படுத்துவான். info
التفاسير:

external-link copy
17 : 18

وَتَرَی الشَّمْسَ اِذَا طَلَعَتْ تَّزٰوَرُ عَنْ كَهْفِهِمْ ذَاتَ الْیَمِیْنِ وَاِذَا غَرَبَتْ تَّقْرِضُهُمْ ذَاتَ الشِّمَالِ وَهُمْ فِیْ فَجْوَةٍ مِّنْهُ ؕ— ذٰلِكَ مِنْ اٰیٰتِ اللّٰهِ ؕ— مَنْ یَّهْدِ اللّٰهُ فَهُوَ الْمُهْتَدِ ۚ— وَمَنْ یُّضْلِلْ فَلَنْ تَجِدَ لَهٗ وَلِیًّا مُّرْشِدًا ۟۠

இன்னும், சூரியன் அது உதிக்கும்போது அவர்களின் குகையை விட்டு வலது பக்கமாக சாய்வதையும் அது மறையும்போது அவர்களை இடது பக்கமாக வெட்டிவி(ட்)டு (கடந்து செல்)வதையும் பார்ப்பீர். அவர்கள் (அக்குகையில் அறை போன்ற) ஒரு விசாலமான பள்ளப்பகுதியில் இருக்கிறார்கள். இது அல்லாஹ்வின் அத்தாட்சிகளில் உள்ளதாகும். எவரை அல்லாஹ் நேர்வழி செலுத்துகிறானோ அவர்தான் நேர்வழி பெற்றவர். இன்னும், எவரை அவன் வழி கெடுப்பானோ அவருக்கு நல்லறிவு புகட்டுகின்ற நண்பனை காணவே மாட்டீர். info
التفاسير:

external-link copy
18 : 18

وَتَحْسَبُهُمْ اَیْقَاظًا وَّهُمْ رُقُوْدٌ ۖۗ— وَّنُقَلِّبُهُمْ ذَاتَ الْیَمِیْنِ وَذَاتَ الشِّمَالِ ۖۗ— وَكَلْبُهُمْ بَاسِطٌ ذِرَاعَیْهِ بِالْوَصِیْدِ ؕ— لَوِ اطَّلَعْتَ عَلَیْهِمْ لَوَلَّیْتَ مِنْهُمْ فِرَارًا وَّلَمُلِئْتَ مِنْهُمْ رُعْبًا ۟

இன்னும், அவர்களோ உறங்குபவர்களாக இருக்கும் நிலையில் அவர்களை விழித்திருப்பவர்களாக கருதுவீர். மேலும், (அவர்களின் உடல்களை மண் தின்றுவிடாமல் இருக்க) அவர்களை வலது பக்கமாகவும் இடது பக்கமாகவும் புரட்டுகிறோம். அவர்களுடைய நாயோ தன் இரு குடங்கைகளையும் முற்றத்தில் விரித்து (உட்கார்ந்து)ள்ளது. நீர் அவர்களை எட்டிப்பார்த்தால் அவர்களை விட்டுத் திரும்பி விரண்டு ஓடி இருப்பீர். இன்னும், உமது உள்ளம் அவர்களின் பயத்தால் நிரப்பப்பட்டிருக்கும். info
التفاسير:

external-link copy
19 : 18

وَكَذٰلِكَ بَعَثْنٰهُمْ لِیَتَسَآءَلُوْا بَیْنَهُمْ ؕ— قَالَ قَآىِٕلٌ مِّنْهُمْ كَمْ لَبِثْتُمْ ؕ— قَالُوْا لَبِثْنَا یَوْمًا اَوْ بَعْضَ یَوْمٍ ؕ— قَالُوْا رَبُّكُمْ اَعْلَمُ بِمَا لَبِثْتُمْ ؕ— فَابْعَثُوْۤا اَحَدَكُمْ بِوَرِقِكُمْ هٰذِهٖۤ اِلَی الْمَدِیْنَةِ فَلْیَنْظُرْ اَیُّهَاۤ اَزْكٰی طَعَامًا فَلْیَاْتِكُمْ بِرِزْقٍ مِّنْهُ  وَلَا یُشْعِرَنَّ بِكُمْ اَحَدًا ۟

(நீண்ட காலமாகியும் எவ்வித மாற்றமும் அவர்களில் ஏற்படாதவாறு அவர்களை பாதுகாத்த) அவ்வாறே, அவர்கள் தங்களுக்கு மத்தியில் (தாங்கள் தூங்கிய கால அளவைப் பற்றி அவர்களுக்குள்) கேட்டுக் கொள்வதற்காக அவர்களை (தூக்கத்திலிருந்து) எழுப்பினோம். “எத்தனை(க் காலம்) தங்கினீர்கள் என்று அவர்களில் ஒருவர் கூறினார். (மற்றவர்கள்) கூறினார்கள்: “ஒரு நாள்; அல்லது, ஒரு நாளின் சில பகுதி தங்கினோம்.”“உங்கள் இறைவன் நீங்கள் தங்கியதை மிக அறிந்தவன். ஆகவே, உங்களில் ஒருவரை உங்கள் வெள்ளி நாணயமாகிய இதைக் கொண்டு பட்டணத்திற்கு அனுப்புங்கள், அவர் அதில் மிக சுத்தமான (-ஹலாலான) உணவை விற்பவர் யார் என்று கவனித்து அவரிடமிருந்து உங்களுக்கு ஓர் உணவைக் கொண்டு வரட்டும். இன்னும், அவர் மதிநுட்பமாக நடக்கட்டும். மேலும், உங்களைப் பற்றி (நகரத்தில் எவர்) ஒருவருக்கும் உணர்த்திவிட வேண்டாம்” என்று(ம்) அவர்கள் கூறினார்கள். info
التفاسير:

external-link copy
20 : 18

اِنَّهُمْ اِنْ یَّظْهَرُوْا عَلَیْكُمْ یَرْجُمُوْكُمْ اَوْ یُعِیْدُوْكُمْ فِیْ مِلَّتِهِمْ وَلَنْ تُفْلِحُوْۤا اِذًا اَبَدًا ۟

நிச்சயமாக அவர்கள் உங்களை அறிந்து கொண்டால் உங்களை ஏசுவார்கள்; (அல்லது, கொன்று விடுவார்கள்;) அல்லது, உங்களை தங்கள் மார்க்கத்திற்கு திருப்பி விடுவார்கள். அவ்வாறு நடந்துவிட்டால் ஒருபோதும் நீங்கள் வெற்றி பெறவே மாட்டீர்கள். info
التفاسير: