ಪವಿತ್ರ ಕುರ್‌ಆನ್ ಅರ್ಥಾನುವಾದ - ತಮಿಳು ಅನುವಾದ - ಉಮರ್ ಶರೀಫ್

ಪುಟ ಸಂಖ್ಯೆ:close

external-link copy
9 : 6

وَلَوْ جَعَلْنٰهُ مَلَكًا لَّجَعَلْنٰهُ رَجُلًا وَّلَلَبَسْنَا عَلَیْهِمْ مَّا یَلْبِسُوْنَ ۟

இன்னும், (தூதருக்கு துணையாக வானத்திலிருந்து அனுப்பப்படும்) அவரை ஒரு வானவராக நாம் ஆக்கினாலும், (அவரை பூமிக்கு அனுப்பும்போது) அவரை(யும்) (மனித இனத்தைச் சேர்ந்த) ஓர் ஆடவராகத்தான் ஆக்குவோம். (ஏனெனில் வானவரை அவருடைய அசல் உருவத்தில், இவர்களால் பார்க்க முடியாது.) இன்னும், அவர்கள் (தங்கள் மீது) எதை குழப்பிக் கொள்கிறார்களோ அதையே அவர்கள் மீது (நாமும்) குழப்பிவிடுவோம். (-மீண்டும் பழைய சந்தேகத்திற்கே அவர்கள் ஆளாகி விடுவர்.) info
التفاسير:

external-link copy
10 : 6

وَلَقَدِ اسْتُهْزِئَ بِرُسُلٍ مِّنْ قَبْلِكَ فَحَاقَ بِالَّذِیْنَ سَخِرُوْا مِنْهُمْ مَّا كَانُوْا بِهٖ یَسْتَهْزِءُوْنَ ۟۠

இன்னும், திட்டவட்டமாக உமக்கு முன்னர் (பல) தூதர்கள் ஏளனம் செய்யப்பட்டனர். ஆக, அவர்களை கேலி செய்தவர்களை அவர்கள் எதை வைத்து ஏளனம் செய்து வந்தார்களோ அது சூழ்ந்து விட்டது. info
التفاسير:

external-link copy
11 : 6

قُلْ سِیْرُوْا فِی الْاَرْضِ ثُمَّ اَنْظُرُوْا كَیْفَ كَانَ عَاقِبَةُ الْمُكَذِّبِیْنَ ۟

(நபியே!) கூறுவீராக: “நீங்கள் பூமியில் (பல பகுதிகளுக்கு) செல்லுங்கள். பிறகு, பொய்ப்பித்தவர்களின் முடிவு எவ்வாறு இருந்தது? என்று பாருங்கள்” info
التفاسير:

external-link copy
12 : 6

قُلْ لِّمَنْ مَّا فِی السَّمٰوٰتِ وَالْاَرْضِ ؕ— قُلْ لِّلّٰهِ ؕ— كَتَبَ عَلٰی نَفْسِهِ الرَّحْمَةَ ؕ— لَیَجْمَعَنَّكُمْ اِلٰی یَوْمِ الْقِیٰمَةِ لَا رَیْبَ فِیْهِ ؕ— اَلَّذِیْنَ خَسِرُوْۤا اَنْفُسَهُمْ فَهُمْ لَا یُؤْمِنُوْنَ ۟

(நபியே!) கூறுவீராக: “வானங்களிலும் பூமியிலும் உள்ளவை யாருக்குரியன?” (நபியே நீர்) கூறுவீராக: “(அவை) அல்லாஹ்விற்குரியனவே!” கருணை புரிவதை (அவன்) தன் மீது கடமையாக்கினான். நிச்சயமாக உங்களை மறுமை நாளில் ஒன்று சேர்ப்பான். அதில் சந்தேகமேயில்லை. எவர்கள் தங்களுக்கு தாமே நஷ்டம் விளைவித்துக் கொண்டார்களோ அவர்கள் நம்பிக்கை கொள்ள மாட்டார்கள். info
التفاسير:

external-link copy
13 : 6

وَلَهٗ مَا سَكَنَ فِی الَّیْلِ وَالنَّهَارِ ؕ— وَهُوَ السَّمِیْعُ الْعَلِیْمُ ۟

இரவிலும், பகலிலும் தங்கி இருப்பவை (-இப்பிரபஞ்சத்தில் உள்ள அனைத்தும்) அவனுக்குரியனவே! அவன்தான் நன்கு செவியுறுபவன், நன்கறிந்தவன் ஆவான். info
التفاسير:

external-link copy
14 : 6

قُلْ اَغَیْرَ اللّٰهِ اَتَّخِذُ وَلِیًّا فَاطِرِ السَّمٰوٰتِ وَالْاَرْضِ وَهُوَ یُطْعِمُ وَلَا یُطْعَمُ ؕ— قُلْ اِنِّیْۤ اُمِرْتُ اَنْ اَكُوْنَ اَوَّلَ مَنْ اَسْلَمَ وَلَا تَكُوْنَنَّ مِنَ الْمُشْرِكِیْنَ ۟

(நபியே!) கூறுவீராக: “வானங்கள்; இன்னும், பூமியின் படைப்பாளனாகிய அல்லாஹ் அல்லாதவனையா நான் (எனது) பாதுகாவலனாக எடுத்துக் கொள்வேன்? அவன்தான் உணவளிக்கிறான்; அவனுக்கு உணவளிக்கப்படுவதில்லை.” (மேலும்) கூறுவீராக: “(அல்லாஹ்விற்கு முற்றிலும்) பணிந்தவர்களில் முதலாமவனாக நான் ஆகவேண்டுமென கட்டளையிடப்பட்டுள்ளேன். இன்னும், (நபியே) இணைவைப்பவர்களில் நிச்சயம் நீர் ஆகிவிடாதீர்.” info
التفاسير:

external-link copy
15 : 6

قُلْ اِنِّیْۤ اَخَافُ اِنْ عَصَیْتُ رَبِّیْ عَذَابَ یَوْمٍ عَظِیْمٍ ۟

(நபியே!) கூறுவீராக: “என் இறைவனுக்கு நான் மாறு செய்தால், மகத்தான (மறுமை) நாளின் தண்டனையை நிச்சயமாக நான் பயப்படுகிறேன்.” info
التفاسير:

external-link copy
16 : 6

مَنْ یُّصْرَفْ عَنْهُ یَوْمَىِٕذٍ فَقَدْ رَحِمَهٗ ؕ— وَذٰلِكَ الْفَوْزُ الْمُبِیْنُ ۟

அந்நாளில் எவரை விட்டும் தண்டனை தடுக்கப்படுகிறதோ அவருக்கு நிச்சயமாக (அல்லாஹ்) அருள் புரிந்து விட்டான். இதுதான் தெளிவான வெற்றியாகும். info
التفاسير:

external-link copy
17 : 6

وَاِنْ یَّمْسَسْكَ اللّٰهُ بِضُرٍّ فَلَا كَاشِفَ لَهٗۤ اِلَّا هُوَ ؕ— وَاِنْ یَّمْسَسْكَ بِخَیْرٍ فَهُوَ عَلٰی كُلِّ شَیْءٍ قَدِیْرٌ ۟

(நபியே!) அல்லாஹ் உமக்கு ஒரு சிரமத்தைக் கொடுத்தால் அவனைத் தவிர அதை நீக்குபவர் அறவே இல்லை. இன்னும், அவன் உமக்கு ஒரு நன்மையைக் கொடுத்தால் (அதைத் தடுப்பவருமில்லை), அவன் எல்லாவற்றின் மீது பேராற்றலுடையவன் ஆவான். info
التفاسير:

external-link copy
18 : 6

وَهُوَ الْقَاهِرُ فَوْقَ عِبَادِهٖ ؕ— وَهُوَ الْحَكِیْمُ الْخَبِیْرُ ۟

அவன்தான், தன் அடியார்கள் மேல் ஆதிக்கமுடையவன். இன்னும், அவன்தான் மகா ஞானவான், ஆழ்ந்தறிந்தவன். info
التفاسير: