ߞߎ߬ߙߣߊ߬ ߞߟߊߒߞߋ ߞߘߐ ߟߎ߬ ߘߟߊߡߌߘߊ - ߕߊ߬ߡߌ߰ߟߌ߬ߞߊ߲ ߘߟߊߡߌߘߊ - ߎߡߊߙߎ߫ ߛ߭ߊ߬ߙߌ߯ߝߎ߫ ߓߟߏ߫

ߞߐߜߍ ߝߙߍߕߍ:close

external-link copy
111 : 16

یَوْمَ تَاْتِیْ كُلُّ نَفْسٍ تُجَادِلُ عَنْ نَّفْسِهَا وَتُوَفّٰی كُلُّ نَفْسٍ مَّا عَمِلَتْ وَهُمْ لَا یُظْلَمُوْنَ ۟

ஒவ்வோர் ஆன்மாவும் தன்னைப் பற்றி தானே தர்க்கித்ததாக வருகிற நாளில் (அல்லாஹ் அந்த தியாகிகளை மன்னிப்பான்). மேலும், (அந்நாளில்) ஒவ்வோர் ஆன்மாவுக்கும் அது செய்த செயல்களுக்கு முழுமையாக கூலி கொடுக்கப்படும். மேலும், அவர்கள் அநீதியிழைக்கப்பட மாட்டார்கள். info
التفاسير:

external-link copy
112 : 16

وَضَرَبَ اللّٰهُ مَثَلًا قَرْیَةً كَانَتْ اٰمِنَةً مُّطْمَىِٕنَّةً یَّاْتِیْهَا رِزْقُهَا رَغَدًا مِّنْ كُلِّ مَكَانٍ فَكَفَرَتْ بِاَنْعُمِ اللّٰهِ فَاَذَاقَهَا اللّٰهُ لِبَاسَ الْجُوْعِ وَالْخَوْفِ بِمَا كَانُوْا یَصْنَعُوْنَ ۟

ஓர் ஊரை அல்லாஹ் உதாரணமாக விவரிக்கிறான். அது, நிம்மதி பெற்றதாக, அச்சமற்றதாக இருந்தது. எல்லா இடங்களிலிருந்தும் தாராளமாக அதன் உணவு (-வாழ்வாதார தேவை) அதற்கு வந்தது. ஆக, (இப்படி இருக்கும் நிலையில்) அது அல்லாஹ்வு(க்கு மாறுசெய்து அவனு)டைய அருட்கொடைகளை நிராகரித்தது. ஆகவே, அ(வ்வூரில் உள்ள)வர்கள் செய்து கொண்டிருந்த (தீய)வற்றின் காரணமாக அல்லாஹ் பசி; இன்னும், பயத்தின் ஆடையை அதற்கு (-அந்த ஊர் மக்களுக்கு) சுவைக்கச் செய்தான். (அவர்கள் உடல் மெலிந்தவர்களாக, பயந்து நடுங்கியவர்களாக ஆகிவிட்டனர்.) info
التفاسير:

external-link copy
113 : 16

وَلَقَدْ جَآءَهُمْ رَسُوْلٌ مِّنْهُمْ فَكَذَّبُوْهُ فَاَخَذَهُمُ الْعَذَابُ وَهُمْ ظٰلِمُوْنَ ۟

இன்னும், அவர்களிலிருந்தே ஒரு தூதர் திட்டவட்டமாக அவர்களிடம் வந்தார். ஆக, அவர்கள் அவரைப் பொய்ப்பித்தனர். ஆகவே, அவர்கள் அநியாயக்காரர்களாக இருக்கின்ற நிலையில் அவர்களை (அல்லாஹ்வின்) தண்டனைப் பிடித்தது. info
التفاسير:

external-link copy
114 : 16

فَكُلُوْا مِمَّا رَزَقَكُمُ اللّٰهُ حَلٰلًا طَیِّبًا ۪— وَّاشْكُرُوْا نِعْمَتَ اللّٰهِ اِنْ كُنْتُمْ اِیَّاهُ تَعْبُدُوْنَ ۟

ஆக, (நம்பிக்கையாளர்களே!) அல்லாஹ் உங்களுக்கு அளித்தவற்றில் ஆகுமானதை, நல்லதை புசியுங்கள்! மேலும், அல்லாஹ்வின் அருட்கொடைகளுக்கு நன்றி செலுத்துங்கள்! நீங்கள் அவனையே வணங்குபவர்களாக இருந்தால். info
التفاسير:

external-link copy
115 : 16

اِنَّمَا حَرَّمَ عَلَیْكُمُ الْمَیْتَةَ وَالدَّمَ وَلَحْمَ الْخِنْزِیْرِ وَمَاۤ اُهِلَّ لِغَیْرِ اللّٰهِ بِهٖ ۚ— فَمَنِ اضْطُرَّ غَیْرَ بَاغٍ وَّلَا عَادٍ فَاِنَّ اللّٰهَ غَفُوْرٌ رَّحِیْمٌ ۟

அவன் உங்கள் மீது தடுத்ததெல்லாம் செத்தது, இரத்தம், பன்றியின் மாமிசம், அல்லாஹ் அல்லாதவற்றின் பெயர் கூறப்பட்(டு அறுக்கப்பட்)டவை ஆகியவையாகும். ஆக, எவர் (அதை) விரும்பியவராக அல்லாமல், (சட்டத்தை) மீறியவராக அல்லாமல் (பசியின் கொடுமையால் மேற் கூறப்பட்ட தடுக்கப்பட்டவற்றில் எதையும் உண்ணவேண்டிய) நிர்ப்பந்தத்திற்குள்ளானாரோ நிச்சயமாக அல்லாஹ் (அவரை மன்னித்து கருணை புரியும்) மகா மன்னிப்பாளன், மகா கருணையாளன் ஆவான். info
التفاسير:

external-link copy
116 : 16

وَلَا تَقُوْلُوْا لِمَا تَصِفُ اَلْسِنَتُكُمُ الْكَذِبَ هٰذَا حَلٰلٌ وَّهٰذَا حَرَامٌ لِّتَفْتَرُوْا عَلَی اللّٰهِ الْكَذِبَ ؕ— اِنَّ الَّذِیْنَ یَفْتَرُوْنَ عَلَی اللّٰهِ الْكَذِبَ لَا یُفْلِحُوْنَ ۟ؕ

மேலும், நீங்கள் அல்லாஹ்வின் மீது இட்டுக்கட்டுவதற்காக உங்கள் நாவுகள் வருணிக்கும் பொய்களின் பிரகாரம் “இது ஹலால் - ஆகுமானதாகும்; இது ஹராம் ஆகாததாகும்” என்று கூறாதீர்கள். நிச்சயமாக எவர்கள் அல்லாஹ்வின் மீது பொய்யை இட்டுக்கட்டுகிறார்களோ அவர்கள் வெற்றி பெற மாட்டார்கள். info
التفاسير:

external-link copy
117 : 16

مَتَاعٌ قَلِیْلٌ ۪— وَّلَهُمْ عَذَابٌ اَلِیْمٌ ۟

(உலகில் அவர்கள் அனுபவிப்பதோ) ஒரு சொற்ப இன்பமாகும். இன்னும், (மறுமையில்) துன்புறுத்தக்கூடிய தண்டனை அவர்களுக்கு உண்டு. info
التفاسير:

external-link copy
118 : 16

وَعَلَی الَّذِیْنَ هَادُوْا حَرَّمْنَا مَا قَصَصْنَا عَلَیْكَ مِنْ قَبْلُ ۚ— وَمَا ظَلَمْنٰهُمْ وَلٰكِنْ كَانُوْۤا اَنْفُسَهُمْ یَظْلِمُوْنَ ۟

(நபியே!) இதற்கு முன்னர் (6ம் அத்தியாயம் 146ம் வசனத்தில்) நாம் உம்மீது விவரித்தவற்றை யூதர்கள் மீது (ஹராம் என்று) தடுத்தோம். நாம் அவர்களுக்குத் தீங்கிழைக்கவில்லை. எனினும், அவர்கள்தான் தங்களுக்குத் தாமே தீங்கிழைப்பவர்களாக இருந்தனர். info
التفاسير: