د قرآن کریم د معناګانو ژباړه - تامیلي ژباړه- د عمر شریف

د مخ نمبر:close

external-link copy
35 : 18

وَدَخَلَ جَنَّتَهٗ وَهُوَ ظَالِمٌ لِّنَفْسِهٖ ۚ— قَالَ مَاۤ اَظُنُّ اَنْ تَبِیْدَ هٰذِهٖۤ اَبَدًا ۟ۙ

அவனோ (இறைவனுக்கு நன்றி செலுத்தாமல்) தனக்குத் தானே தீங்கிழைத்தவனாக தனது தோட்டத்தில் (பெருமையோடு) நுழைந்தான். இது அழியும் என்று ஒருபோதும் நான் எண்ணவில்லை என்று கூறினான். info
التفاسير:

external-link copy
36 : 18

وَّمَاۤ اَظُنُّ السَّاعَةَ قَآىِٕمَةً ۙ— وَّلَىِٕنْ رُّدِدْتُّ اِلٰی رَبِّیْ لَاَجِدَنَّ خَیْرًا مِّنْهَا مُنْقَلَبًا ۟ۚ

இன்னும், “மறுமை நிகழும் என்றும் நான் எண்ணவில்லை. நான் என் இறைவனிடம் திரும்பக் கொண்டுவரப்பட்டாலும் இதைவிட சிறந்த (இடத்)தை (எனக்கு) மீளுமிடமாக நிச்சயம் நான் பெறுவேன்.” info
التفاسير:

external-link copy
37 : 18

قَالَ لَهٗ صَاحِبُهٗ وَهُوَ یُحَاوِرُهٗۤ اَكَفَرْتَ بِالَّذِیْ خَلَقَكَ مِنْ تُرَابٍ ثُمَّ مِنْ نُّطْفَةٍ ثُمَّ سَوّٰىكَ رَجُلًا ۟ؕ

அவரது தோழர், - அவரோ அவனிடம் பேசியவராக - அவனுக்கு கூறினார்: “உன்னை (உன் மூல தந்தை ஆதமை) மண்ணிலிருந்தும், பிறகு (உன்னை) இந்திரியத்திலிருந்தும் படைத்து; பிறகு, உன்னை ஓர் ஆடவராக சீரமைத்தானே அப்படிப்பட்ட (இறை)வனை நீ நிராகரிக்கிறாயா? info
التفاسير:

external-link copy
38 : 18

لٰكِنَّاۡ هُوَ اللّٰهُ رَبِّیْ وَلَاۤ اُشْرِكُ بِرَبِّیْۤ اَحَدًا ۟

எனினும், நான் அவ்வாறு செய்யமாட்டேன். அல்லாஹ்வாகிய அவன்தான் என் இறைவன். என் இறைவனுக்கு ஒருவரையும் நான் இணையாக்க மாட்டேன்.” info
التفاسير:

external-link copy
39 : 18

وَلَوْلَاۤ اِذْ دَخَلْتَ جَنَّتَكَ قُلْتَ مَا شَآءَ اللّٰهُ ۙ— لَا قُوَّةَ اِلَّا بِاللّٰهِ ۚ— اِنْ تَرَنِ اَنَا اَقَلَّ مِنْكَ مَالًا وَّوَلَدًا ۟ۚ

மேலும், உன் தோட்டத்தில் நீ நுழைந்தபோது, “இது அல்லாஹ் நாடி (எனக்கு) கிடைத்தது, அல்லாஹ்வைக் கொண்டே தவிர (நமக்கு) அறவே ஆற்றல் இல்லை” என்று நீ கூறியிருக்க வேண்டாமா? நான் உன்னைவிட செல்வத்திலும் சந்ததியிலும் குறைந்தவனாக இருப்பதாக என்னை நீ பார்த்தால், info
التفاسير:

external-link copy
40 : 18

فَعَسٰی رَبِّیْۤ اَنْ یُّؤْتِیَنِ خَیْرًا مِّنْ جَنَّتِكَ وَیُرْسِلَ عَلَیْهَا حُسْبَانًا مِّنَ السَّمَآءِ فَتُصْبِحَ صَعِیْدًا زَلَقًا ۟ۙ

ஆக, உன் தோட்டத்தை விட சிறந்ததை என் இறைவன் எனக்குத் தரக்கூடும். இன்னும் அ(ந்)த (உன் தோட்டத்தி)ன் மீது வானத்திலிருந்து அழிவை (இரவில்) அவன் அனுப்பக்கூடும். (அப்போது அத்தோட்டம்) வழுவழுப்பான வெறும் தரையாக காலையில் ஆகிவிடும். info
التفاسير:

external-link copy
41 : 18

اَوْ یُصْبِحَ مَآؤُهَا غَوْرًا فَلَنْ تَسْتَطِیْعَ لَهٗ طَلَبًا ۟

“அல்லது, அதன் தண்ணீர் (பூமியின்) ஆழத்தில் சென்று விடக் கூடும். ஆகவே, அதைத் தேடி (மேலே) கொண்டு வருவதற்கு அறவே நீ இயலமாட்டாய்.” info
التفاسير:

external-link copy
42 : 18

وَاُحِیْطَ بِثَمَرِهٖ فَاَصْبَحَ یُقَلِّبُ كَفَّیْهِ عَلٰی مَاۤ اَنْفَقَ فِیْهَا وَهِیَ خَاوِیَةٌ عَلٰی عُرُوْشِهَا وَیَقُوْلُ یٰلَیْتَنِیْ لَمْ اُشْرِكْ بِرَبِّیْۤ اَحَدًا ۟

இன்னும், அவனுடைய கனிகள் (இதர செல்வங்கள்) எல்லாம் அழிந்தன. ஆக, தான் அதில் செலவழித்ததின் மீது (வருத்தப்பட்டு) தன் இரு கைகளையும் அவன் புரட்ட ஆரம்பித்தான். இன்னும், அதன் செடி கொடிகளை விட்டு அ(வனது தோட்டமான)து வெறுமையாகி விட்டது. மேலும், அவன் (மறுமையில்) கூறுவான்: “என் இறைவனுக்கு ஒருவரையும் நான் இணையாக்காமல் இருந்திருக்க வேண்டுமே!” info
التفاسير:

external-link copy
43 : 18

وَلَمْ تَكُنْ لَّهٗ فِئَةٌ یَّنْصُرُوْنَهٗ مِنْ دُوْنِ اللّٰهِ وَمَا كَانَ مُنْتَصِرًا ۟ؕ

மேலும், அல்லாஹ்வை அன்றி அவனுக்கு உதவுகிற கூட்டம் எதுவும் அவனுக்கு இருக்கவில்லை. இன்னும், அவன் தன்னைத் தானே பாதுகாப்பவனாகவும் இருக்கவில்லை. info
التفاسير:

external-link copy
44 : 18

هُنَالِكَ الْوَلَایَةُ لِلّٰهِ الْحَقِّ ؕ— هُوَ خَیْرٌ ثَوَابًا وَّخَیْرٌ عُقْبًا ۟۠

அந்நேரத்தில் உதவி (நட்பு, அதிகாரம் அனைத்தும்) உண்மையான அல்லாஹ்விற்கே உரியது. அவன் நன்மையாலும் சிறந்தவன், முடிவாலும் சிறந்தவன் ஆவான். info
التفاسير:

external-link copy
45 : 18

وَاضْرِبْ لَهُمْ مَّثَلَ الْحَیٰوةِ الدُّنْیَا كَمَآءٍ اَنْزَلْنٰهُ مِنَ السَّمَآءِ فَاخْتَلَطَ بِهٖ نَبَاتُ الْاَرْضِ فَاَصْبَحَ هَشِیْمًا تَذْرُوْهُ الرِّیٰحُ ؕ— وَكَانَ اللّٰهُ عَلٰی كُلِّ شَیْءٍ مُّقْتَدِرًا ۟

மேலும், (நபியே!) அவர்களுக்கு உலக வாழ்க்கையின் தன்மை மழை நீரைப் போன்றது என்று விவரிப்பீராக! (அதாவது,) அதை வானத்திலிருந்து நாம் இறக்கினோம். பூமியின் தாவரம் அதனுடன் கலந்(து வளர்ந்)தது. (பிறகு சில காலத்தில்) காற்றுகள் அதை அடித்து வீசும்படியான காய்ந்த சருகாக அது மாறி விட்டது. (இது போன்றுதான் இந்த உலக வாழ்க்கையும் ஒன்றுமில்லாமல் ஆகிவிடும்.) மேலும், அல்லாஹ் எல்லாவற்றின் மீதும் பேராற்றலுடையவனாக இருக்கிறான். info
التفاسير: