ការបកប្រែអត្ថន័យគួរអាន - ការបកប្រែជាភាសាតាមិល - អូម៉ើរ ស្ហើរុីហ្វ

លេខ​ទំព័រ:close

external-link copy
33 : 45

وَبَدَا لَهُمْ سَیِّاٰتُ مَا عَمِلُوْا وَحَاقَ بِهِمْ مَّا كَانُوْا بِهٖ یَسْتَهْزِءُوْنَ ۟

இன்னும், அவர்கள் செய்தவற்றின் தீமைகள் (-தண்டனைகள்) அவர்களுக்கு வெளிப்படும். இன்னும், அவர்கள் எ(ந்த நரகத்)தை கேலி செய்பவர்களாக இருந்தார்களோ அ(ந்த நரகமான)து அவர்களை சூழ்ந்துகொள்ளும். info
التفاسير:

external-link copy
34 : 45

وَقِیْلَ الْیَوْمَ نَنْسٰىكُمْ كَمَا نَسِیْتُمْ لِقَآءَ یَوْمِكُمْ هٰذَا وَمَاْوٰىكُمُ النَّارُ وَمَا لَكُمْ مِّنْ نّٰصِرِیْنَ ۟

இன்னும், (அவர்களை நோக்கி) கூறப்படும்: “இன்று நாங்கள் உங்களை (தண்டனையில்) விட்டுவிடுவோம், நீங்கள் உங்களது இன்றைய தினத்தின் சந்திப்பை (மறந்து அதற்கு அமல் செய்வதை) நீங்கள் விட்டுவிட்டது போன்று. உங்கள் ஒதுங்குமிடம் நரகம்தான். உதவியாளர்கள் யாரும் உங்களுக்கு இல்லை.” info
التفاسير:

external-link copy
35 : 45

ذٰلِكُمْ بِاَنَّكُمُ اتَّخَذْتُمْ اٰیٰتِ اللّٰهِ هُزُوًا وَّغَرَّتْكُمُ الْحَیٰوةُ الدُّنْیَا ۚ— فَالْیَوْمَ لَا یُخْرَجُوْنَ مِنْهَا وَلَا هُمْ یُسْتَعْتَبُوْنَ ۟

இதற்குக் காரணம், நிச்சயமாக நீங்கள் அல்லாஹ்வின் வசனங்களை கேலியாக எடுத்துக் கொண்டீர்கள். இன்னும், உலக வாழ்க்கை உங்களை மயக்கிவிட்டது. ஆகவே, இன்று அ(ந்த நரகத்)திலிருந்து அவர்கள் வெளியேற்றப்பட மாட்டார்கள். இன்னும், அவர்கள் மன்னிப்பு கோருவதற்காக உலகத்திற்கு திரும்ப அனுப்பப்பட மாட்டார்கள். info
التفاسير:

external-link copy
36 : 45

فَلِلّٰهِ الْحَمْدُ رَبِّ السَّمٰوٰتِ وَرَبِّ الْاَرْضِ رَبِّ الْعٰلَمِیْنَ ۟

ஆக, எல்லாப் புகழும் வானங்களின் அதிபதி, பூமியின் அதிபதி, அகிலத்தார்களின் அதிபதி அல்லாஹ்விற்கே உரியதாகும். info
التفاسير:

external-link copy
37 : 45

وَلَهُ الْكِبْرِیَآءُ فِی السَّمٰوٰتِ وَالْاَرْضِ ؕ— وَهُوَ الْعَزِیْزُ الْحَكِیْمُ ۟۠

இன்னும், வானங்களிலும் பூமியிலும் பெருமை அவனுக்கே உரியது. அவன்தான் மிகைத்தவன், மகா ஞானவான் ஆவான். info
التفاسير: