ការបកប្រែអត្ថន័យគួរអាន - ការបកប្រែជាភាសាតាមិល - អូម៉ើរ ស្ហើរុីហ្វ

លេខ​ទំព័រ:close

external-link copy
114 : 4

لَا خَیْرَ فِیْ كَثِیْرٍ مِّنْ نَّجْوٰىهُمْ اِلَّا مَنْ اَمَرَ بِصَدَقَةٍ اَوْ مَعْرُوْفٍ اَوْ اِصْلَاحٍ بَیْنَ النَّاسِ ؕ— وَمَنْ یَّفْعَلْ ذٰلِكَ ابْتِغَآءَ مَرْضَاتِ اللّٰهِ فَسَوْفَ نُؤْتِیْهِ اَجْرًا عَظِیْمًا ۟

(நபியே!) அவர்களின் இரகசியங்களில் அதிகமானவற்றில் அறவே நன்மை இல்லை, தர்மத்தை; அல்லது, நன்மையை; அல்லது, மக்களுக்கிடையில் சமாதானத்தை ஏவியவர்கள் இரகசியம் பேசுவதில் தவிர. எவர் அல்லாஹ்வின் பொருத்தத்தை நாடி (மேற்கூறப்பட்ட) அவற்றை செய்வாரோ நாம் அவருக்கு மகத்தான கூலியைத் தருவோம். info
التفاسير:

external-link copy
115 : 4

وَمَنْ یُّشَاقِقِ الرَّسُوْلَ مِنْ بَعْدِ مَا تَبَیَّنَ لَهُ الْهُدٰی وَیَتَّبِعْ غَیْرَ سَبِیْلِ الْمُؤْمِنِیْنَ نُوَلِّهٖ مَا تَوَلّٰی وَنُصْلِهٖ جَهَنَّمَ ؕ— وَسَآءَتْ مَصِیْرًا ۟۠

இன்னும், எவர் தனக்கு நேரான வழி தெளிவானதன் பின்னர் இத்தூதருக்கு முரண்பட்டு நம்பிக்கையாளர்களின் வழி அல்லாததைப் பின்பற்றுவாரோ அவரை அவர் திரும்பிய வழியிலேயே நாம் திருப்பிவிடுவோம். இன்னும், அவரை நரகத்தில் எரிப்போம். அது கெட்ட மீளுமிடமாகும். info
التفاسير:

external-link copy
116 : 4

اِنَّ اللّٰهَ لَا یَغْفِرُ اَنْ یُّشْرَكَ بِهٖ وَیَغْفِرُ مَا دُوْنَ ذٰلِكَ لِمَنْ یَّشَآءُ ؕ— وَمَنْ یُّشْرِكْ بِاللّٰهِ فَقَدْ ضَلَّ ضَلٰلًا بَعِیْدًا ۟

நிச்சயமாக அல்லாஹ் தனக்கு இணைவைக்கப்படுவதை மன்னிக்க மாட்டான். இன்னும், அது அல்லாததை தான் நாடுபவருக்கு மன்னிப்பான். எவர் அல்லாஹ்விற்கு இணைவைப்பாரோ திட்டமாக அவர் தூரமான வழிகேடாக வழிகெட்டுவிட்டார். info
التفاسير:

external-link copy
117 : 4

اِنْ یَّدْعُوْنَ مِنْ دُوْنِهٖۤ اِلَّاۤ اِنٰثًا ۚ— وَاِنْ یَّدْعُوْنَ اِلَّا شَیْطٰنًا مَّرِیْدًا ۟ۙ

அவர்கள் அவனையன்றி பெண் சிலைகளிடமே தவிர பிரார்த்திப்பதில்லை. இன்னும், (அல்லாஹ்விற்கு) கீழ்ப்படியாத ஷைத்தானிடமே தவிர அவர்கள் பிரார்த்திப்பதில்லை. info
التفاسير:

external-link copy
118 : 4

لَّعَنَهُ اللّٰهُ ۘ— وَقَالَ لَاَتَّخِذَنَّ مِنْ عِبَادِكَ نَصِیْبًا مَّفْرُوْضًا ۟ۙ

அல்லாஹ் அவனை சபித்தான். அவன் கூறினான்: “உன் அடியார்களில் ஒரு குறிப்பிட்ட தொகையினரை நிச்சயமாக நான் எடுத்துக்கொள்வேன்.” info
التفاسير:

external-link copy
119 : 4

وَّلَاُضِلَّنَّهُمْ وَلَاُمَنِّیَنَّهُمْ وَلَاٰمُرَنَّهُمْ فَلَیُبَتِّكُنَّ اٰذَانَ الْاَنْعَامِ وَلَاٰمُرَنَّهُمْ فَلَیُغَیِّرُنَّ خَلْقَ اللّٰهِ ؕ— وَمَنْ یَّتَّخِذِ الشَّیْطٰنَ وَلِیًّا مِّنْ دُوْنِ اللّٰهِ فَقَدْ خَسِرَ خُسْرَانًا مُّبِیْنًا ۟ؕ

“இன்னும், நிச்சயம் நான் அவர்களை வழி கெடுப்பேன்; இன்னும், நிச்சயம் அவர்களுக்கு வீண் நம்பிக்கைகளை ஊட்டுவேன்; இன்னும், நிச்சயம் அவர்களுக்கு (தீமையை) ஏவுவேன். ஆகவே, (சிலைகளுக்கு நேர்ச்சை செய்யப்பட்ட) கால்நடைகளின் காதுகளை கட்டாயம் அவர்கள் அறுப்பார்கள். இன்னும், நிச்சயம் அவர்களுக்கு ஏவுவேன். ஆகவே, அல்லாஹ்வின் படைப்பு(களின் கோலங்)களை நிச்சயமாக அவர்கள் மாற்றுவார்கள்.” (இவ்வாறு ஷைத்தான் கூறினான்.) எவன் அல்லாஹ்வையன்றி ஷைத்தானை நண்பனாக எடுத்துக் கொள்வானோ அவன் திட்டமாக வெளிப்படையான நஷ்டமடைந்தான். info
التفاسير:

external-link copy
120 : 4

یَعِدُهُمْ وَیُمَنِّیْهِمْ ؕ— وَمَا یَعِدُهُمُ الشَّیْطٰنُ اِلَّا غُرُوْرًا ۟

ஷைத்தான் அவர்களுக்கு வாக்களிக்கிறான்; இன்னும், அவர்களுக்கு வீண் நம்பிக்கை ஊட்டுகிறான். இன்னும், ஷைத்தான் அவர்களுக்கு ஏமாற்றத்தைத் தவிர (உண்மையை) வாக்களிக்க மாட்டான். info
التفاسير:

external-link copy
121 : 4

اُولٰٓىِٕكَ مَاْوٰىهُمْ جَهَنَّمُ ؗ— وَلَا یَجِدُوْنَ عَنْهَا مَحِیْصًا ۟

அவர்களுடைய ஒதுங்குமிடம் நரகம்தான். இன்னும், அவர்கள் அதிலிருந்து (தப்பித்து செல்ல) ஒரு ஒதுங்குமிடத்தையும் காணமாட்டார்கள். info
التفاسير: