وه‌رگێڕانی ماناكانی قورئانی پیرۆز - وەرگێڕاوی تامیلی بۆ پوختەی تەفسیری قورئانی پیرۆز

external-link copy
66 : 4

وَلَوْ اَنَّا كَتَبْنَا عَلَیْهِمْ اَنِ اقْتُلُوْۤا اَنْفُسَكُمْ اَوِ اخْرُجُوْا مِنْ دِیَارِكُمْ مَّا فَعَلُوْهُ اِلَّا قَلِیْلٌ مِّنْهُمْ ؕ— وَلَوْ اَنَّهُمْ فَعَلُوْا مَا یُوْعَظُوْنَ بِهٖ لَكَانَ خَیْرًا لَّهُمْ وَاَشَدَّ تَثْبِیْتًا ۟ۙ

4.66,67,68. “நீங்கள் ஒருவரையொருவர் கொன்றுவிடுங்கள் அல்லது உங்களின் வீடுகளிலிருந்து வெளியேறிவிடுங்கள்” என்று நாம் அவர்கள்மீது விதித்திருந்தால் சிலரைத் தவிர மற்றவர்கள் அதனைச் செயல்படுத்தியிருக்க மாட்டார்கள். அவர்களுக்குச் சிரமமானதை அவன் அவர்கள்மீது விதிக்கவில்லை என்பதற்காக அவர்கள் அவனைப் புகழட்டும். அல்லாஹ்வுக்குக் கட்டுப்படுமாறு அவர்களுக்குக் கூறப்பட்டதை செயல்படுத்தி இருந்தால் அது மாறுசெய்வதை விட சிறந்ததாகவும் அவர்களது நம்பிக்கையை இன்னும் உறுதிப்படுத்துவதாகவும் இருந்திருக்கும்; நாம் அவர்களுக்கு பெரும் நன்மைகளை வழங்கியிருப்போம்; அல்லாஹ்வின் பக்கமும் அவனது சுவனத்தின் பக்கமும் செல்லக்கூடிய நேரான வழியையும் காட்டியிருப்போம். info
التفاسير:
سوودەکانی ئایەتەکان لەم پەڕەیەدا:
• فعل الطاعات من أهم أسباب الثبات على الدين.
1. நன்மையான காரியங்களில் ஈடுபடுவது மார்க்கத்தில் உறுதியாக நிலைத்து நிற்பதற்கான பிரதான காரணிகளில் ஒன்றாகும். info

• أخذ الحيطة والحذر باتخاذ جميع الأسباب المعينة على قتال العدو، لا بالقعود والتخاذل.
2. முஸ்லிம் சமூகம் எதிரிகளை எதிர்ப்பதற்குத் தேவையான எல்லா முன்னேற்பாடுகளையும் செய்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும். பின்தங்கிவிடுதன் மூலமோ பலவீனப்படுவதன் மூலமோ அல்ல. info

• الحذر من التباطؤ عن الجهاد وتثبيط الناس عنه؛ لأن الجهاد أعظم أسباب عزة المسلمين ومنع تسلط العدو عليهم.
3. போருக்குச் செல்லாமல் பின்தங்குவது மற்றும் மக்களை போருக்குச் செல்லவிடாமல் தடுப்பது ஆகியவற்றை விட்டும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். ஏனெனில் போர் புரிவதுதான் முஸ்லிம்களின் கண்ணியத்திற்கும் அவர்கள் மீது எதிரிகளின் ஆதிக்கத்தைத் தடுப்பதற்கும் வழிவகுக்கக்கூடிய மிக முக்கியமான காரணியாகும். info