ការបកប្រែអត្ថន័យគួរអាន - ការបកប្រែជាភាសាតាមិល - អូម៉ើរ ស្ហើរុីហ្វ

លេខ​ទំព័រ:close

external-link copy
39 : 35

هُوَ الَّذِیْ جَعَلَكُمْ خَلٰٓىِٕفَ فِی الْاَرْضِ ؕ— فَمَنْ كَفَرَ فَعَلَیْهِ كُفْرُهٗ ؕ— وَلَا یَزِیْدُ الْكٰفِرِیْنَ كُفْرُهُمْ عِنْدَ رَبِّهِمْ اِلَّا مَقْتًا ۚ— وَلَا یَزِیْدُ الْكٰفِرِیْنَ كُفْرُهُمْ اِلَّا خَسَارًا ۟

அவன்தான் உங்களை பூமியில் பிரதிநிதிகளாக (ஒரு தலைமுறைக்குப் பின்னர் ஒரு தலைமுறையாக) ஆக்கினான். ஆக, எவர் நிராகரிப்பாரோ அவருடைய நிராகரிப்பு அவருக்குத்தான் தீங்காகும். நிராகரிப்பாளர்களுக்கு அவர்களின் நிராகரிப்பு அவர்களின் இறைவனிடம் கோபத்தைத் தவிர அதிகப்படுத்தாது. இன்னும், நிராகரிப்பாளர்களுக்கு அவர்களின் நிராகரிப்பு நஷ்டத்தைத் தவிர அதிகப்படுத்தாது. info
التفاسير:

external-link copy
40 : 35

قُلْ اَرَءَیْتُمْ شُرَكَآءَكُمُ الَّذِیْنَ تَدْعُوْنَ مِنْ دُوْنِ اللّٰهِ ؕ— اَرُوْنِیْ مَاذَا خَلَقُوْا مِنَ الْاَرْضِ اَمْ لَهُمْ شِرْكٌ فِی السَّمٰوٰتِ ۚ— اَمْ اٰتَیْنٰهُمْ كِتٰبًا فَهُمْ عَلٰی بَیِّنَتٍ مِّنْهُ ۚ— بَلْ اِنْ یَّعِدُ الظّٰلِمُوْنَ بَعْضُهُمْ بَعْضًا اِلَّا غُرُوْرًا ۟

(நபியே!) கூறுவீராக! அல்லாஹ்வை அன்றி நீங்கள் அழைக்கின்ற (-வணங்குகின்ற) உங்கள் (கற்பனை) தெய்வங்களைப் பற்றி எனக்கு அறிவியுங்கள்! பூமியில் அவை எதைப் படைத்தன என்று எனக்குக் காண்பியுங்கள். அல்லது, வானங்களில் (இருக்கும் படைப்புகளில்) அவர்களுக்கு ஏதும் பங்கு உண்டா? அல்லது, (இணைவைத்து வணங்குகின்ற) அவர்களுக்கு நாம் ஒரு வேதத்தைக் கொடுத்து, அவர்கள் அது விஷயத்தில் தெளிவான சான்றின் மீது இருக்கிறார்களா?! மாறாக, அநியாயக்காரர்கள் அவர்களில் சிலர் சிலருக்கு ஏமாற்றத்தைத் தவிர வாக்களிப்பதில்லை. info
التفاسير:

external-link copy
41 : 35

اِنَّ اللّٰهَ یُمْسِكُ السَّمٰوٰتِ وَالْاَرْضَ اَنْ تَزُوْلَا ۚ۬— وَلَىِٕنْ زَالَتَاۤ اِنْ اَمْسَكَهُمَا مِنْ اَحَدٍ مِّنْ بَعْدِهٖ ؕ— اِنَّهٗ كَانَ حَلِیْمًا غَفُوْرًا ۟

நிச்சயமாக அல்லாஹ் வானங்களையும் பூமியையும் அவை இரண்டும் (அவற்றின் இடங்களை விட்டு) நீங்கிவிடாமல் தடுத்து வைத்திருக்கிறான். அவை இரண்டும் நீங்கிவிட்டால் அவனுக்குப் பின்னர் எவர் ஒருவரும் அவ்விரண்டையும் தடுத்து வைக்க முடியாது. நிச்சயமாக அவன் மகா சகிப்பாளனாக, மகா மன்னிப்பாளனாக இருக்கிறான். info
التفاسير:

external-link copy
42 : 35

وَاَقْسَمُوْا بِاللّٰهِ جَهْدَ اَیْمَانِهِمْ لَىِٕنْ جَآءَهُمْ نَذِیْرٌ لَّیَكُوْنُنَّ اَهْدٰی مِنْ اِحْدَی الْاُمَمِ ۚ— فَلَمَّا جَآءَهُمْ نَذِیْرٌ مَّا زَادَهُمْ اِلَّا نُفُوْرَا ۟ۙ

அவர்கள் மிக உறுதியாக அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்தனர்: “அவர்களிடம் ஓர் எச்சரிப்பாளர் வந்தால், சமுதாயங்களில் (நேர்வழிபெற்ற) ஒரு சமுதாயத்தை விட மிக அதிகம் நேர்வழி பெற்றவர்களாக நிச்சயமாக அவர்கள் இருந்திருப்பார்கள்” என்று. ஆக, அவர்களிடம் ஓர் எச்சரிப்பாளர் வந்தபோது அது அவர்களுக்கு (சத்தியத்தை விட்டு) விலகிச் செல்வதைத் தவிர அதிகப்படுத்தவில்லை. info
التفاسير:

external-link copy
43 : 35

١سْتِكْبَارًا فِی الْاَرْضِ وَمَكْرَ السَّیِّئ ؕ— وَلَا یَحِیْقُ الْمَكْرُ السَّیِّئُ اِلَّا بِاَهْلِهٖ ؕ— فَهَلْ یَنْظُرُوْنَ اِلَّا سُنَّتَ الْاَوَّلِیْنَ ۚ— فَلَنْ تَجِدَ لِسُنَّتِ اللّٰهِ تَبْدِیْلًا ۚ۬— وَلَنْ تَجِدَ لِسُنَّتِ اللّٰهِ تَحْوِیْلًا ۟

பூமியில் பெருமையடிப்பதையும் தீய சூழ்ச்சி செய்வதையும் தவிர அதிகப்படுத்தவில்லை. தீய சூழ்ச்சி அதை செய்தவர்களைத் தவிர சூழ்ந்துகொள்ளாது. முன் சென்றோரின் வழிமுறையைத் தவிர (வேறு எதையும்) இவர்கள் எதிர்பார்க்கிறார்களா? ஆக, அல்லாஹ்வின் வழிமுறையில் அறவே மாற்றத்தை நீர் காணமாட்டீர். இன்னும் அல்லாஹ்வின் வழிமுறையில் நீர் எவ்வித திருப்பத்தையும் காணமாட்டீர். info
التفاسير:

external-link copy
44 : 35

اَوَلَمْ یَسِیْرُوْا فِی الْاَرْضِ فَیَنْظُرُوْا كَیْفَ كَانَ عَاقِبَةُ الَّذِیْنَ مِنْ قَبْلِهِمْ وَكَانُوْۤا اَشَدَّ مِنْهُمْ قُوَّةً ؕ— وَمَا كَانَ اللّٰهُ لِیُعْجِزَهٗ مِنْ شَیْءٍ فِی السَّمٰوٰتِ وَلَا فِی الْاَرْضِ ؕ— اِنَّهٗ كَانَ عَلِیْمًا قَدِیْرًا ۟

அவர்கள் பூமியில் பயணிக்க மாட்டார்களா? அப்படிப் பயணித்தால் அவர்களுக்கு முன்னுள்ளவர்களின் முடிவு எப்படி இருந்தது என்று அவர்கள் பார்ப்பார்களே! அ(க்காலத்தில் இருந்த)வர்கள் இ(க்காலத்தில் இருப்ப)வர்களை விட வலிமையால் பலமிக்கவர்களாக இருந்தனர். வானங்களில், பூமியில் உள்ள எதுவும் அல்லாஹ்வை பலவீனப்படுத்தக்கூடியதாக இருக்கவில்லை. நிச்சயமாக அவன் நன்கறிந்தவனாக, பேராற்றலுடையவனாக இருக்கிறான். info
التفاسير: