ការបកប្រែអត្ថន័យគួរអាន - ការបកប្រែជាភាសាតាមិល - អូម៉ើរ ស្ហើរុីហ្វ

លេខ​ទំព័រ:close

external-link copy
14 : 45

قُلْ لِّلَّذِیْنَ اٰمَنُوْا یَغْفِرُوْا لِلَّذِیْنَ لَا یَرْجُوْنَ اَیَّامَ اللّٰهِ لِیَجْزِیَ قَوْمًا بِمَا كَانُوْا یَكْسِبُوْنَ ۟

(நபியே!) நம்பிக்கையாளர்களுக்குக் கூறுவீராக! “(பாவிகளை அல்லாஹ் எப்படி தண்டிப்பான் என்று) அல்லாஹ்வின் நடவடிக்கைகளை பயப்படாதவர்களை அவர்கள் மன்னிப்பார்களாக.” இறுதியாக, (அழிச்சாட்டியமும் நம்பிக்கையாளர்களுக்கு தொந்தரவும் செய்து கொண்டிருந்த) ஒரு கூட்டத்தை அவர்கள் செய்து கொண்டிருந்த செயல்களுக்காக அவன் (தகுந்த தண்டனையால்) தண்டிப்பான். info
التفاسير:

external-link copy
15 : 45

مَنْ عَمِلَ صَالِحًا فَلِنَفْسِهٖ ۚ— وَمَنْ اَسَآءَ فَعَلَیْهَا ؗ— ثُمَّ اِلٰی رَبِّكُمْ تُرْجَعُوْنَ ۟

யார் ஒரு நன்மையை செய்வாரோ அது அவருக்குத்தான் நல்லது. இன்னும், எவர் தீமை செய்வாரோ அது அவருக்குத்தான் கேடாகும். பிறகு, நீங்கள் (யாராக இருந்தாலும்) உங்கள் இறைவனிடம் திரும்பக் கொண்டு வரப்படுவீர்கள். info
التفاسير:

external-link copy
16 : 45

وَلَقَدْ اٰتَیْنَا بَنِیْۤ اِسْرَآءِیْلَ الْكِتٰبَ وَالْحُكْمَ وَالنُّبُوَّةَ وَرَزَقْنٰهُمْ مِّنَ الطَّیِّبٰتِ وَفَضَّلْنٰهُمْ عَلَی الْعٰلَمِیْنَ ۟ۚ

இஸ்ரவேலர்களுக்கு வேதங்களையும் ஞானத்தையும் நபித்துவத்தையும் நாம் திட்டவட்டமாகக் கொடுத்தோம். இன்னும், நல்ல உணவுகளை அவர்களுக்கு நாம் வழங்கினோம். இன்னும், (அக்கால) மக்களை விட நாம் அவர்களை மேன்மைபடுத்தினோம். info
التفاسير:

external-link copy
17 : 45

وَاٰتَیْنٰهُمْ بَیِّنٰتٍ مِّنَ الْاَمْرِ ۚ— فَمَا اخْتَلَفُوْۤا اِلَّا مِنْ بَعْدِ مَا جَآءَهُمُ الْعِلْمُ ۙ— بَغْیًا بَیْنَهُمْ ؕ— اِنَّ رَبَّكَ یَقْضِیْ بَیْنَهُمْ یَوْمَ الْقِیٰمَةِ فِیْمَا كَانُوْا فِیْهِ یَخْتَلِفُوْنَ ۟

இன்னும், இந்த மார்க்கத்தின் தெளிவான சட்டங்களை நாம் அவர்களுக்குக் கொடுத்தோம். ஆக, அவர்களிடம் கல்வி வந்த பின்னர், தங்களுக்கு மத்தியில் உள்ள பொறாமையினால் அவர்கள் (தங்களுக்குள் தர்க்கித்துக் கொண்டு) கருத்து வேறுபாடு கொண்டார்கள். நிச்சயமாக உமது இறைவன் மறுமை நாளில் அவர்களுக்கு மத்தியில் அவர்கள் கருத்து வேறுபாடு கொண்டிருந்தவற்றில் தீர்ப்பளிப்பான். info
التفاسير:

external-link copy
18 : 45

ثُمَّ جَعَلْنٰكَ عَلٰی شَرِیْعَةٍ مِّنَ الْاَمْرِ فَاتَّبِعْهَا وَلَا تَتَّبِعْ اَهْوَآءَ الَّذِیْنَ لَا یَعْلَمُوْنَ ۟

பிறகு, நாம் உம்மை இந்த மார்க்கத்தின் (உறுதியான) தெளிவான சட்டங்கள் மீது அமைத்தோம். ஆகவே, அதை நீர் பின்பற்றுவீராக! அறியாதவர்களின் மன விருப்பங்களை நீர் பின்பற்றாதீர்! info
التفاسير:

external-link copy
19 : 45

اِنَّهُمْ لَنْ یُّغْنُوْا عَنْكَ مِنَ اللّٰهِ شَیْـًٔا ؕ— وَاِنَّ الظّٰلِمِیْنَ بَعْضُهُمْ اَوْلِیَآءُ بَعْضٍ ۚ— وَاللّٰهُ وَلِیُّ الْمُتَّقِیْنَ ۟

நிச்சயமாக அவர்கள் உம்மை விட்டு அல்லாஹ்விடமிருந்து (-அவனது தண்டனையில் இருந்து) எதையும் அறவே தடுக்க மாட்டார்கள். நிச்சயமாக அநியாயக்காரர்கள் அவர்களில் சிலர் சிலருக்கு நண்பர்கள் ஆவார்கள். அல்லாஹ்வோ இறையச்சமுள்ளவர்களின் நண்பன் ஆவான். info
التفاسير:

external-link copy
20 : 45

هٰذَا بَصَآىِٕرُ لِلنَّاسِ وَهُدًی وَّرَحْمَةٌ لِّقَوْمٍ یُّوْقِنُوْنَ ۟

இ(ந்த வேதமான)து மக்களுக்கு தெளிவான ஆதாரங்களாகவும் நேர்வழியாகவும் (அல்லாஹ்வை) உறுதியாக நம்பிக்கை கொள்கிற மக்களுக்கு கருணையாகவும் இருக்கிறது. info
التفاسير:

external-link copy
21 : 45

اَمْ حَسِبَ الَّذِیْنَ اجْتَرَحُوا السَّیِّاٰتِ اَنْ نَّجْعَلَهُمْ كَالَّذِیْنَ اٰمَنُوْا وَعَمِلُوا الصّٰلِحٰتِ ۙ— سَوَآءً مَّحْیَاهُمْ وَمَمَاتُهُمْ ؕ— سَآءَ مَا یَحْكُمُوْنَ ۟۠

பாவங்களை செய்தவர்கள் எண்ணுகிறார்களா, “நம்பிக்கை கொண்டு நன்மைகளை செய்தவர்களைப் போன்று அவர்களை நாம் ஆக்குவோம்” என்று? இ(ந்த இரு கூட்டத்த)வர்களின் வாழ்க்கையையும் இ(ந்த இரு கூட்டத்த)வர்களின் மரணத்தையும் நாம் சமமாக ஆக்கிவிடுவோம் என்று எண்ணுகிறார்களா? (அவ்வாறு ஆக்கவே மாட்டோம். இவ்வுலகில் முஃமினாக இருந்தவர் இறக்கும்போதும் முஃமினாக இருப்பார், மறுமையிலும் முஃமினாக இருப்பார். இவ்வுலகில் காஃபிராக இருந்தவர் மறுமையிலும் காஃபிராகத்தான் இருப்பார்.) இவர்கள் எதை தீர்ப்பளிக்கிறார்களோ அது மிகக் கெட்ட தீர்ப்பாகும். info
التفاسير:

external-link copy
22 : 45

وَخَلَقَ اللّٰهُ السَّمٰوٰتِ وَالْاَرْضَ بِالْحَقِّ وَلِتُجْزٰی كُلُّ نَفْسٍ بِمَا كَسَبَتْ وَهُمْ لَا یُظْلَمُوْنَ ۟

இன்னும், அல்லாஹ் வானங்களையும் பூமியையும் - உண்மையான காரணத்திற்காக (-அவனது வல்லமையை அடியார்கள் அறிவதற்காக)வும் ஒவ்வொரு ஆன்மாவும் அது எதை செய்ததோ அதற்குக் கூலி கொடுக்கப்படுவதற்காகவும் - படைத்தான். இன்னும், அவர்கள் அநீதி இழைக்கப்பட மாட்டார்கள். info
التفاسير: