وه‌رگێڕانی ماناكانی قورئانی پیرۆز - وەرگێڕاوی تامیلی - عمر شریف

ژمارەی پەڕە:close

external-link copy
79 : 10

وَقَالَ فِرْعَوْنُ ائْتُوْنِیْ بِكُلِّ سٰحِرٍ عَلِیْمٍ ۟

இன்னும், ஃபிர்அவ்ன் கூறினான்: “(சூனியத்தை) கற்றறிந்த (திறமையான) எல்லா சூனியக்காரர்களையும் என்னிடம் அழைத்து வாருங்கள்!” info
التفاسير:

external-link copy
80 : 10

فَلَمَّا جَآءَ السَّحَرَةُ قَالَ لَهُمْ مُّوْسٰۤی اَلْقُوْا مَاۤ اَنْتُمْ مُّلْقُوْنَ ۟

ஆக, சூனியக்காரர்கள் வந்தபோது, அவர்களை நோக்கி மூஸா கூறினார்: “நீங்கள் (சூனியம் செய்வதற்காக) எதை எறியக்கூடியவர்களாக இருக்கிறீர்களோ அதை (மைதானத்தில்) எறியுங்கள்!” info
التفاسير:

external-link copy
81 : 10

فَلَمَّاۤ اَلْقَوْا قَالَ مُوْسٰی مَا جِئْتُمْ بِهِ ۙ— السِّحْرُ ؕ— اِنَّ اللّٰهَ سَیُبْطِلُهٗ ؕ— اِنَّ اللّٰهَ لَا یُصْلِحُ عَمَلَ الْمُفْسِدِیْنَ ۟

ஆக, அவர்கள் எறிந்தபோது, (அவர்களை நோக்கி) மூஸா கூறினார்: “நீங்கள் செய்தவை (அனைத்தும் வெறும்) சூனியம்தான். நிச்சயமாக அல்லாஹ் அவற்றை விரைவில் அழிப்பான். நிச்சயமாக அல்லாஹ் விஷமிகளின் செயலை சீர் செய்ய மாட்டான்.” info
التفاسير:

external-link copy
82 : 10

وَیُحِقُّ اللّٰهُ الْحَقَّ بِكَلِمٰتِهٖ وَلَوْ كَرِهَ الْمُجْرِمُوْنَ ۟۠

இன்னும், “அல்லாஹ் தன் கட்டளைகளைக் கொண்டு உண்மையை நிரூபிப்பான், (அதை) குற்றவாளிகள் வெறுத்தாலும் சரியே!” info
التفاسير:

external-link copy
83 : 10

فَمَاۤ اٰمَنَ لِمُوْسٰۤی اِلَّا ذُرِّیَّةٌ مِّنْ قَوْمِهٖ عَلٰی خَوْفٍ مِّنْ فِرْعَوْنَ وَمَلَاۡىِٕهِمْ اَنْ یَّفْتِنَهُمْ ؕ— وَاِنَّ فِرْعَوْنَ لَعَالٍ فِی الْاَرْضِ ۚ— وَاِنَّهٗ لَمِنَ الْمُسْرِفِیْنَ ۟

ஆக, ஃபிர்அவ்னும், அவனுடைய முக்கிய பிரமுகர்களும் தங்களை துன்புறுத்துவார்கள் என்பதை பயந்து மூஸாவை அவரின் சமுதாயத்திலிருந்து ஒரு (சில) சந்ததியினரைத் தவிர (அதிமானவர்கள்) நம்பிக்கை கொள்ளவில்லை. நிச்சயமாக ஃபிர்அவ்ன் பூமியில் சர்வாதிகாரியாக (கொடுங்கோலனாக) இருந்தான். இன்னும், நிச்சயமாக அவன் (நிராகரிப்பிலும் விஷமத்திலும்) எல்லை மீறி செல்பவர்களில் இருந்தான். info
التفاسير:

external-link copy
84 : 10

وَقَالَ مُوْسٰی یٰقَوْمِ اِنْ كُنْتُمْ اٰمَنْتُمْ بِاللّٰهِ فَعَلَیْهِ تَوَكَّلُوْۤا اِنْ كُنْتُمْ مُّسْلِمِیْنَ ۟

இன்னும், மூஸா கூறினார்: “என் சமுதாயமே! நீங்கள் அல்லாஹ்வை நம்பிக்கை கொண்டவர்களாக இருந்தால், நீங்கள் (அல்லாஹ்வின் கட்டளைக்கு முற்றிலும் பணிந்து கட்டுப்படக்கூடிய) முஸ்லிம்களாக இருந்தால், அவன் மீதே நம்பிக்கை வைத்து (அவனை மட்டுமே சார்ந்து) விடுங்கள்!” info
التفاسير:

external-link copy
85 : 10

فَقَالُوْا عَلَی اللّٰهِ تَوَكَّلْنَا ۚ— رَبَّنَا لَا تَجْعَلْنَا فِتْنَةً لِّلْقَوْمِ الظّٰلِمِیْنَ ۟ۙ

அதற்கு அவர்கள் (பிரார்த்தித்து) கூறினார்கள்: “அல்லாஹ்வின் மீதே நாங்கள் நம்பிக்கை வைத்து (அவனை மட்டுமே சார்ந்து) விட்டோம். எங்கள் இறைவா! அநியாயம் செய்கின்ற சமுதாயத்திற்கு சோதனையாக எங்களை ஆக்கி விடாதே! (எங்கள் மீது அவர்களை சாட்டி விடாதே!)” info
التفاسير:

external-link copy
86 : 10

وَنَجِّنَا بِرَحْمَتِكَ مِنَ الْقَوْمِ الْكٰفِرِیْنَ ۟

இன்னும், “நிராகரிக்கின்ற சமுதாயத்திடமிருந்து உன் கருணையினால் எங்களை பாதுகாத்துக்கொள்!” info
التفاسير:

external-link copy
87 : 10

وَاَوْحَیْنَاۤ اِلٰی مُوْسٰی وَاَخِیْهِ اَنْ تَبَوَّاٰ لِقَوْمِكُمَا بِمِصْرَ بُیُوْتًا وَّاجْعَلُوْا بُیُوْتَكُمْ قِبْلَةً وَّاَقِیْمُوا الصَّلٰوةَ ؕ— وَبَشِّرِ الْمُؤْمِنِیْنَ ۟

இன்னும், மூஸாவுக்கும் அவருடைய சகோதரருக்கும் நாம் வஹ்யி அறிவித்தோம்: “நீங்கள் இருவரும் உங்கள் சமுதாயத்திற்காக எகிப்தில் (பல) வீடுகளை அமையுங்கள்! இன்னும், (அந்த) உங்கள் வீடுகளை தொழுமிடங்களாக ஆக்குங்கள்! இன்னும், தொழுகையை நிலை நிறுத்துங்கள்! இன்னும், நம்பிக்கையாளர்களுக்கு (அல்லாஹ்வின் உதவியும் சொர்க்கமும் உண்டு என்று) நற்செய்தி கூறுவீராக!” info
التفاسير:

external-link copy
88 : 10

وَقَالَ مُوْسٰی رَبَّنَاۤ اِنَّكَ اٰتَیْتَ فِرْعَوْنَ وَمَلَاَهٗ زِیْنَةً وَّاَمْوَالًا فِی الْحَیٰوةِ الدُّنْیَا ۙ— رَبَّنَا لِیُضِلُّوْا عَنْ سَبِیْلِكَ ۚ— رَبَّنَا اطْمِسْ عَلٰۤی اَمْوَالِهِمْ وَاشْدُدْ عَلٰی قُلُوْبِهِمْ فَلَا یُؤْمِنُوْا حَتّٰی یَرَوُا الْعَذَابَ الْاَلِیْمَ ۟

இன்னும், மூஸா கூறினார்: “எங்கள் இறைவா! நிச்சயமாக நீ ஃபிர்அவ்னுக்கும், அவனுடைய பிரமுகர்களுக்கும் இவ்வுலக வாழ்க்கையில் (ஆடம்பர) அலங்காரத்தையும் செல்வங்களையும் கொடுத்தாய். எங்கள் இறைவா! அவர்கள் உன் பாதையில் இருந்து (மக்களை) வழிகெடுப்பதற்காக (அவற்றை பயன்படுத்துகிறார்கள்). எங்கள் இறைவா! அவர்களின் பொருள்களை நாசமாக்கு! இன்னும், அவர்களுடைய உள்ளங்களை கடினமாக்கி (அவற்றின் மீது முத்திரையிட்டு) விடு! ஆக, அவர்கள் துன்புறுத்தக்கூடிய தண்டனையை (கண்ணால்) காணும் வரை, நம்பிக்கை கொள்ள மாட்டார்கள்.” info
التفاسير: