വിശുദ്ധ ഖുർആൻ പരിഭാഷ - തമിഴ് പരിഭാഷ - ഉമർ ശരീഫ്

external-link copy
12 : 5

وَلَقَدْ اَخَذَ اللّٰهُ مِیْثَاقَ بَنِیْۤ اِسْرَآءِیْلَ ۚ— وَبَعَثْنَا مِنْهُمُ اثْنَیْ عَشَرَ نَقِیْبًا ؕ— وَقَالَ اللّٰهُ اِنِّیْ مَعَكُمْ ؕ— لَىِٕنْ اَقَمْتُمُ الصَّلٰوةَ وَاٰتَیْتُمُ الزَّكٰوةَ وَاٰمَنْتُمْ بِرُسُلِیْ وَعَزَّرْتُمُوْهُمْ وَاَقْرَضْتُمُ اللّٰهَ قَرْضًا حَسَنًا لَّاُكَفِّرَنَّ عَنْكُمْ سَیِّاٰتِكُمْ وَلَاُدْخِلَنَّكُمْ جَنّٰتٍ تَجْرِیْ مِنْ تَحْتِهَا الْاَنْهٰرُ ۚ— فَمَنْ كَفَرَ بَعْدَ ذٰلِكَ مِنْكُمْ فَقَدْ ضَلَّ سَوَآءَ السَّبِیْلِ ۟

திட்டமாக அல்லாஹ் இஸ்ரவேலர்களின் உறுதிமொழியை வாங்கினான். இன்னும் அவர்களிலிருந்து பன்னிரண்டு தலைவர்களை நாம் அனுப்பினோம். “நிச்சயமாக நான் உங்களுடன் இருக்கிறேன். நீங்கள் தொழுகையை நிலைநிறுத்தினால்; இன்னும் நீங்கள் ஸகாத்தை கொடுத்தால்; இன்னும், நீங்கள் என் தூதர்களை நம்பிக்கை கொண்டால்; இன்னும், அவர்களுக்கு நீங்கள் உதவிபுரிந்தால்; இன்னும், நீங்கள் அல்லாஹ்விற்கு அழகிய கடன் கொடுத்தால் நிச்சயமாக உங்கள் பாவங்களை உங்களை விட்டு அகற்றிவிடுவேன். இன்னும், நதிகள் ஓடும் சொர்க்கங்களில் நிச்சயமாக உங்களை பிரவேசிக்க வைப்பேன்’’ என்று அல்லாஹ் கூறினான். ஆகவே, உங்களில் எவர் இதற்குப் பின்னர், நிராகரிப்பாரோ திட்டமாக (அவர்) நேரான வழியில் இருந்து வழி தவறிவிட்டார். info
التفاسير: