ការបកប្រែអត្ថន័យគួរអាន - ការបកប្រែជាភាសាតាមិល - អូម៉ើរ ស្ហើរុីហ្វ

លេខ​ទំព័រ:close

external-link copy
47 : 41

اِلَیْهِ یُرَدُّ عِلْمُ السَّاعَةِ ؕ— وَمَا تَخْرُجُ مِنْ ثَمَرٰتٍ مِّنْ اَكْمَامِهَا وَمَا تَحْمِلُ مِنْ اُ وَلَا تَضَعُ اِلَّا بِعِلْمِهٖ ؕ— وَیَوْمَ یُنَادِیْهِمْ اَیْنَ شُرَكَآءِیْ ۙ— قَالُوْۤا اٰذَنّٰكَ ۙ— مَا مِنَّا مِنْ شَهِیْدٍ ۟ۚ

மறுமையைப் பற்றிய அறிவு அவன் பக்கமே திருப்பப்படுகிறது. (அவனை அன்றி மறுமை நிகழப்போவதை யாரும் அறியமாட்டார்.) அவனது ஞானமில்லாமல் பழங்களில் எதுவும் அவற்றின் பாலைகளில் இருந்து வெளிவருவதில்லை, பெண்களில் எவரும் கர்ப்பமடைவதுமில்லை, அவர்கள் குழந்தை பெற்றெடுப்பதுமில்லை. இன்னும், “எனக்கு இணையாக்கப்பட்ட தெய்வங்கள் எங்கே?” என்று அவன் அவர்களை அழைக்கின்ற நாளில் அவர்கள் கூறுவார்கள்: “(இன்றைய தினம்) எங்களில் யாரும் (உனக்கு இணை உள்ளது என) சாட்சி சொல்பவர் இல்லை என்று நாங்கள் உனக்கு அறிவித்து விட்டோம்.” info
التفاسير:

external-link copy
48 : 41

وَضَلَّ عَنْهُمْ مَّا كَانُوْا یَدْعُوْنَ مِنْ قَبْلُ وَظَنُّوْا مَا لَهُمْ مِّنْ مَّحِیْصٍ ۟

இன்னும், இதற்கு முன்னர் அவர்கள் பிரார்த்தித்துக் கொண்டிருந்தவை அவர்களை விட்டும் மறைந்து விடும். இன்னும், தப்பிப்பதற்குரிய இடம் எதுவும் தங்களுக்கு இல்லை என்பதை அவர்கள் அறிந்து கொள்வார்கள். info
التفاسير:

external-link copy
49 : 41

لَا یَسْـَٔمُ الْاِنْسَانُ مِنْ دُعَآءِ الْخَیْرِ ؗ— وَاِنْ مَّسَّهُ الشَّرُّ فَیَـُٔوْسٌ قَنُوْطٌ ۟

மனிதன் நன்மைக்காகப் பிரார்த்திப்பதில் சடைவடைய மாட்டான். (ஆனால்) அவனுக்கு தீமைகள் நிகழ்ந்தால் அவன் நிராசை அடைந்தவனாக, நம்பிக்கை இழந்தவனாக ஆகிவிடுகிறான். info
التفاسير:

external-link copy
50 : 41

وَلَىِٕنْ اَذَقْنٰهُ رَحْمَةً مِّنَّا مِنْ بَعْدِ ضَرَّآءَ مَسَّتْهُ لَیَقُوْلَنَّ هٰذَا لِیْ ۙ— وَمَاۤ اَظُنُّ السَّاعَةَ قَآىِٕمَةً ۙ— وَّلَىِٕنْ رُّجِعْتُ اِلٰی رَبِّیْۤ اِنَّ لِیْ عِنْدَهٗ لَلْحُسْنٰی ۚ— فَلَنُنَبِّئَنَّ الَّذِیْنَ كَفَرُوْا بِمَا عَمِلُوْا ؗ— وَلَنُذِیْقَنَّهُمْ مِّنْ عَذَابٍ غَلِیْظٍ ۟

அவனுக்கு நிகழ்ந்த தீங்குக்குப் பின்னர் நம் புறத்தில் இருந்து ஓர் அருளை நாம் அவனுக்கு சுவைக்க வைத்தால் (அதற்கு நன்றி செலுத்தாமல்,) “இது எனக்குரியது (-என் தகுதியினால், என் திறமையினால் எனக்கு கிடைத்தது), மறுமை நிகழும் எனவும் நான் எண்ணவில்லை, நான் என் இறைவனிடம் திரும்பக் கொண்டுவரப்பட்டாலும் நிச்சயமாக எனக்கு அவனிடம் சொர்க்கம்தான் உண்டு” என்று நிச்சயமாக அவன் கூறுகிறான். ஆக, நிராகரித்தவர்களுக்கு அவர்கள் செய்ததை நாம் நிச்சயமாக அறிவிப்போம். இன்னும், அவர்களுக்கு கடுமையான தண்டனையை நாம் சுவைக்க வைப்போம். info
التفاسير:

external-link copy
51 : 41

وَاِذَاۤ اَنْعَمْنَا عَلَی الْاِنْسَانِ اَعْرَضَ وَنَاٰ بِجَانِبِهٖ ۚ— وَاِذَا مَسَّهُ الشَّرُّ فَذُوْ دُعَآءٍ عَرِیْضٍ ۟

மனிதன் மீது நாம் அருள் புரிந்தால் (அதற்கு அவன் நன்றி செலுத்தாமல் நம்மை விட்டு) புறக்கணித்து செல்கிறான். இன்னும், (நமக்கு கீழ்ப்படிவதை விட்டு விலகி) முற்றிலும் தூரமாகி விடுகிறான். அவனுக்கு தீங்கு நிகழ்ந்தால் (நம்மிடம்) மிக அதிகமான பிரார்த்தனை செய்பவனாக ஆகிவிடுகிறான். info
التفاسير:

external-link copy
52 : 41

قُلْ اَرَءَیْتُمْ اِنْ كَانَ مِنْ عِنْدِ اللّٰهِ ثُمَّ كَفَرْتُمْ بِهٖ مَنْ اَضَلُّ مِمَّنْ هُوَ فِیْ شِقَاقٍ بَعِیْدٍ ۟

(நபியே! அவர்களை நோக்கி) நீர் கூறுவீராக! “நீங்கள் எனக்கு அறிவியுங்கள்! இந்த வேதம் அல்லாஹ்விடமிருந்து இறக்கப்பட்டதாக இருந்து பிறகு, நீங்கள் அதை நிராகரித்து (உண்மைக்கு வெகு தூரம் முரண்பட்டு, வழிகேட்டில் சென்று)விட்டால், வெகு தூரமான முரண்பாட்டில் இருப்பவனை விட மிகப் பெரிய வழிகேடன் யார் இருக்க முடியும்?” info
التفاسير:

external-link copy
53 : 41

سَنُرِیْهِمْ اٰیٰتِنَا فِی الْاٰفَاقِ وَفِیْۤ اَنْفُسِهِمْ حَتّٰی یَتَبَیَّنَ لَهُمْ اَنَّهُ الْحَقُّ ؕ— اَوَلَمْ یَكْفِ بِرَبِّكَ اَنَّهٗ عَلٰی كُلِّ شَیْءٍ شَهِیْدٌ ۟

நாம் நமது அத்தாட்சிகளை (அவர்கள் வசிக்கின்ற பூமியின்) பல பகுதிகளிலும் (-மக்காவைச் சுற்றியுள்ள நாடுகளிலும்) அவர்க(ளுடைய உயிர்க)ளிலும் அவர்களுக்கு நாம் விரைவில் காண்பிப்போம். இறுதியாக, நிச்சயமாக இதுதான் உண்மை என்று அவர்களுக்கு தெளிவாகிவிடும். நிச்சயமாக அவன் எல்லாவற்றையும் நன்கு பார்ப்பவனாக இருக்கிறான் என்பது (இந்த வேதத்தை நிராகரிப்பவர்களை தண்டிப்பதற்கும்; இதை நம்பிக்கை கொண்டவர்களை இரட்சிப்பதற்கும்) உமது இறைவனுக்கு போதாதா? info
التفاسير:

external-link copy
54 : 41

اَلَاۤ اِنَّهُمْ فِیْ مِرْیَةٍ مِّنْ لِّقَآءِ رَبِّهِمْ ؕ— اَلَاۤ اِنَّهٗ بِكُلِّ شَیْءٍ مُّحِیْطٌ ۟۠

அறிந்து கொள்ளுங்கள்! நிச்சயமாக அவர்கள் தங்கள் இறைவனை சந்திப்பதில் சந்தேகத்தில் இருக்கிறார்கள். அறிந்து கொள்ளுங்கள்! நிச்சயமாக அவன் எல்லாவற்றையும் (தனது அறிவாலும் ஆற்றலாலும்) சூழ்ந்திருக்கிறான். info
التفاسير: