وه‌رگێڕانی ماناكانی قورئانی پیرۆز - وەرگێڕاوی تامیلی بۆ پوختەی تەفسیری قورئانی پیرۆز

external-link copy
181 : 2

فَمَنْ بَدَّلَهٗ بَعْدَ مَا سَمِعَهٗ فَاِنَّمَاۤ اِثْمُهٗ عَلَی الَّذِیْنَ یُبَدِّلُوْنَهٗ ؕ— اِنَّ اللّٰهَ سَمِیْعٌ عَلِیْمٌ ۟ؕ

2.181. இந்த உயிலை தெளிவாக அறிந்தபின்னர் கூட்டிக் குறைப்பதன் மூலமோ தடுப்பதன் மூலமோ யாராவது மாற்றிவிட்டால் அந்த பாவம் மாற்றியவரையே சாரும். உயில் உரிமையாளர் மீது எந்தக் குற்றமும் இல்லை. அல்லாஹ், அடியார்கள் பேசுவதை செவியேற்பவனாகவும் அவர்களின் செயல்களை நன்கறிந்தவனாகவும் இருக்கின்றான். அவர்களது எந்தவோரு விடயமும் அவனை விட்டும் தப்பமுடியாது. info
التفاسير:
سوودەکانی ئایەتەکان لەم پەڕەیەدا:
• البِرُّ الذي يحبه الله يكون بتحقيق الإيمان والعمل الصالح، وأما التمسك بالمظاهر فقط فلا يكفي عنده تعالى.
1. அல்லாஹ் விரும்பும் நன்மை என்பது ஈமானையும் நற்செயலையும் உறுதிப்படுத்துவதைக் கொண்டே இருக்கும். அதை விட்டுவிட்டு வெளிப்படையான விஷயங்களை மாத்திரம் பற்றிக்கொள்வது அல்லாஹ்விடத்தில் பயனளிக்காது. info

• من أعظم ما يحفظ الأنفس، ويمنع من التعدي والظلم؛ تطبيق مبدأ القصاص الذي شرعه الله في النفس وما دونها.
2. உயிர் மற்றும் உடலுறுப்புக்களில் அல்லாஹ் விதித்த பழிவாங்கும் சட்டத்தைச் செயல்படுத்துவதால் உயிர்கள் பாதுகாக்கப்படுகிறது, அநியாயமும் வரம்பு மீறலும் தடுக்கப்படுகிறது. info

• عِظَمُ شأن الوصية، ولا سيما لمن كان عنده شيء يُوصي به، وإثمُ من غيَّر في وصية الميت وبدَّل ما فيها.
3. உயில் எழுதுவதின் முக்கியத்துவம் தெளிவாகிறது. குறிப்பாக உயில் எழுத வேண்டியவற்றை தம்மிடம் வைத்திருப்பவர். இறந்தவர் எழுதிய உயிலை மாற்றுவதும் பாரிய குற்றமாகும். info