ߞߎ߬ߙߣߊ߬ ߞߟߊߒߞߋ ߞߘߐ ߟߎ߬ ߘߟߊߡߌߘߊ - ߕߊ߬ߡߌ߰ߟߌ߬ߞߊ߲ ߘߟߊߡߌߘߊ - ߎߡߊߙߎ߫ ߛ߭ߊ߬ߙߌ߯ߝߎ߫ ߓߟߏ߫

ߞߐߜߍ ߝߙߍߕߍ:close

external-link copy
82 : 21

وَمِنَ الشَّیٰطِیْنِ مَنْ یَّغُوْصُوْنَ لَهٗ وَیَعْمَلُوْنَ عَمَلًا دُوْنَ ذٰلِكَ ۚ— وَكُنَّا لَهُمْ حٰفِظِیْنَ ۟ۙ

(கடலில்) அவருக்காக மூழ்கி (முத்து பவளங்களை எடுத்து) வருபவர்களையும் அது அல்லாத வேறு செயலை செய்பவர்களையும் ஷைத்தான்களில் இருந்து நாம் அவருக்கு அடிபணிய வைத்தோம். இன்னும், அவர்களை கண்காணிப்பவர்களாக நாம் இருந்தோம். info
التفاسير:

external-link copy
83 : 21

وَاَیُّوْبَ اِذْ نَادٰی رَبَّهٗۤ اَنِّیْ مَسَّنِیَ الضُّرُّ وَاَنْتَ اَرْحَمُ الرّٰحِمِیْنَ ۟ۚۖ

இன்னும், அய்யூபை நினைவு கூர்வீராக! அவர் தன் இறைவனை அழைத்தபோது, “நிச்சயமாக நான் (உனது அடிமை,) எனக்கு நோய் ஏற்பட்டது. நீயோ கருணையாளர்களில் மகா கருணையாளன்! (ஆகவே, எனக்கு சுகமளிப்பாயாக!”) info
التفاسير:

external-link copy
84 : 21

فَاسْتَجَبْنَا لَهٗ فَكَشَفْنَا مَا بِهٖ مِنْ ضُرٍّ وَّاٰتَیْنٰهُ اَهْلَهٗ وَمِثْلَهُمْ مَّعَهُمْ رَحْمَةً مِّنْ عِنْدِنَا وَذِكْرٰی لِلْعٰبِدِیْنَ ۟

ஆக, அவருக்கு நாம் பதிலளித்தோம். ஆக, அவருக்கு இருந்த நோயை (அவரை விட்டு) அகற்றினோம். இன்னும், அவருக்கு அவருடைய குடும்பத்தையும் அவர்களுடன் அவர்கள் போன்ற (மற்ற)வர்களையும் அவருக்கு வழங்கினோம், நம் புறத்திலிருந்து (அவர் மீது) கருணையாகவும் வணக்கசாலிகளுக்கு நினைவூட்டலாகவும் இருப்பதற்காக. info
التفاسير:

external-link copy
85 : 21

وَاِسْمٰعِیْلَ وَاِدْرِیْسَ وَذَا الْكِفْلِ ؕ— كُلٌّ مِّنَ الصّٰبِرِیْنَ ۟

இன்னும், இஸ்மாயீலையும் இத்ரீஸையும் துல்கிஃப்லையும் நினைவு கூர்வீராக! (இவர்கள்) எல்லோரும் பொறுமையாளர்களில் உள்ளவர்கள். info
التفاسير:

external-link copy
86 : 21

وَاَدْخَلْنٰهُمْ فِیْ رَحْمَتِنَا ؕ— اِنَّهُمْ مِّنَ الصّٰلِحِیْنَ ۟

இவர்களை நமது அருளில் நாம் பிரவேசிக்க செய்தோம். நிச்சயமாக இவர்கள் (வணக்க வழிபாடுகளை அதிகம் செய்த) நல்லவர்களில் உள்ளவர்கள் ஆவார்கள். info
التفاسير:

external-link copy
87 : 21

وَذَا النُّوْنِ اِذْ ذَّهَبَ مُغَاضِبًا فَظَنَّ اَنْ لَّنْ نَّقْدِرَ عَلَیْهِ فَنَادٰی فِی الظُّلُمٰتِ اَنْ لَّاۤ اِلٰهَ اِلَّاۤ اَنْتَ سُبْحٰنَكَ ۖۗ— اِنِّیْ كُنْتُ مِنَ الظّٰلِمِیْنَ ۟ۚۖ

இன்னும், மீனுடையவரை நினைவு கூர்வீராக! அவர் கோபித்தவராக சென்றபோது, நாம் அவருக்கு அறவே நெருக்கடியை கொடுக்க மாட்டோம் என்று எண்ணினார். ஆக, அவர் இருள்களில் இருந்தவராக (என்னை) அழைத்தார், “நிச்சயமாக உன்னைத் தவிர (உண்மையில் வணங்கத்தகுதியான) இறைவன் அறவே இல்லை. நீ மகா பரிசுத்தமானவன். நிச்சயமாக நான் அநியாயக்காரர்களில் இருக்கிறேன்.” info
التفاسير:

external-link copy
88 : 21

فَاسْتَجَبْنَا لَهٗ ۙ— وَنَجَّیْنٰهُ مِنَ الْغَمِّ ؕ— وَكَذٰلِكَ نُـجِی الْمُؤْمِنِیْنَ ۟

ஆக, அவருக்கு நாம் பதிலளித்தோம். இன்னும், அவரை கடும் துக்கத்திலிருந்து நாம் பாதுகாத்தோம். இப்படித்தான் நம்பிக்கையாளர்களை நாம் பாதுகாப்போம். info
التفاسير:

external-link copy
89 : 21

وَزَكَرِیَّاۤ اِذْ نَادٰی رَبَّهٗ رَبِّ لَا تَذَرْنِیْ فَرْدًا وَّاَنْتَ خَیْرُ الْوٰرِثِیْنَ ۟ۚۖ

இன்னும், ஸகரிய்யாவை நினைவு கூர்வீராக! அவர் தன் இறைவனை அழைத்தபோது, என் இறைவா! என்னை (சந்ததி இன்றி) தனி ஒருத்தனாக விட்டுவிடாதே! நீதான் வாரிசுகளில் மிகச் சிறந்தவன். info
التفاسير:

external-link copy
90 : 21

فَاسْتَجَبْنَا لَهٗ ؗ— وَوَهَبْنَا لَهٗ یَحْیٰی وَاَصْلَحْنَا لَهٗ زَوْجَهٗ ؕ— اِنَّهُمْ كَانُوْا یُسٰرِعُوْنَ فِی الْخَیْرٰتِ وَیَدْعُوْنَنَا رَغَبًا وَّرَهَبًا ؕ— وَكَانُوْا لَنَا خٰشِعِیْنَ ۟

ஆக, அவருக்கு நாம் பதிலளித்தோம். இன்னும், அவருக்கு யஹ்யாவை (வாரிசாக) வழங்கினோம். இன்னும், (அதற்கு முன்னர்) அவருடைய மனைவியை அவருக்கு சீர்படுத்தினோம். நிச்சயமாக அவர்கள் (எல்லோரும்) நன்மைகளில் விரைபவர்களாகவும் ஆர்வத்துடனும் பயத்துடனும் நம்மை அழைப்பவர்களாகவும் (-வணங்குபவர்களாகவும்) இருந்தனர். இன்னும் அவர்கள் நமக்கு (பயந்து) பணிந்தவர்களாக இருந்தனர். info
التفاسير: