വിശുദ്ധ ഖുർആൻ പരിഭാഷ - തമിഴ് പരിഭാഷ - ഉമർ ശരീഫ്

പേജ് നമ്പർ:close

external-link copy
10 : 5

وَالَّذِیْنَ كَفَرُوْا وَكَذَّبُوْا بِاٰیٰتِنَاۤ اُولٰٓىِٕكَ اَصْحٰبُ الْجَحِیْمِ ۟

இன்னும், எவர்கள் நிராகரித்து நம் வசனங்களை பொய்ப்பித்தார்களோ அவர்கள் நரகவாசிகள் ஆவார்கள். info
التفاسير:

external-link copy
11 : 5

یٰۤاَیُّهَا الَّذِیْنَ اٰمَنُوا اذْكُرُوْا نِعْمَتَ اللّٰهِ عَلَیْكُمْ اِذْ هَمَّ قَوْمٌ اَنْ یَّبْسُطُوْۤا اِلَیْكُمْ اَیْدِیَهُمْ فَكَفَّ اَیْدِیَهُمْ عَنْكُمْ ۚ— وَاتَّقُوا اللّٰهَ ؕ— وَعَلَی اللّٰهِ فَلْیَتَوَكَّلِ الْمُؤْمِنُوْنَ ۟۠

நம்பிக்கையாளர்களே! உங்கள் மீதுள்ள அல்லாஹ்வின் அருளை நினைவு கூருங்கள், ஒரு சமுதாயம் தங்கள் கரங்களை உங்கள் பக்கம் நீட்ட நாடியபோது, அல்லாஹ் அவர்களுடைய கரங்களை உங்களை விட்டுத் தடுத்தான். இன்னும், அல்லாஹ்வை அஞ்சுங்கள். இன்னும், நம்பிக்கையாளர்கள் அல்லாஹ்வின் மீதே நம்பிக்கை வை(த்து அவனை மட்டுமே சார்ந்து இரு)க்கவும். info
التفاسير:

external-link copy
12 : 5

وَلَقَدْ اَخَذَ اللّٰهُ مِیْثَاقَ بَنِیْۤ اِسْرَآءِیْلَ ۚ— وَبَعَثْنَا مِنْهُمُ اثْنَیْ عَشَرَ نَقِیْبًا ؕ— وَقَالَ اللّٰهُ اِنِّیْ مَعَكُمْ ؕ— لَىِٕنْ اَقَمْتُمُ الصَّلٰوةَ وَاٰتَیْتُمُ الزَّكٰوةَ وَاٰمَنْتُمْ بِرُسُلِیْ وَعَزَّرْتُمُوْهُمْ وَاَقْرَضْتُمُ اللّٰهَ قَرْضًا حَسَنًا لَّاُكَفِّرَنَّ عَنْكُمْ سَیِّاٰتِكُمْ وَلَاُدْخِلَنَّكُمْ جَنّٰتٍ تَجْرِیْ مِنْ تَحْتِهَا الْاَنْهٰرُ ۚ— فَمَنْ كَفَرَ بَعْدَ ذٰلِكَ مِنْكُمْ فَقَدْ ضَلَّ سَوَآءَ السَّبِیْلِ ۟

திட்டமாக அல்லாஹ் இஸ்ரவேலர்களின் உறுதிமொழியை வாங்கினான். இன்னும் அவர்களிலிருந்து பன்னிரண்டு தலைவர்களை நாம் அனுப்பினோம். “நிச்சயமாக நான் உங்களுடன் இருக்கிறேன். நீங்கள் தொழுகையை நிலைநிறுத்தினால்; இன்னும் நீங்கள் ஸகாத்தை கொடுத்தால்; இன்னும், நீங்கள் என் தூதர்களை நம்பிக்கை கொண்டால்; இன்னும், அவர்களுக்கு நீங்கள் உதவிபுரிந்தால்; இன்னும், நீங்கள் அல்லாஹ்விற்கு அழகிய கடன் கொடுத்தால் நிச்சயமாக உங்கள் பாவங்களை உங்களை விட்டு அகற்றிவிடுவேன். இன்னும், நதிகள் ஓடும் சொர்க்கங்களில் நிச்சயமாக உங்களை பிரவேசிக்க வைப்பேன்’’ என்று அல்லாஹ் கூறினான். ஆகவே, உங்களில் எவர் இதற்குப் பின்னர், நிராகரிப்பாரோ திட்டமாக (அவர்) நேரான வழியில் இருந்து வழி தவறிவிட்டார். info
التفاسير:

external-link copy
13 : 5

فَبِمَا نَقْضِهِمْ مِّیْثَاقَهُمْ لَعَنّٰهُمْ وَجَعَلْنَا قُلُوْبَهُمْ قٰسِیَةً ۚ— یُحَرِّفُوْنَ الْكَلِمَ عَنْ مَّوَاضِعِهٖ ۙ— وَنَسُوْا حَظًّا مِّمَّا ذُكِّرُوْا بِهٖ ۚ— وَلَا تَزَالُ تَطَّلِعُ عَلٰی خَآىِٕنَةٍ مِّنْهُمْ اِلَّا قَلِیْلًا مِّنْهُمْ فَاعْفُ عَنْهُمْ وَاصْفَحْ ؕ— اِنَّ اللّٰهَ یُحِبُّ الْمُحْسِنِیْنَ ۟

ஆக, அவர்கள் தங்கள் உறுதிமொழியை முறித்த காரணத்தால் அவர்களைச் சபித்தோம்; இன்னும், அவர்களுடைய உள்ளங்களை இறுகியதாக (கடினமானதாக) ஆக்கினோம். அவர்கள் (இறை) வசனங்களை அதன் (உண்மையான) இடங்களிலிருந்து(ம் கருத்துகளிலிருந்தும்) புரட்டுகிறார்கள். இன்னும், அவர்களுக்கு உபதேசிக்கப்பட்டதில் ஒரு பகுதியை மறந்தார்கள். இன்னும், அவர்களில் சிலரைத் தவிர அவர்களிடம் மோசடியை (நீர்) தொடர்ந்து பார்ப்பவராக இருப்பீர். ஆக, அவர்களை மன்னிப்பீராக; இன்னும், புறக்கணிப்பீராக. நிச்சயமாக அல்லாஹ் நற்பண்பாளர்கள் மீது அன்பு வைக்கிறான். info
التفاسير: