ߞߎ߬ߙߣߊ߬ ߞߟߊߒߞߋ ߞߘߐ ߟߎ߬ ߘߟߊߡߌߘߊ - ߕߊ߬ߡߌ߰ߟߌ߬ߞߊ߲ ߘߟߊߡߌߘߊ - ߎߡߊߙߎ߫ ߛ߭ߊ߬ߙߌ߯ߝߎ߫ ߓߟߏ߫

ߞߐߜߍ ߝߙߍߕߍ:close

external-link copy
11 : 21

وَكَمْ قَصَمْنَا مِنْ قَرْیَةٍ كَانَتْ ظَالِمَةً وَّاَنْشَاْنَا بَعْدَهَا قَوْمًا اٰخَرِیْنَ ۟

தீயவர்களாக இருந்த எத்தனையோ பல ஊர்(வாசி)களை நாம் அழித்தோம். அவர்களுக்குப் பின்னர் வேறு மக்களை நாம் உருவாக்கினோம். info
التفاسير:

external-link copy
12 : 21

فَلَمَّاۤ اَحَسُّوْا بَاْسَنَاۤ اِذَا هُمْ مِّنْهَا یَرْكُضُوْنَ ۟ؕ

ஆக, அவர்கள் நமது தண்டனையை உணர்ந்தபோது அப்போது அவர்கள் அதிலிருந்து (தப்பிப்பதற்காக) விரைந்து ஓடினர். info
التفاسير:

external-link copy
13 : 21

لَا تَرْكُضُوْا وَارْجِعُوْۤا اِلٰی مَاۤ اُتْرِفْتُمْ فِیْهِ وَمَسٰكِنِكُمْ لَعَلَّكُمْ تُسْـَٔلُوْنَ ۟

விரைந்து ஓடாதீர்கள். நீங்கள் எதில் பெரும் இன்பம் அனுபவித்து வந்தீர்களோ அதன் பக்கமும் உங்கள் (ஆடம்பரமான) இல்லங்களின் பக்கமும் திரும்புங்கள்! “நீங்கள் (உங்கள் உலக செல்வத்திலிருந்து சிறிது) கேட்கப்படுவீர்கள்” (அதை கொடுத்து நீங்கள் தப்பித்து விடலாம் என்று கேலியாக கூறப்படும்.) info
التفاسير:

external-link copy
14 : 21

قَالُوْا یٰوَیْلَنَاۤ اِنَّا كُنَّا ظٰلِمِیْنَ ۟

(தண்டனை இறக்கப்பட்ட) அவர்கள் கூறினார்கள்: எங்கள் நாசமே! நிச்சயமாக நாங்கள் அநியாயக்காரர்களாக இருந்தோம். info
التفاسير:

external-link copy
15 : 21

فَمَا زَالَتْ تِّلْكَ دَعْوٰىهُمْ حَتّٰی جَعَلْنٰهُمْ حَصِیْدًا خٰمِدِیْنَ ۟

ஆக, அதுவே அவர்களது கூப்பாடாக நீடித்திருந்தது. இறுதியாக, அவர்களை (வாளால்) அறுக்கப்பட்டவர்களாக, அழிந்து நாசமடைந்தவர்களாக நாம் ஆக்கிவிட்டோம். info
التفاسير:

external-link copy
16 : 21

وَمَا خَلَقْنَا السَّمَآءَ وَالْاَرْضَ وَمَا بَیْنَهُمَا لٰعِبِیْنَ ۟

இன்னும், வானத்தையும் பூமியையும் அவ்விரண்டுக்கும் இடையில் உள்ளவற்றையும் நாம் (வீண் விளையாட்டு) விளையாடுபவர்களாக படைக்கவில்லை. info
التفاسير:

external-link copy
17 : 21

لَوْ اَرَدْنَاۤ اَنْ نَّتَّخِذَ لَهْوًا لَّاتَّخَذْنٰهُ مِنْ لَّدُنَّاۤ ۖۗ— اِنْ كُنَّا فٰعِلِیْنَ ۟

நாம் வேடிக்கையை (-மனைவியை) ஏற்படுத்த நாடி இருந்தால் அதை நம்மிடமிருந்தே ஏற்படுத்திக் கொண்டிருப்போம். (ஆனால், அது நமக்கு தகுதியானதல்ல என்பதால்) நாம் (அப்படி) செய்பவர்களாக இல்லை. info
التفاسير:

external-link copy
18 : 21

بَلْ نَقْذِفُ بِالْحَقِّ عَلَی الْبَاطِلِ فَیَدْمَغُهٗ فَاِذَا هُوَ زَاهِقٌ ؕ— وَلَكُمُ الْوَیْلُ مِمَّا تَصِفُوْنَ ۟

மாறாக, நாம் சத்தியத்தை அசத்தியத்தின் மீது எறிகிறோம். அதை உடைத்து விடுகிறது அது. அப்போது அ(ந்த அசத்தியமான)து அழிந்து விடுகிறது. நீங்கள் (உங்கள் இறைவனை தவறாக) வர்ணிக்கின்ற காரணத்தால் உங்களுக்கு அழிவுதான். info
التفاسير:

external-link copy
19 : 21

وَلَهٗ مَنْ فِی السَّمٰوٰتِ وَالْاَرْضِ ؕ— وَمَنْ عِنْدَهٗ لَا یَسْتَكْبِرُوْنَ عَنْ عِبَادَتِهٖ وَلَا یَسْتَحْسِرُوْنَ ۟ۚ

வானங்களிலும் பூமியிலும் உள்ளவர்கள் அவனுக்கே உரிமையானவர்கள். இன்னும், அவனிடம் இருக்கின்ற (வான)வர்கள் அவனை வணங்குவதற்கு வீம்புபிடிக்க மாட்டார்கள். இன்னும் (அதில்) சோர்வடைய மாட்டார்கள். info
التفاسير:

external-link copy
20 : 21

یُسَبِّحُوْنَ الَّیْلَ وَالنَّهَارَ لَا یَفْتُرُوْنَ ۟

அவர்கள் இரவு பகலாக (சடைவில்லாமல் அல்லாஹ்வை) துதிக்கிறார்கள். அவர்கள் பலவீனமடைய மாட்டார்கள். info
التفاسير:

external-link copy
21 : 21

اَمِ اتَّخَذُوْۤا اٰلِهَةً مِّنَ الْاَرْضِ هُمْ یُنْشِرُوْنَ ۟

அ(ல்லாஹ்விற்கு இணைவைக்கின்ற அ)வர்கள், (மரணித்தவர்களை) உயிர்ப்பி(ப்பதற்கு சக்தி இரு)க்கின்ற கடவுள்களையா பூமியில் (வணக்க வழிபாட்டுக்கு) எடுத்துக் கொண்டார்கள்? (அல்லாஹ்வை அன்றி இறந்தவர்களை உயிர்ப்பிப்பவர் யார் இருக்கிறார்?) info
التفاسير:

external-link copy
22 : 21

لَوْ كَانَ فِیْهِمَاۤ اٰلِهَةٌ اِلَّا اللّٰهُ لَفَسَدَتَا ۚ— فَسُبْحٰنَ اللّٰهِ رَبِّ الْعَرْشِ عَمَّا یَصِفُوْنَ ۟

(வானம், பூமி) அவை இரண்டிலும் அல்லாஹ்வைத் தவிர (வேறு) கடவுள்கள் இருந்திருந்தால் அவை இரண்டும் சீரழிந்திருக்கும். ஆக, (இணைவைக்கும்) அவர்கள் வர்ணிப்பதை விட்டும் அர்ஷுடைய அதிபதியான அல்லாஹ் மகாத்தூயவன். info
التفاسير:

external-link copy
23 : 21

لَا یُسْـَٔلُ عَمَّا یَفْعَلُ وَهُمْ یُسْـَٔلُوْنَ ۟

அவன் செய்வதைப் பற்றி கேள்வி கேட்கப்பட மாட்டான். அவர்கள்தான் கேள்வி கேட்கப்படுவார்கள். info
التفاسير:

external-link copy
24 : 21

اَمِ اتَّخَذُوْا مِنْ دُوْنِهٖۤ اٰلِهَةً ؕ— قُلْ هَاتُوْا بُرْهَانَكُمْ ۚ— هٰذَا ذِكْرُ مَنْ مَّعِیَ وَذِكْرُ مَنْ قَبْلِیْ ؕ— بَلْ اَكْثَرُهُمْ لَا یَعْلَمُوْنَ ۙ— الْحَقَّ فَهُمْ مُّعْرِضُوْنَ ۟

அவ(ன் ஒருவ)னை அன்றி பல கடவுள்களை அவர்கள் எடுத்துக் கொண்டார்களா? (நபியே!) கூறுவீராக: “உங்கள் ஆதாரத்தைக் கொண்டு வாருங்கள். இது என்னுடன் உள்ளவர்களைப் பற்றிய செய்தியாகும்; இன்னும், எனக்கு முன் உள்ளவர்களைப் பற்றிய செய்தியாகும். மாறாக, அவர்களில் அதிகமானவர்கள் சத்தியத்தை அறியமாட்டார்கள். ஆகவே, அவர்கள் (சத்தியத்தை) புறக்கணிப்பவர்கள் ஆவார்கள்.” info
التفاسير: