ಪವಿತ್ರ ಕುರ್‌ಆನ್ ಅರ್ಥಾನುವಾದ - ತಮಿಳು ಅನುವಾದ - ಉಮರ್ ಶರೀಫ್

ಪುಟ ಸಂಖ್ಯೆ:close

external-link copy
138 : 6

وَقَالُوْا هٰذِهٖۤ اَنْعَامٌ وَّحَرْثٌ حِجْرٌ ۖۗ— لَّا یَطْعَمُهَاۤ اِلَّا مَنْ نَّشَآءُ بِزَعْمِهِمْ وَاَنْعَامٌ حُرِّمَتْ ظُهُوْرُهَا وَاَنْعَامٌ لَّا یَذْكُرُوْنَ اسْمَ اللّٰهِ عَلَیْهَا افْتِرَآءً عَلَیْهِ ؕ— سَیَجْزِیْهِمْ بِمَا كَانُوْا یَفْتَرُوْنَ ۟

இன்னும், “இவை (சிலைகளுக்காக நேர்ச்சை செய்யப்பட்ட, மனிதர்கள் புசிப்பதற்கு) தடுக்கப்பட்ட கால்நடைகளும் விவசாயமும் ஆகும். நாங்கள் நாடுபவரைத் தவிர (யாரும்) அவற்றைப் புசிக்கமாட்டார்” என்று தங்கள் கற்பனை எண்ணத்தின் படி அவர்கள் கூறினர். இன்னும், பல கால்நடைகள் இருக்கின்றன. அவற்றின் முதுகுகள் தடுக்கப்பட்டன. (-அவற்றின் மீது பயணிப்பதும், சுமையேற்றுவதும் கூடாது.) இன்னும், (பல) கால்நடைகள் இருக்கின்றன. (அவற்றை அறுக்கும்போது) அவற்றின் மீது அல்லாஹ்வின் பெயரைக் கூற மாட்டார்கள், (ஆனால், இவ்வாறுதான் அல்லாஹ் கூறினான் என்று) அவன் மீது பொய்யை இட்டுக் கட்டுகிறார்கள். அவர்கள் (அல்லாஹ்வின் மீது) பொய்யை இட்டுக்கட்டிக் கொண்டிருந்ததால் அவர்களுக்கு (தகுந்த) கூலி கொடுப்பான். info
التفاسير:

external-link copy
139 : 6

وَقَالُوْا مَا فِیْ بُطُوْنِ هٰذِهِ الْاَنْعَامِ خَالِصَةٌ لِّذُكُوْرِنَا وَمُحَرَّمٌ عَلٰۤی اَزْوَاجِنَا ۚ— وَاِنْ یَّكُنْ مَّیْتَةً فَهُمْ فِیْهِ شُرَكَآءُ ؕ— سَیَجْزِیْهِمْ وَصْفَهُمْ ؕ— اِنَّهٗ حَكِیْمٌ عَلِیْمٌ ۟

இன்னும், “இந்த கால்நடைகளின் வயிறுகளில் இருப்பது எங்கள் ஆண்களுக்கு மட்டும் உரியது. (அதை அவர்கள் புசிக்கலாம். அது) எங்கள் பெண்களுக்கு தடுக்கப்பட்டது. அது செத்ததாக இருந்தால் அதில் அவர்களும் பங்காளிகள் (-எங்கள் பெண்களும் அதை சாப்பிடலாம்)’’ என்று கூறினர். அவர்களுடைய (இவ்)வர்ணிப்பிற்கு அவன் அவர்களுக்கு(த் தகுந்த) கூலி கொடுப்பான். நிச்சயமாக அவன் மகா ஞானவான், நன்கறிந்தவன் ஆவான். info
التفاسير:

external-link copy
140 : 6

قَدْ خَسِرَ الَّذِیْنَ قَتَلُوْۤا اَوْلَادَهُمْ سَفَهًا بِغَیْرِ عِلْمٍ وَّحَرَّمُوْا مَا رَزَقَهُمُ اللّٰهُ افْتِرَآءً عَلَی اللّٰهِ ؕ— قَدْ ضَلُّوْا وَمَا كَانُوْا مُهْتَدِیْنَ ۟۠

அறிவின்றி (அபத்தமாக) முட்டாள்தனமாக தங்கள் பிள்ளைகளைக் கொன்றவர்களும், அல்லாஹ் (அனுமதி) கொடுத்த (நல்ல)வற்றை (தங்கள் மீது) தடுத்தவர்களும் திட்டமாக நஷ்டமடைந்து விட்டனர். (இவ்வாறு) அல்லாஹ்வின் மீது இட்டுக் கட்டுகிறார்கள். (அவர்கள்) திட்டமாக வழிகெட்டு விட்டனர். இன்னும், அவர்கள் நேர்வழி பெற்றவர்களாக இருக்கவில்லை. info
التفاسير:

external-link copy
141 : 6

وَهُوَ الَّذِیْۤ اَنْشَاَ جَنّٰتٍ مَّعْرُوْشٰتٍ وَّغَیْرَ مَعْرُوْشٰتٍ وَّالنَّخْلَ وَالزَّرْعَ مُخْتَلِفًا اُكُلُهٗ وَالزَّیْتُوْنَ وَالرُّمَّانَ مُتَشَابِهًا وَّغَیْرَ مُتَشَابِهٍ ؕ— كُلُوْا مِنْ ثَمَرِهٖۤ اِذَاۤ اَثْمَرَ وَاٰتُوْا حَقَّهٗ یَوْمَ حَصَادِهٖ ۖؗ— وَلَا تُسْرِفُوْا ؕ— اِنَّهٗ لَا یُحِبُّ الْمُسْرِفِیْنَ ۟ۙ

அவன்தான் கொடிகள் நிறைந்த தோட்டங்கள், கொடிகளற்ற தோட்டங்கள், பேரீச்ச மரங்கள் இன்னும், வித்தியாசமான கனிகளை உடைய விளைச்சலையும், ஆலிவ் பழங்களையும், ஒன்றுக்கொன்று ஒப்பான இன்னும் ஒப்பாகாத மாதுளையையும் உற்பத்தி செய்தான். அவை காய்த்தால் அவற்றின் கனிகளிலிருந்து புசியுங்கள். இன்னும், அவற்றின் அறுவடை நாளில் அவற்றுடைய கடமையை (ஸகாத்தை) கொடுங்கள். இன்னும், விரயம் செய்யாதீர்கள். விரயம் செய்பவர்களை நிச்சயமாக அவன் நேசிக்க மாட்டான். info
التفاسير:

external-link copy
142 : 6

وَمِنَ الْاَنْعَامِ حَمُوْلَةً وَّفَرْشًا ؕ— كُلُوْا مِمَّا رَزَقَكُمُ اللّٰهُ وَلَا تَتَّبِعُوْا خُطُوٰتِ الشَّیْطٰنِ ؕ— اِنَّهٗ لَكُمْ عَدُوٌّ مُّبِیْنٌ ۟ۙ

இன்னும், கால்நடைகளில், சுமக்கத் தகுதியானதையும் சுமக்கத் தகுதியற்றதையும் உற்பத்தி செய்தான். அல்லாஹ் உங்களுக்கு வழங்கிய (அனுமதிக்கப்பட்ட)வற்றில் இருந்து புசியுங்கள். இன்னும், ஷைத்தானின் அடிச்சுவடுகளைப் பின்பற்றாதீர்கள். நிச்சயமாக அவன் உங்களுக்கு வெளிப்படையான எதிரியாவான். info
التفاسير: