ការបកប្រែអត្ថន័យគួរអាន - ការបកប្រែជាភាសាតាមិល - អូម៉ើរ ស្ហើរុីហ្វ

លេខ​ទំព័រ:close

external-link copy
102 : 4

وَاِذَا كُنْتَ فِیْهِمْ فَاَقَمْتَ لَهُمُ الصَّلٰوةَ فَلْتَقُمْ طَآىِٕفَةٌ مِّنْهُمْ مَّعَكَ وَلْیَاْخُذُوْۤا اَسْلِحَتَهُمْ ۫— فَاِذَا سَجَدُوْا فَلْیَكُوْنُوْا مِنْ وَّرَآىِٕكُمْ ۪— وَلْتَاْتِ طَآىِٕفَةٌ اُخْرٰی لَمْ یُصَلُّوْا فَلْیُصَلُّوْا مَعَكَ وَلْیَاْخُذُوْا حِذْرَهُمْ وَاَسْلِحَتَهُمْ ۚ— وَدَّ الَّذِیْنَ كَفَرُوْا لَوْ تَغْفُلُوْنَ عَنْ اَسْلِحَتِكُمْ وَاَمْتِعَتِكُمْ فَیَمِیْلُوْنَ عَلَیْكُمْ مَّیْلَةً وَّاحِدَةً ؕ— وَلَا جُنَاحَ عَلَیْكُمْ اِنْ كَانَ بِكُمْ اَذًی مِّنْ مَّطَرٍ اَوْ كُنْتُمْ مَّرْضٰۤی اَنْ تَضَعُوْۤا اَسْلِحَتَكُمْ ۚ— وَخُذُوْا حِذْرَكُمْ ؕ— اِنَّ اللّٰهَ اَعَدَّ لِلْكٰفِرِیْنَ عَذَابًا مُّهِیْنًا ۟

(நபியே! போரில்) நீர் அவர்களுடன் இருந்து, அவர்களுக்கு நீர் தொழுகையை நிலைநிறுத்தினால் அவர்களில் ஒரு பிரிவு உம்முடன் (தொழ) நிற்கவும். அவர்கள் தங்கள் ஆயுதங்களை (கைகளில்) எடுத்து வைத்துக் கொள்ளவும். ஆக, அவர்கள் (உம்முடன் தொழுது) ஸஜ்தா செய்துவிட்டால் (தொழுகையிலிருந்து விலகி) உங்களுக்குப் பின்னால் இரு(ந்து உங்களை பாதுகா)க்கவும். இன்னும், தொழாமலிருந்த மற்றொரு பிரிவு (தொழுகைக்கு) வரவும். ஆக, உம்முடன் அவர்கள் தொழவும். அவர்களும் தங்கள் தற்காப்புகளையும், தங்கள் (போர்) ஆயுதங்களையும் எடு(த்து தங்களுடன் வைத்திரு)க்கவும். நீங்கள் உங்கள் ஆயுதங்கள் மற்றும் உங்கள் பொருள்களிலிருந்து கவனமற்று இருப்பதையே நிராகரிப்பாளர்கள் விரும்பினர். (அப்படி நீங்கள் கவனமற்று இருந்தால்,) அவர்கள் உடனே உங்கள் மீது ஒரே பாய்ச்சலாக பாய்ந்து (தாக்கி) விடுவார்கள். இன்னும், மழையின் காரணமாக உங்களுக்கு சிரமம் இருந்தால்; அல்லது, நீங்கள் நோயாளிகளாக இருந்தால் (தொழும்போது) உங்கள் ஆயுதங்களை (கீழே) வைப்பது உங்கள் மீது குற்றமில்லை. உங்கள் (கேடயம், சிறு கத்தி போன்ற) தற்காப்புகளை (எப்போதும்) எடு(த்து வைத்துக் கொண்டு உஷாராக இரு)ங்கள். நிச்சயமாக அல்லாஹ் இழிவுபடுத்தும் தண்டனையை நிராகரிப்பாளர்களுக்கு ஏற்பாடு செய்திருக்கிறான். info
التفاسير:

external-link copy
103 : 4

فَاِذَا قَضَیْتُمُ الصَّلٰوةَ فَاذْكُرُوا اللّٰهَ قِیٰمًا وَّقُعُوْدًا وَّعَلٰی جُنُوْبِكُمْ ۚ— فَاِذَا اطْمَاْنَنْتُمْ فَاَقِیْمُوا الصَّلٰوةَ ۚ— اِنَّ الصَّلٰوةَ كَانَتْ عَلَی الْمُؤْمِنِیْنَ كِتٰبًا مَّوْقُوْتًا ۟

ஆக, நீங்கள் தொழுகையை முடித்தால் நின்றவர்களாகவும், உட்கார்ந்தவர்களாகவும், உங்கள் விலாக்கள் மீது (படுத்தவர்களாகவு)ம் (நீங்கள் எந்த நிலையில் இருந்தாலும்) அல்லாஹ்வை நினைவு கூர்ந்தவர்களாக இருங்கள். ஆக, (எதிரிகளின் தாக்குதலில் இருந்து) நீங்கள் (பாதுகாப்பு பெற்று) நிம்மதி அடைந்தால் தொழுகையை (முறைப்படி முழுமையாக) நிலைநிறுத்துங்கள். நிச்சயமாகத் தொழுகை நம்பிக்கையாளர்கள் மீது நேரம் குறிக்கப்பட்ட கடமையாக இருக்கிறது. info
التفاسير:

external-link copy
104 : 4

وَلَا تَهِنُوْا فِی ابْتِغَآءِ الْقَوْمِ ؕ— اِنْ تَكُوْنُوْا تَاْلَمُوْنَ فَاِنَّهُمْ یَاْلَمُوْنَ كَمَا تَاْلَمُوْنَ ۚ— وَتَرْجُوْنَ مِنَ اللّٰهِ مَا لَا یَرْجُوْنَ ؕ— وَكَانَ اللّٰهُ عَلِیْمًا حَكِیْمًا ۟۠

(எதிரி) கூட்டத்தைத் தேடி செல்வதில் (நீங்கள் சிறிதும்) சோர்வடையாதீர்கள். நீங்கள் (காயத்தினால்) வலியை உணர்பவர்களாக இருந்தால் நீங்கள் வலியை உணர்வது போன்று நிச்சயமாக அவர்களும் வலியை உணர்கிறார்கள். ஆனால், அவர்கள் ஆதரவு வைக்காத (வெற்றி, நற்கூலி, நன்மைகள் அனைத்)தை(யும்) அல்லாஹ்விடம் நீங்கள் ஆசை வைக்கிறீர்கள். அல்லாஹ் நன்கறிந்தவனாக, மகா ஞானவானாக இருக்கிறான். info
التفاسير:

external-link copy
105 : 4

اِنَّاۤ اَنْزَلْنَاۤ اِلَیْكَ الْكِتٰبَ بِالْحَقِّ لِتَحْكُمَ بَیْنَ النَّاسِ بِمَاۤ اَرٰىكَ اللّٰهُ ؕ— وَلَا تَكُنْ لِّلْخَآىِٕنِیْنَ خَصِیْمًا ۟ۙ

(நபியே!) அல்லாஹ் உமக்கு அறிவித்து கொடுத்ததின் மூலம் மக்கள் மத்தியில் நீர் தீர்ப்பளிப்பதற்காக உண்மையுடன் கூடிய இவ்வேதத்தை நிச்சயமாக நாமே உம்மீது இறக்கினோம். நீர் மோசடிக்காரர்களுக்கு வழக்காடுபவராக (-அவர்களுக்கு பரிந்துரைப்பவராக) இருக்காதீர். (அவர்கள் முஸ்லிம்களாக இருந்தாலும் சரி, ஒப்பந்தம் செய்தவராக இருந்தாலும் சரி) info
التفاسير: