ការបកប្រែអត្ថន័យគួរអាន - ការបកប្រែជាភាសាតាមិល - អូម៉ើរ ស្ហើរុីហ្វ

លេខ​ទំព័រ:close

external-link copy
12 : 41

فَقَضٰىهُنَّ سَبْعَ سَمٰوَاتٍ فِیْ یَوْمَیْنِ وَاَوْحٰی فِیْ كُلِّ سَمَآءٍ اَمْرَهَا وَزَیَّنَّا السَّمَآءَ الدُّنْیَا بِمَصَابِیْحَ ۖۗ— وَحِفْظًا ؕ— ذٰلِكَ تَقْدِیْرُ الْعَزِیْزِ الْعَلِیْمِ ۟

ஆக, அவன் அவற்றை ஏழு வானங்களாக (வியாழன், வெள்ளி ஆகிய) இரண்டு நாட்களில் (படைத்து) முடித்தான். இன்னும், ஒவ்வொரு வானத்திலும் அதன் காரியத்தையும் அவன் அறிவித்தான். கீழ் வானத்தை (நட்சத்திரங்கள் என்னும்) விளக்குகளால் நாம் அலங்கரித்தோம். இன்னும் (ஷைத்தான்கள் வானத்தின் பக்கம் ஏறுவதிலிருந்து வானப் பாதைகளை) பாதுகாப்பதற்காகவும் (நாம் நட்சத்திரங்களை அமைத்தோம்). இது, நன்கறிந்தவனுடைய, மிகைத்தவனுடைய ஏற்பாடாகும். info
التفاسير:

external-link copy
13 : 41

فَاِنْ اَعْرَضُوْا فَقُلْ اَنْذَرْتُكُمْ صٰعِقَةً مِّثْلَ صٰعِقَةِ عَادٍ وَّثَمُوْدَ ۟ؕ

ஆக, அவர்கள் புறக்கணித்தால் (நபியே!) நீர் கூறுவீராக! “ஆது, ஸமூது உடைய பேரழிவைப் போன்ற ஒரு பேரழிவை நான் உங்களுக்கு எச்சரிக்கிறேன்.” info
التفاسير:

external-link copy
14 : 41

اِذْ جَآءَتْهُمُ الرُّسُلُ مِنْ بَیْنِ اَیْدِیْهِمْ وَمِنْ خَلْفِهِمْ اَلَّا تَعْبُدُوْۤا اِلَّا اللّٰهَ ؕ— قَالُوْا لَوْ شَآءَ رَبُّنَا لَاَنْزَلَ مَلٰٓىِٕكَةً فَاِنَّا بِمَاۤ اُرْسِلْتُمْ بِهٖ كٰفِرُوْنَ ۟

அவர்களிடம் தூதர்கள் அவர்களுக்கு முன்னிருந்தும் அவர்களுக்கு பின்னிருந்தும் (ஒருவர் பின் ஒருவராக தொடர்ந்து) வந்தார்கள். (இன்னும் அவர்கள் கூறினார்கள்:) “அல்லாஹ்வைத் தவிர (யாரையும் எதையும்) வணங்காதீர்கள்!” (இணைவைப்பாளர்கள்) கூறினார்கள்: “எங்கள் இறைவன் நாடியிருந்தால் அவன் (எங்களை நேர்வழிபடுத்த) வானவர்களை இறக்கி இருப்பான். ஆகவே, நீங்கள் எதைக் கொண்டு அனுப்பப்பட்டீர்களோ அதை நிச்சயமாக நாங்கள் நிராகரிப்பவர்கள் ஆவோம்.” info
التفاسير:

external-link copy
15 : 41

فَاَمَّا عَادٌ فَاسْتَكْبَرُوْا فِی الْاَرْضِ بِغَیْرِ الْحَقِّ وَقَالُوْا مَنْ اَشَدُّ مِنَّا قُوَّةً ؕ— اَوَلَمْ یَرَوْا اَنَّ اللّٰهَ الَّذِیْ خَلَقَهُمْ هُوَ اَشَدُّ مِنْهُمْ قُوَّةً ؕ— وَكَانُوْا بِاٰیٰتِنَا یَجْحَدُوْنَ ۟

ஆக, ஆது சமுதாயம் பூமியில் அநியாயமாக பெருமை அடித்தனர். இன்னும், “எங்களை விட ஆற்றல் மிகுந்த பலசாலிகள் யார்” என்று கூறினார்கள். நிச்சயமாக அவர்களைப் படைத்த அல்லாஹ் அவர்களை விட ஆற்றல் மிகுந்த பலசாலியாவான் என்பதை இவர்கள் கவனிக்கவில்லையா? அவர்கள் நமது வசனங்களை மறுப்பவர்களாக இருந்தனர். info
التفاسير:

external-link copy
16 : 41

فَاَرْسَلْنَا عَلَیْهِمْ رِیْحًا صَرْصَرًا فِیْۤ اَیَّامٍ نَّحِسَاتٍ لِّنُذِیْقَهُمْ عَذَابَ الْخِزْیِ فِی الْحَیٰوةِ الدُّنْیَا ؕ— وَلَعَذَابُ الْاٰخِرَةِ اَخْزٰی وَهُمْ لَا یُنْصَرُوْنَ ۟

ஆகவே, கேவலமான தண்டனையை இவ்வுலகில் அவர்களுக்கு நாம் சுவைக்க வைப்பதற்காக, அவர்கள் மீது கடும் குளிர் காற்றை துரதிர்ஷ்டமான (தீமைகள் நிறைந்த) நாட்களில் நாம் அனுப்பினோம். மறுமையின் தண்டனையோ (அவர்களுக்கு) மிக கேவலமானது. (அங்கு) அவர்கள் உதவி செய்யப்பட மாட்டார்கள். info
التفاسير:

external-link copy
17 : 41

وَاَمَّا ثَمُوْدُ فَهَدَیْنٰهُمْ فَاسْتَحَبُّوا الْعَمٰی عَلَی الْهُدٰی فَاَخَذَتْهُمْ صٰعِقَةُ الْعَذَابِ الْهُوْنِ بِمَا كَانُوْا یَكْسِبُوْنَ ۟ۚ

ஆக, ஸமூது சமுதாயம், நாம் அவர்களுக்கு நேர்வழிகாட்டினோம். ஆனால், அவர்கள் நேர்வழியை விட (வழிகேடான) குருட்டுத் தனத்தைத்தான் அதிகம் விரும்பினார்கள். ஆகவே, அவர்கள் செய்து கொண்டிருந்தவற்றின் காரணமாக அவர்களை இழிவான தண்டனையின் பேரழிவு பிடித்தது. info
التفاسير:

external-link copy
18 : 41

وَنَجَّیْنَا الَّذِیْنَ اٰمَنُوْا وَكَانُوْا یَتَّقُوْنَ ۟۠

(அல்லாஹ்வை) நம்பிக்கை கொண்டு, (அவனை) அஞ்சுபவர்களாக இருந்தவர்களை நாம் பாதுகாத்(து தண்டனையில் இருந்து தப்பிக்க வைத்)தோம். info
التفاسير:

external-link copy
19 : 41

وَیَوْمَ یُحْشَرُ اَعْدَآءُ اللّٰهِ اِلَی النَّارِ فَهُمْ یُوْزَعُوْنَ ۟

அல்லாஹ்வின் எதிரிகள் நரகத்தின் பக்கம் ஒன்று திரட்டப்படுகின்ற நாளில், ஆக அவர்கள் (அனைவரும் முன்னோர் பின்னோர் எல்லாம் ஒரே இடத்தில் ஒன்று சேர்வதற்காக) நிறுத்தி வைக்கப்படுவார்கள். info
التفاسير:

external-link copy
20 : 41

حَتّٰۤی اِذَا مَا جَآءُوْهَا شَهِدَ عَلَیْهِمْ سَمْعُهُمْ وَاَبْصَارُهُمْ وَجُلُوْدُهُمْ بِمَا كَانُوْا یَعْمَلُوْنَ ۟

இறுதியாக, அவர்கள் அதற்கருகில் வரும்போது அவர்களுடைய செவியும் அவர்களுடைய பார்வைகளும் அவர்களுடைய தோல்களும் அவர்கள் செய்துகொண்டிருந்ததைப் பற்றி அவர்களுக்கு எதிராகவே சாட்சி கூறும். info
التفاسير: