Kilniojo Korano reikšmių vertimas - Vertimas į tamilų k. - Abdul-Hamid Albakui

Puslapio numeris:close

external-link copy
40 : 26

لَعَلَّنَا نَتَّبِعُ السَّحَرَةَ اِنْ كَانُوْا هُمُ الْغٰلِبِیْنَ ۟

40. (இவ்வாறு அங்கு கூடும்) சூனியக்காரர்கள் வெற்றி கொண்டால் (அவர்களுடைய மார்க்கத்தையே) நாம் பின்பற்றவும் கூடும் (என்றும் பறை சாற்றப்பட்டது). info
التفاسير:

external-link copy
41 : 26

فَلَمَّا جَآءَ السَّحَرَةُ قَالُوْا لِفِرْعَوْنَ اَىِٕنَّ لَنَا لَاَجْرًا اِنْ كُنَّا نَحْنُ الْغٰلِبِیْنَ ۟

41. சூனியக்காரர்கள் அனைவரும் வந்தபொழுது அவர்கள் ஃபிர்அவ்னை நோக்கி ‘‘மெய்யாகவே நாங்கள் வெற்றிபெற்றால் அதற்குரிய கூலி எங்களுக்கு உண்டா?'' என்று கேட்டார்கள். info
التفاسير:

external-link copy
42 : 26

قَالَ نَعَمْ وَاِنَّكُمْ اِذًا لَّمِنَ الْمُقَرَّبِیْنَ ۟

42. அதற்கவன் ‘‘ ஆம் (கூலி உண்டு.... கூலி மட்டுமா?) அந்நேரத்தில் நீங்கள் (நம் சபையிலும் வீற்றிருக்கக்கூடிய) நமக்கு நெருங்கிய பிரமுகர்களாகவும் ஆகிவிடுவீர்கள்'' என்று கூறினான். info
التفاسير:

external-link copy
43 : 26

قَالَ لَهُمْ مُّوْسٰۤی اَلْقُوْا مَاۤ اَنْتُمْ مُّلْقُوْنَ ۟

43. அவர்களை நோக்கி மூஸா ‘‘ நீங்கள் (சூனியம் செய்ய) எறியக்கூடியதை எறியுங்கள்'' எனக் கூறினார். info
التفاسير:

external-link copy
44 : 26

فَاَلْقَوْا حِبَالَهُمْ وَعِصِیَّهُمْ وَقَالُوْا بِعِزَّةِ فِرْعَوْنَ اِنَّا لَنَحْنُ الْغٰلِبُوْنَ ۟

44. ஆகவே, அவர்கள் தங்கள் தடிகளையும், கயிறுகளையும் எறிந்து ‘‘ஃபிர்அவ்னுடைய கௌரவத்தின் மீது சத்தியம் நிச்சயமாக நாங்கள்தான் வென்றுவிட்டோம்'' என்று கூறினார்கள். info
التفاسير:

external-link copy
45 : 26

فَاَلْقٰی مُوْسٰی عَصَاهُ فَاِذَا هِیَ تَلْقَفُ مَا یَاْفِكُوْنَ ۟ۚۖ

45. பிறகு மூஸாவும் தன் தடியை எறிந்தார். அது (பெரியதொரு பாம்பாகி,) அவர்கள் கற்பனை செய்திருந்த சூனியங்கள் அனைத்தையும் விழுங்க ஆரம்பித்து விட்டது. info
التفاسير:

external-link copy
46 : 26

فَاُلْقِیَ السَّحَرَةُ سٰجِدِیْنَ ۟ۙ

46. இதைக் கண்ணுற்ற சூனியக்காரர்கள் அனைவரும் விழுந்து சிரம் பணிந்து, info
التفاسير:

external-link copy
47 : 26

قَالُوْۤا اٰمَنَّا بِرَبِّ الْعٰلَمِیْنَ ۟ۙ

47. ‘‘ உலகத்தார் அனைவரின் இறைவனையே நாங்கள் நம்பிக்கை கொண்டோம். info
التفاسير:

external-link copy
48 : 26

رَبِّ مُوْسٰی وَهٰرُوْنَ ۟

48. அவன்(தான்,) மூஸா, ஹாரூனுடைய இறைவனுமாவான்'' என்று கூறினார்கள். info
التفاسير:

external-link copy
49 : 26

قَالَ اٰمَنْتُمْ لَهٗ قَبْلَ اَنْ اٰذَنَ لَكُمْ ۚ— اِنَّهٗ لَكَبِیْرُكُمُ الَّذِیْ عَلَّمَكُمُ السِّحْرَ ۚ— فَلَسَوْفَ تَعْلَمُوْنَ ؕ۬— لَاُقَطِّعَنَّ اَیْدِیَكُمْ وَاَرْجُلَكُمْ مِّنْ خِلَافٍ وَّلَاُوصَلِّبَنَّكُمْ اَجْمَعِیْنَ ۟ۚ

49. அதற்கு (ஃபிர்அவ்ன்), ‘‘ நான் உங்களுக்கு அனுமதி அளிப்பதற்கு முன்னதாகவே நீங்கள் அவரை நம்பிக்கை கொண்டு விட்டீர்கள். நிச்சயமாக உங்களுக்கு சூனியம் கற்றுக்கொடுத்த உங்கள் குரு அவர்தான். (இதன் பலனை) அதிசீக்கிரத்தில் நீங்கள் அறிந்து கொள்வீர்கள். உங்களை மாறு கை, மாறு கால் வெட்டி உங்கள் அனைவரையும் சிலுவையில் அறைந்து விடுவேன்'' என்று கூறினான். info
التفاسير:

external-link copy
50 : 26

قَالُوْا لَا ضَیْرَ ؗ— اِنَّاۤ اِلٰی رَبِّنَا مُنْقَلِبُوْنَ ۟ۚ

50. அதற்கவர்கள் கூறினார்கள்: ‘‘ (அதனால் எங்களுக்கு) ஒரு பாதகமுமில்லை. (ஏனென்றால்) நிச்சயமாக நாங்கள் எங்கள் இறைவன் பக்கமே திரும்பச் சென்று விடுவோம். info
التفاسير:

external-link copy
51 : 26

اِنَّا نَطْمَعُ اَنْ یَّغْفِرَ لَنَا رَبُّنَا خَطٰیٰنَاۤ اَنْ كُنَّاۤ اَوَّلَ الْمُؤْمِنِیْنَ ۟ؕ۠

51. நிச்சயமாக (மூஸாவை) நம்பிக்கை கொண்டவர்களில் நாங்கள் முதன்மையானவர்களாக இருக்கும் காரணத்தினால், எங்கள் இறைவன் எங்கள் குற்றங்களை மன்னித்துவிடுவான் என்று நிச்சயமாக நாங்கள் நம்புகிறோம்.'' info
التفاسير:

external-link copy
52 : 26

وَاَوْحَیْنَاۤ اِلٰی مُوْسٰۤی اَنْ اَسْرِ بِعِبَادِیْۤ اِنَّكُمْ مُّتَّبَعُوْنَ ۟

52. பின்னர், மூஸாவுக்கு நாம் வஹ்யி அறிவித்ததாவது: ‘‘ (இஸ்ராயீலின் சந்ததிகளாகிய) என் அடியார்களை அழைத்துக்கொண்டு நீங்கள் இரவோடு இரவாக சென்றுவிடுங்கள். எனினும், நிச்சயமாக நீங்கள் (அவர்களால்) பின்தொடரப்படுவீர்கள்'' (என்றோம்). info
التفاسير:

external-link copy
53 : 26

فَاَرْسَلَ فِرْعَوْنُ فِی الْمَدَآىِٕنِ حٰشِرِیْنَ ۟ۚ

53. (அவ்வாறு அவர்கள் சென்று விடவே அதை அறிந்த) ஃபிர்அவ்ன், பல ஊர்களுக்கும் (மக்களை அழைக்க) பறைசாற்றுபவர்களை அனுப்பிவைத்து, info
التفاسير:

external-link copy
54 : 26

اِنَّ هٰۤؤُلَآءِ لَشِرْذِمَةٌ قَلِیْلُوْنَ ۟ۙ

54. ‘‘ நிச்சயமாக (இஸ்ராயீலின் சந்ததிகளாகிய) இவர்கள் வெகு சொற்ப தொகையினரே. (அவ்வாறிருந்தும்) info
التفاسير:

external-link copy
55 : 26

وَاِنَّهُمْ لَنَا لَغَآىِٕظُوْنَ ۟ۙ

55. நிச்சயமாக அவர்கள் நம்மை கோபத்திற்குள்ளாக்கி விட்டனர். info
التفاسير:

external-link copy
56 : 26

وَاِنَّا لَجَمِیْعٌ حٰذِرُوْنَ ۟ؕ

56. நிச்சயமாக நாங்கள் பெருந்தொகையினர்; (அத்துடன்) மிக்க எச்சரிக்கை உடையவர்கள்'' (என்று கூறி, பல ஊரார்களையும் ஒன்று திரட்டிக்கொண்டு அவர்களைப் பின்தொடர்ந்து சென்றான்.) info
التفاسير:

external-link copy
57 : 26

فَاَخْرَجْنٰهُمْ مِّنْ جَنّٰتٍ وَّعُیُوْنٍ ۟ۙ

57. (இவ்வாறு) அவர்களுடைய தோட்டங்களிலிருந்தும் துரவுகளிலிருந்தும் நாம் அவர்களை வெளியேற்றி விட்டோம். info
التفاسير:

external-link copy
58 : 26

وَّكُنُوْزٍ وَّمَقَامٍ كَرِیْمٍ ۟ۙ

58. (இன்னும், அவர்களுடைய) பொக்கிஷங்களிலிருந்தும் மிக்க நேர்த்தியான வீடுகளிலிருந்தும் (அவர்களை வெளியேற்றினோம்). info
التفاسير:

external-link copy
59 : 26

كَذٰلِكَ ؕ— وَاَوْرَثْنٰهَا بَنِیْۤ اِسْرَآءِیْلَ ۟ؕ

59. இவ்வாறு (அவர்களை வெளியேற்றிய பின்னர்) இஸ்ராயீலின் சந்ததிகளை அவற்றுக்குச் சொந்தக்காரர்களாகவும் ஆக்கிவிட்டோம். info
التفاسير:

external-link copy
60 : 26

فَاَتْبَعُوْهُمْ مُّشْرِقِیْنَ ۟

60. சூரிய உதய (நேர)த்தில் இவர்கள் அவர்களைப் பின் தொடர்ந்தனர். info
التفاسير: