Kilniojo Korano reikšmių vertimas - Vertimas į tamilų k. - Abdul-Hamid Albakui

Puslapio numeris:close

external-link copy
94 : 2

قُلْ اِنْ كَانَتْ لَكُمُ الدَّارُ الْاٰخِرَةُ عِنْدَ اللّٰهِ خَالِصَةً مِّنْ دُوْنِ النَّاسِ فَتَمَنَّوُا الْمَوْتَ اِنْ كُنْتُمْ صٰدِقِیْنَ ۟

94. ‘‘(யூதர்களே!) அல்லாஹ்விடமிருக்கும் மறுமை(யின் சொர்க்க) வீடு (மற்ற) மனிதர்களுக்கு இல்லாமல் உங்களுக்கே சொந்தமென (கூறுகின்ற) நீங்கள் உண்மை கூறுபவர்களாக இருந்தால் (உங்களுக்குச் சொந்தமான அவ்வீட்டிற்குச் செல்வதற்கு) நீங்கள் மரணத்தை விரும்புங்கள்'' என (நபியே!) கூறுவீராக. info
التفاسير:

external-link copy
95 : 2

وَلَنْ یَّتَمَنَّوْهُ اَبَدًا بِمَا قَدَّمَتْ اَیْدِیْهِمْ ؕ— وَاللّٰهُ عَلِیْمٌۢ بِالظّٰلِمِیْنَ ۟

95. (ஆனால்,) அவர்கள் கரங்கள் (செய்து) அனுப்பியிருக்கும் (பாவங்களின்) காரணத்தால் அதை அவர்கள் அறவே விரும்பவே மாட்டார்கள். (இந்த) அநியாயக்காரர்களை அல்லாஹ் நன்கறிவான். info
التفاسير:

external-link copy
96 : 2

وَلَتَجِدَنَّهُمْ اَحْرَصَ النَّاسِ عَلٰی حَیٰوةٍ ۛۚ— وَمِنَ الَّذِیْنَ اَشْرَكُوْا ۛۚ— یَوَدُّ اَحَدُهُمْ لَوْ یُعَمَّرُ اَلْفَ سَنَةٍ ۚ— وَمَا هُوَ بِمُزَحْزِحِهٖ مِنَ الْعَذَابِ اَنْ یُّعَمَّرَ ؕ— وَاللّٰهُ بَصِیْرٌ بِمَا یَعْمَلُوْنَ ۟۠

96. மேலும், (நபியே! அந்த யூதர்கள்) மற்ற மனிதர்களை விடவும் (குறிப்பாக) இணைவைப்பவர்களை விடவும் (நீண்ட நாள்) உயிர்வாழ மிகவும் பேராசை உடையவர்களாக இருப்பதை நிச்சயம் காண்பீர்! அவர்களில் ஒவ்வொருவனும் ‘‘தான் ஆயிரம் ஆண்டுகள் உயிர் வாழ வேண்டுமே?'' என்று விரும்புவான். (அவ்வாறு நீண்ட நாள்) உயிருடன் இருக்க அவனை விட்டுவைத்தாலும் அது வேதனையிலிருந்து ஒரு சிறிதும் அவனைத் தப்பிக்க வைத்துவிடாது. அல்லாஹ் அவர்கள் செய்வதை உற்று நோக்குபவன் ஆவான். info
التفاسير:

external-link copy
97 : 2

قُلْ مَنْ كَانَ عَدُوًّا لِّجِبْرِیْلَ فَاِنَّهٗ نَزَّلَهٗ عَلٰی قَلْبِكَ بِاِذْنِ اللّٰهِ مُصَدِّقًا لِّمَا بَیْنَ یَدَیْهِ وَهُدًی وَّبُشْرٰی لِلْمُؤْمِنِیْنَ ۟

97. ‘‘(உங்களில்) எவர் ஜிப்ரீலுக்கு எதிரி'' என (நபியே! யூதர்களை)க் கேட்பீராக. நிச்சயமாக அவர் இதை அல்லாஹ்வின் கட்டளைப்படியே உமது உள்ளத்தில் இறக்கி வைத்தார். இது தனக்கு முன்னுள்ள (வேதத்)தை உண்மைப்படுத்துவதாகவும், நேரான வழியை அறிவிக்கக்கூடியதாகவும், நம்பிக்கை உடையவர்களுக்கு நற்செய்தியாகவும் இருக்கிறது. info
التفاسير:

external-link copy
98 : 2

مَنْ كَانَ عَدُوًّا لِّلّٰهِ وَمَلٰٓىِٕكَتِهٖ وَرُسُلِهٖ وَجِبْرِیْلَ وَمِیْكٰىلَ فَاِنَّ اللّٰهَ عَدُوٌّ لِّلْكٰفِرِیْنَ ۟

98. (உங்களில்) எவரேனும் அல்லாஹ்வுக்கும், அவனுடைய வானவர்களுக்கும், அவனுடைய தூதர்களுக்கும், ஜிப்ரீலுக்கும், மீக்காயீலுக்கும் எதிரியாகி (அவர்களை நிராகரித்து) விட்டால் (அந்)நிராகரிப்பவர்களுக்கு நிச்சயமாக அல்லாஹ்வும் எதிரி ஆவான். info
التفاسير:

external-link copy
99 : 2

وَلَقَدْ اَنْزَلْنَاۤ اِلَیْكَ اٰیٰتٍۢ بَیِّنٰتٍ ۚ— وَمَا یَكْفُرُ بِهَاۤ اِلَّا الْفٰسِقُوْنَ ۟

99. (நபியே!) நிச்சயமாக மிகத் தெளிவான வசனங்களையே உமக்கு இறக்கி இருக்கிறோம். பாவிகளைத் தவிர (மற்றெவரும்) அவற்றை நிராகரிக்க மாட்டார்கள். info
التفاسير:

external-link copy
100 : 2

اَوَكُلَّمَا عٰهَدُوْا عَهْدًا نَّبَذَهٗ فَرِیْقٌ مِّنْهُمْ ؕ— بَلْ اَكْثَرُهُمْ لَا یُؤْمِنُوْنَ ۟

100. அவர்கள் (தங்கள் நபியிடம்) ஓர் உடன்படிக்கையைச் செய்தபோதெல்லாம் அவர்களில் ஒரு பிரிவினர் அதை (நிறைவேற்றாது) எடுத்தெறிந்து விடவில்லையா? மாறாக, அவர்களில் பெரும்பாலோர் (இதை) நம்பிக்கை கொள்ளமாட்டார்கள். info
التفاسير:

external-link copy
101 : 2

وَلَمَّا جَآءَهُمْ رَسُوْلٌ مِّنْ عِنْدِ اللّٰهِ مُصَدِّقٌ لِّمَا مَعَهُمْ نَبَذَ فَرِیْقٌ مِّنَ الَّذِیْنَ اُوْتُوا الْكِتٰبَ ۙۗ— كِتٰبَ اللّٰهِ وَرَآءَ ظُهُوْرِهِمْ كَاَنَّهُمْ لَا یَعْلَمُوْنَ ۟ؗ

101. அல்லாஹ்விடமிருந்து தூதர் ஒருவர் அவர்களிடம் வந்து அவர்களிடமுள்ள (வேதத்)தை உண்மைப்படுத்தியபோதிலும், (முந்திய) வேதம் வழங்கப்பட்ட (அ)வர்களில் பலர் அல்லாஹ்வுடைய (இந்த) வேதத்தையே தாங்கள் அறியாதது போல் தங்கள் முதுகுக்குப் பினோல் தூக்கிப்போட்டு விடுகின்றனர். info
التفاسير: