وه‌رگێڕانی ماناكانی قورئانی پیرۆز - وەرگێڕاوی تامیلی - عبدالحميد باقوی

ژمارەی پەڕە:close

external-link copy
12 : 35

وَمَا یَسْتَوِی الْبَحْرٰنِ ۖۗ— هٰذَا عَذْبٌ فُرَاتٌ سَآىِٕغٌ شَرَابُهٗ وَهٰذَا مِلْحٌ اُجَاجٌ ؕ— وَمِنْ كُلٍّ تَاْكُلُوْنَ لَحْمًا طَرِیًّا وَّتَسْتَخْرِجُوْنَ حِلْیَةً تَلْبَسُوْنَهَا ۚ— وَتَرَی الْفُلْكَ فِیْهِ مَوَاخِرَ لِتَبْتَغُوْا مِنْ فَضْلِهٖ وَلَعَلَّكُمْ تَشْكُرُوْنَ ۟

12. இரு கடல்களும் சமமாகி விடாது; ஒன்று குடிப்பதற்கு இன்பமான மதுரமான தண்ணீர்! மற்றொன்று கொடிய உப்பு(த் தண்ணீர். இவ்வாறு இவ்விரண்டிற்கும் வேற்றுமை இருந்தபோதிலும்), இவ்விரண்டில் இருந்துமே புத்தம் புதிய (மீன்) மாமிசத்தைப் புசிக்கிறீர்கள். நீங்கள் ஆபரணமாக அணியக்கூடிய (முத்து, பவளம் போன்ற)வற்றையும் அவற்றிலிருந்து வெளியே எடுக்கிறீர்கள். கடல்களைப் பிளந்து கொண்டு செல்லும் கப்பலில் (பயணம் செய்து பல தேசங்களிலுள்ள) இறைவனுடைய அருளை நீங்கள் தேடிக் கொள்கிறீர்கள். (இதற்கு) நீங்கள் நன்றி செலுத்துவீர்களாக! info
التفاسير:

external-link copy
13 : 35

یُوْلِجُ الَّیْلَ فِی النَّهَارِ وَیُوْلِجُ النَّهَارَ فِی الَّیْلِ ۙ— وَسَخَّرَ الشَّمْسَ وَالْقَمَرَ ۖؗ— كُلٌّ یَّجْرِیْ لِاَجَلٍ مُّسَمًّی ؕ— ذٰلِكُمُ اللّٰهُ رَبُّكُمْ لَهُ الْمُلْكُ ؕ— وَالَّذِیْنَ تَدْعُوْنَ مِنْ دُوْنِهٖ مَا یَمْلِكُوْنَ مِنْ قِطْمِیْرٍ ۟ؕ

13. அவனே இரவைப் பகலில் புகுத்துகிறான்; பகலை இரவில் புகுத்துகிறான். சந்திரனையும் சூரியனையும் அடக்கி வைத்து இருக்கிறான். இவை அனைத்தும் அவற்றுக்குக் குறிப்பிட்ட தவணைப்படி செல்கின்றன. இவன்தான் உங்கள் இறைவனாகிய அல்லாஹ். எல்லா ஆட்சிகளும் அவனுக்கு உரியனவே! அவனையன்றி எவற்றை நீங்கள் (இறைவனென உதவிக்கு) அழைக்கிறீர்களோ அவற்றுக்கு ஓர் அணு அளவும் அதிகாரமில்லை. info
التفاسير:

external-link copy
14 : 35

اِنْ تَدْعُوْهُمْ لَا یَسْمَعُوْا دُعَآءَكُمْ ۚ— وَلَوْ سَمِعُوْا مَا اسْتَجَابُوْا لَكُمْ ؕ— وَیَوْمَ الْقِیٰمَةِ یَكْفُرُوْنَ بِشِرْكِكُمْ ؕ— وَلَا یُنَبِّئُكَ مِثْلُ خَبِیْرٍ ۟۠

14. அவற்றை நீங்கள் அழைத்தபோதிலும் உங்கள் அழைப்பை அவை செவியுறாது. அவை செவியுற்றபோதிலும் உங்களுக்குப் பதிலளிக்காது. மறுமை நாளிலோ அவற்றை நீங்கள் இணைவைத்து வணங்கியதையும் அவை நிராகரித்துவிடும். (அவற்றின் செயலற்ற தன்மைகள்) அனைத்தையும் அறிந்த (இறை)வனைப் போல் (வேறு) ஒருவரும் (நபியே!) உமக்கு (இவ்வளவு தெளிவாக) அறிவிக்கமாட்டார். info
التفاسير:

external-link copy
15 : 35

یٰۤاَیُّهَا النَّاسُ اَنْتُمُ الْفُقَرَآءُ اِلَی اللّٰهِ ۚ— وَاللّٰهُ هُوَ الْغَنِیُّ الْحَمِیْدُ ۟

15. மனிதர்களே! நீங்கள் அனைவரும் (எந்நேரத்திலும்) அல்லாஹ்வுடைய உதவி தேவைப்பட்டவர்களாகவே இருக்கிறீர்கள். அல்லாஹ்வோ முற்றிலும் தேவையற்றவன், புகழுக்குரியவன் ஆவான். info
التفاسير:

external-link copy
16 : 35

اِنْ یَّشَاْ یُذْهِبْكُمْ وَیَاْتِ بِخَلْقٍ جَدِیْدٍ ۟ۚ

16. அவன் விரும்பினால் உங்களை அழித்து மற்றொரு புதிய படைப்பைக் கொண்டு வந்துவிடுவான். info
التفاسير:

external-link copy
17 : 35

وَمَا ذٰلِكَ عَلَی اللّٰهِ بِعَزِیْزٍ ۟

17. இது அல்லாஹ்வுக்கு ஒரு சிரமமானது அல்ல. info
التفاسير:

external-link copy
18 : 35

وَلَا تَزِرُ وَازِرَةٌ وِّزْرَ اُخْرٰی ؕ— وَاِنْ تَدْعُ مُثْقَلَةٌ اِلٰی حِمْلِهَا لَا یُحْمَلْ مِنْهُ شَیْءٌ وَّلَوْ كَانَ ذَا قُرْبٰی ؕ— اِنَّمَا تُنْذِرُ الَّذِیْنَ یَخْشَوْنَ رَبَّهُمْ بِالْغَیْبِ وَاَقَامُوا الصَّلٰوةَ ؕ— وَمَنْ تَزَكّٰی فَاِنَّمَا یَتَزَكّٰی لِنَفْسِهٖ ؕ— وَاِلَی اللّٰهِ الْمَصِیْرُ ۟

18. (மறுமையில்) ஒருவனுடைய பாவச் சுமையை மற்றொருவன் சுமக்கவே மாட்டான். பளுவான சுமையில் ஒரு பாகத்தையேனும் சுமந்து கொள்ளும்படி அழைத்தபோதிலும், அவன் இவனுடைய சொந்தக்காரனாக இருந்த போதிலும், இவனுடைய சுமையில் ஓர் அற்ப அளவையும் அவன் சுமந்துகொள்ள மாட்டான். (நபியே!) நீர் அச்சமூட்டி எச்சரிப்பதெல்லாம், எவர்கள் (தங்கள் கண்ணால்) காணாமல் இருந்தும், தங்கள் இறைவனுக்குப் பயந்து நடந்து, தொழுகையையும் நிலைநாட்டுகிறார்களோ அவர்களைத்தான். எவர் பரிசுத்தமாக இருக்கிறாரோ அவர் தன் நன்மைக்காகவே பரிசுத்தமாய் இருக்கிறார். அல்லாஹ்விடமே அனைத்தும் செல்ல வேண்டியதிருக்கிறது. info
التفاسير: